ஆண் , பெண் இருவருக்குமே 12 வயது வந்து தொடங்கியவுடன் முக பருக்கள் (pimples) வர ஆரம்பிக்கும். நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால் ‘சீபம்’ எனும் எண்ணெய் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது. இந்த எண்ணெய் முகத்தில் உள்ள துளைகள் மூடி சரும துளையை அடைப்பதால் பருவாக மாறுகிறது.
பருக்கள் வர காரணங்கள் ( Causes Of Pimples)
முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்சனை முகப்பரு. பொதுவாக 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் (pimples) ஏற்படும். மேலும், ஜீன் மாற்றத்தால் ஏற்படும் முகப்பருக்கள், ஒரு சிலரின் முகத்துக்குத் தனி அழகைத் தருவதும் உண்டு.
உணவுகள் (Food)
சில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். ஐஸ்கிரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும். பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்க சிறந்த வழியாகும். பாமாயிலில் சமைக்கும் உணவுகள் சரும நோய்களை ஏற்படுத்தும்.
தூசிகள் (Dirt)
மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் எண்ணெய்ப் பசை சருமத்தில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். இதனால் எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால் தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல் உள்ளேயே தங்கிவிடும். இப்படி சீபம் சேர சேர தோலில் வீக்கம் உண்டாகும். இதுதான் பருக்கள். சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்கு வழி வகுக்கும்.
மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த தேனின் ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!
மன அழுத்தம் (Strees)
உடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். அவை முகத்தில் பருக்களை ஏற்படுத்தும். இப்படி ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் உடல்நலப் பிரச்சனைகள் மட்டுமின்றி சரும பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் (Pressure)
கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் ஏற்படும். உயர் இரத்த அழுத்தம் காரணமாக முகத்தில் பருக்கள் உண்டாகும். இவர்கள் வயிறு புடைக்க உண்பதைத் தவிர்த்து எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். முதலில் உண்ட உணவு செரித்த பிறகு அடுத்தவேளை உணவு அருந்துவது நல்லது. நீண்ட பட்டினி கிடப்பதும் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக அமையும்.
போதை மருந்துகள் (Drugs)
போதைப் பொருட்கள் முகப் பருக்களை (pimples) ஏற்படுத்தலாம். முக்கியமாக மதுபானமும், புகைத்தலும் பருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். இதில் உள்ள சில குறிப்பிட்ட கூறுபொருள்களுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை சந்திக்க நேரும். இதனால் உண்டாகும் அலர்ஜியால் முகத்தில் பருக்கள் ஏற்படும். ஆல்ஹகால் நச்சுக்களை தோற்றுவிப்பதால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க – பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !
தொழில்கள் (Occupations)
நாம் செய்யும் வேலைக்கும், நமது சரும ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளது. சிலருக்கு வெயில், தூசி என்று பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கும். அத்தகையவர்களுக்கு பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல ஏசியில் பணிபுரிபவர்கள் சிலருக்கு பருக்கள் தோன்றும். உடலில் தோன்றும் வியர்வை வெளியேற முடியாத நிலையில் அவை பருக்களாக உருமாறுகின்றன.
அழகுசாதன பொருட்கள் (Cosmetics)
அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருட்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். சிலர் ஃபேஷ் வாஷ் அல்லது ஃபேஷ் க்ரீம்மை மாற்றியிருப்பார்கள். அப்படி மாற்றிய க்ரீம்மானது, சருமத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் இருக்கும். அவ்வாறு சருமத்திற்கு பொருத்தமற்றதை பயன்படுத்தினால், அவை பருக்களை உண்டாக்கும். செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து, இயற்கையாக அழகு பொருட்களை பயன்படுத்தலாம்.
பருக்களை எவ்வாறு தடுப்பது (How To Prevent Pimples)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு. தினந்தோறும் சில எளிய முறைகளை பின்பற்றினால் பருக்கள் வராமல் நாம் தடுக்கலாம். அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
முகத்தை சுத்தமாக வைத்திருங்கள் (Keep Your Face Clean)
பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால் தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும். எனவே இத்தகையவர்கள் தினமும் மூன்று முறை ரோஸ்வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுப்பதுடன், மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.
தோல் வகையை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Skin Type)
எண்ணெய் பசையான சருமத்தை கொண்டவர்களின் தோல் பிசிபிசுப்பாக காணப்படும். முகப் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் இந்த சருமத்தில் தோன்ற வாய்ப்ப்புகள் அதிகம். எனவே இதனை தவிர்க்க முதலில் நமது சருமம் எண்ணெய் பசையானது என்பது நமக்கு தெரிய வேண்டும். முகத்தில் கன்னம், நெற்றி மற்றும் மூக்கு பகுதிகள் எப்போதும் பிசுபிசுப்புடன் இருந்தால் அவை எண்ணெய் சருமம். இத்தகைய சருமத்தை கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ய சாலிசிலிக் அமிலம் கொண்ட முகம் கழுவும் சோப்புகளை பயன்படுத்துவது பயனளிக்கும்.
சருமத்தை ஈரப்பதமாக்க வேண்டும் (Moisturize Regular)
முகத்தின் சருமத்திற்கு எப்போதும் கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது, எனவே முகத்திற்கு சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாய்ஸ்சரைசர் சருமத்தை மேலும் புதியதாகவும், மென்மையாகவும், கதிரியக்கமாகவும்ம் ஈரப்பதமாகவும் மாற்றும். மேலும் முன்கூட்டிய வயதிலிருந்து பாதுகாக்கும். ஆரோக்கியமான தோற்றத்தை பெற, அதன் உயிரணுக்களில் போதுமான அளவு இயற்கை ஈரப்பதம் சேமிக்கப்பட வேண்டும். பல்வேறு அழகு சாதன பொருட்கள் குறிப்பாக மாய்ஸ்சரைசர் சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையாக பராமரிக்க உதவுகின்றன.
மேலும் படிக்க – பாத வெடிப்புகள் நீங்க சிம்பிள் டிப்ஸ் : அழகான கால்களுடன் நடைபோட தயாராகுங்கள்!
நீரேற்றமாக இருங்கள் (Stay Hydrated)
வெயில் காலங்களில் அடிக்கடி நீர் அருந்தி உடல் வெப்பத்தைத் தனித்துக் கொள்ளுங்கள். இதனால் உடலில் நீர் ஓட்டம் அதிகரித்து எப்போதும் நீரேற்றமாக காணப்படுவீர்கள். மேலும் உடல் நீரேற்றம் அதிகரித்து குளுமை தக்க வைக்கப்படும். குறிப்பாக நிறைய நீர் மற்றும் திரவ ஆகாரங்களை அடிக்கடி உணவின் போது சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் பாக்டீரியா உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கும்.
எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்(Avoid Oily Foods)
சிலருக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் முகப்பருக்கள் வரக்கூடும். எனவே அத்தகையவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் சர்க்கரை , சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் , பால் வகை உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் குடித்து, பழங்களை எடுத்து வர வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்கவும் (Reduce Strees)
நாள்தோறும் அதிகப்படியான அலுவலகப் பணியில் ஈடுபடும் போது நமக்கு மன அழுத்தம் எளிதில் வாய்ப்புண்டு. இதுபோன்ற சமயங்களில் அதனை தவிர்க்க ஏதேனும் வேலைகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும்.
பருக்களை அகற்ற பயனுள்ள குறிப்புகள் (Useful Tips To Get Rid Of Pimples)
இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் சேர்ந்து அடைபட்டுப் போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம். பரு வலியை ஏற்படுத்துவதுடன் மன துன்பத்தையும் கொடுக்கும். முறையாக பராமரித்தல் பருவை அகற்றிவிடலாம்.
சரும துளைகளை திறக்கவும் (Open The Pores)
பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இதனை தடுக்க முதலில் சருமத்தை துளைகளை திறந்து சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். ஆவி பிடித்து முடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். பருவை அகற்ற என்ன செய்யவேண்டும் என இங்கு காணலாம்.
சருமத்தை சுத்தப்படுத்துதல் (Cleasing skin)
சருமத்தை சுத்தப்படுத்த முகத்தைக் கழுவினால் மட்டும் போதாது, ஒரு கால் கப் காய்ச்சாத பாலில் சிறிது உப்புத் தூள், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனைக் கொண்டு முகத்தைத் துடைத்து பிறகு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். வெளியில் சென்று வந்ததும் கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்துவது அவசியம். பேஷ் வாஷ்ஷும் பயன்படுத்தலாம்.
பாக்டீரியாவை குறைத்தல் (Reducing Bacteria)
நமது உடம்பில் உள்ள பாக்டீரியா தொற்றுகளை குறைத்தால் சரும பாதிப்பில் இருந்து விடுபடலாம். துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை டோனர் போன்று பயன்படுத்தலாம். அல்லது வேப்பிலை பயன்படுத்தலாம். வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியா பண்புகள், சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். வேப்பிலையை, மஞ்சள் தூளுடன் கலந்து முகத்தில் பயன்படுத்தலாம்.
அதிகப்படியான எண்ணெயை அகற்றவும் (Reduce Excess Oil)
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.
சுத்தம் செய்தல் (Clean)
உங்கள் தோலை அழுக்குகளிலிருந்து சுத்தம் செய்வதற்கு டோனர் பயன்படுகிறது. டோனரை உங்கள் முகத்தில் தெளித்து விட்டு மெல்லிய பருத்தி துணியைக் கொண்டு முகத்தை துடைத்து அழுக்குகளை நீக்கலாம். இயற்கையான மூலிகைகளைக் கொண்டு உங்கள் தோலை மசாஜ் செய்தால் எளிதில் சுத்தம் செய்ய முடியும். குளிர்காலத்தில் எண்ணெயை அடிப்படையாக கொண்ட ஃபோம் கிளீன்ஸர்களை தவிர்க்கவும்.
பருக்களை தடுக்கும் வீட்டு பொருட்கள் (Home Remedies For Pimples)
முகப்பரு பிரச்சனைகளை போக்க நிறைய வழிகள் இருந்தாலும் பெரும்பாலனோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் நமது தோல்கள் பாதிக்கப்படும். மேலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்பிருக்கிறது. எனவே இத்தகைய நிலைஏற்படாமல் இருக்க இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ள பொருட்களை கொண்டு எப்படி முகப்பருக்களை போக்கலாம் என்று பார்ப்போம்.
ஐஸ் (Ice)
ஐஸ் கொண்டு முகத்தை மஜாஜ் செய்வதால், இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது. ஐஸ் கட்டியை முகத்தில் தடவுவதால் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசை குறையும். பருக்களின் துளையை குறைப்பதால் அவற்றின் பாதிப்பும் குறைந்து முகப்பருவும் மறையும். அதுமட்டுமல்ல முகப்பருவினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்களையும் ஐஸ் கட்டி குறைக்கும். ஐஸ் கட்டிகளை முகத்தில் பயன்படுத்தும் முன், உங்கள் முகத்தை கழுவி துடைக்க மறக்க வேண்டாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் (Apple Cider Vinegar)
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரில், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி முகத்தை தினமும் 3-4 முறை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, அழுக்குகள் போன்றவை முழுமையாக நீக்கப்பட்டு, முகம் பொலிவோடு பருக்களின்றி காணப்படும்.
எலுமிச்சை சாறு (Lemon Juice)
எலுமிச்சை பழம் பாக்டீரியாக்களுடன் போராடி பருக்களை அழிக்கும் சக்தி பெற்றது. எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன் முகப்பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு குறையும். எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு மறைந்துவிடும்.
பூண்டு (Garlic)
பூண்டில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால் கிருமிகளை அழிக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, அழகிற்கும் பயன்படுத்தலாம். வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். பூண்டில் இருக்கும் யோகார்டில் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகப்பருவை மறைய செய்யும்.
முட்டை வெள்ளை கரு (Egg White)
உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பின்னர் கருவேப்பிலையுடன் மஞ்சளை அரைத்து, அதனுடன் முட்டை வெள்ளை கருவை கலந்து முகத்தில் தேய்த்து விடவும். பின்னர் அரைமணி நேரம் கழித்து கடலை மாவு வைத்து கழுவினால் முகப்பரு நீங்கும். முகமும் பளப்பாக காணப்படும்.
தேன் (Honey)
மிகச்சிறந்த கிருமி நாசினிகளான தேனும், புதினாவும் பருக்களைப் போக்கி முகத்திற்கு ஒரு மாயாஜால பொலிவைத் தருகிறது. புதினா மற்றும் தேன் கலந்து பசை ஆக்கி பருக்களில் தடவவும். இந்தக் கலவை பருக்களை குறைப்பது மட்டுமின்றி ஈரப்பதம் கொடுத்து வறண்ட சருமத்தில் ஈரப்பதம் இழக்காமல் இருக்க செய்கிறது. தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து ஊற வைத்த பின்னர் பால் கொண்டு முதலில் கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
சமையல் சோடா (Backing Soda)
சமையல் சோடாவில் உள்ள காரத்தன்மை நமது சருமத்தில் உண்டாகும் அமில-காரத் தன்மையை சமன் செய்யும். அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் உண்டாகும் பருக்கள் முக அழகினை கெடுக்கும். முக்கியமாக பருக்களால் உண்டாகும் தழும்பு எளிதில் போகாது. அவ்வாறு இருந்தால் சோடா உப்பை 2 வாரம் பயன்படுத்தினால் போதும். முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். அதன் தழும்புகளும் காணாமல் போய் விடும். சருமத்தில் உண்டாகும் அரிப்பு, எரிச்சலை சோடா உப்பு குணப்படுத்துகிறது.
உருளைக்கிழங்கு (Potato)
உருளைக்கிழங்கில் மினரல், வைட்டமின், அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை உள்ளன. உருளைக்கிழங்கில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் சருமத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் கிருமிகளும், பக்டீரியாக்களும் அழிக்கப்படுகின்றன. முல்தானி மிட்டி மற்றும் உருளைக்கிழங்கு கலவை சருமத்தில் தடவி வந்தால் படிப்படியாக பருக்கள் மட்டுமின்றி அதனால் உண்டான புள்ளிகள், தழும்புகள் மற்றும் கட்டிகளைப் போக்க உதவுகின்றன.
ட்ரீ டீ ஆயில் (Tree Tea Oil)
ட்ரீ டீ ஆயில் எல்லாவகை சருமத்திற்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்படுகிறது. முகப்பரு, கொப்புளம் போன்றவற்றை உண்டாக்கும் கிறுமிகளை அழிக்கும் தன்மை இதற்கு உண்டு. சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் ட்ரீ டீ ஆயிலை பரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால் பருக்கள் எளிதில் மறையும். முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
கற்றாழை (Aloe Vera)
கற்றாழையில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையை கொடுப்பதோடு பாக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது. மேலும் இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கிரீன் டீ (Green Tea)
கிரீன் டீ நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, அழகை பாதுகாக்கவும் பலவகையில் உதவுகின்றது. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் முகத்திற்கு கிரீம் உடன் 2% மட்டும் கிரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால் பருக்கள் குறைவதை பார்க்கலாம். தொடர்ந்து 8 வாரங்களுக்கு கிரீன் டீயை முகத்தில் பூசினால், முகத்தின் எண்ணெய் பசையானது குறையும். மேலும் புற ஊதாக் கதிர்களினால் ஏற்படும் பாதிப்புகளான சரும் எரிச்சல், கருமை, குழிகள் ஆகியவற்றை சரி செய்யலாம்.
தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
தேங்காய் எண்ணெய்யில் உள்ள ஃபேட்டி ஆசிட் மற்றும் கிருமி நீக்கி பாதிப்பு நிறைந்த இறந்த செல்களை நீக்கி தூய்மையாக்கும்.தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொண்டு கலக்கவும். பின் பருக்கள் உள்ள இடத்தில் தடவி 5 – 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் பருக்கள் நீங்கும். தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்தால் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
மஞ்சள் தூள் (Turmeric Powder)
மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது. முகப்பருவினால் பாதிக்கப்பட்டால் சந்தன பொடியுடன், ம்ஞ்சள் தூள் சேர்த்து பசையாக்கி முகத்தில் தடை காய்ந்ததும் கழுவினால் பருக்கள் மறையும். மஞ்சள் தூள், கடுகு எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் அலசினால் பருக்கள் முற்றிலுமாக மறையும். கஸ்தூரி மஞ்சளை, ரோஸ் வாட்டரில் குழைத்து பரு உள்ள இடத்தில் மட்டும் தடவி மறுநாள் கழுவு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
FAQ’s
பருக்களை நீக்க சிறந்த சிகிச்சை எது? (What is the best treatment for pimples?)
பருக்களின் மேல் பூசப்படும் களிம்புகளும், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களை குணப்படுத்திவிடும். இன்றைய மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தத் தழும்புகளை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாபரேஷன் (Dermabrasion), கொலாஜென் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிகான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் வந்துவிட்டன. இவற்றை பயன்படுத்தி பருக்களை நீக்கி முகப்பொலிவை மீட்கலாம்.
பருக்களை கட்டுப்படுத்த வழிகள் என்ன? (What a way to control acne)
பருக்களை விரல்களால் தொடுவது, கிள்ளுவதை முதலில் கைவிடுங்கள். பருக்களிலிருந்து வெள்ளை நிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களை கிள்ளாதீர்கள். நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், எண்ணெய் பலகாரம் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். இந்த வழிமுறைகளால் முகப்பருக்கள் வருடக் கணக்கில் நீடிப்பதை கட்டுப்படுத்தலாம்.
நெற்றியில் பருக்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம்? (What causes pimples on your forehead?)
நெற்றியில் ஏற்படும் பருக்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பொடுகு. தலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிடும். அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும். ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து பயம் ஏற்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.