ரக்ஷா பந்தனுக்கு சகோதரி மற்றும் சகோதரனுக்கு சிறந்த பரிசுகளை தேர்வு செய்ய சில குறிப்புகள்!

ரக்ஷா பந்தனுக்கு சகோதரி மற்றும் சகோதரனுக்கு சிறந்த பரிசுகளை தேர்வு செய்ய சில குறிப்புகள்!

வரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ரக்ஷா பந்தன் (raksha bandhan) கொண்டாடப் பட உள்ளது. தீபாவளி, புது வருடம் போன்று, இந்த பண்டிகையும் பெரும் அளவு வட இந்தியர்களால் எதிர்பார்ப்புகளுடன் கொண்டாடப்படுகின்றது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால். இந்த பண்டிகை அன்று ஒவ்வொரு சகோதரிகளும், தங்கள் சகோதரன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றும், நல்ல ஆரோகியதோடு இருக்க வேண்டும் என்றும் வேண்டி அவர்கள் கையில் ரக்ஷயை கட்டுவார்கள். மேலும் சில பரிசுகளையும் தருவார்கள். அதே நேரத்தில், தங்கள் சகோதரியை மகிழ்ச்சி படுத்தும்  வகையிலும், அவரை வாழ்த்தும் வகையிலும், சகோதரர்கள் சகோதரிக்கு பரிசுகளை தருவார்கள்.

ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள் : அன்பானவர்களுக்கு நீங்களும் சொல்லலாம்!

இந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சி ஊட்டும் தருணமாகவும், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணமாகவும் இருக்கும்.

அப்படி நீங்கள் உங்கள் சகோதரி அல்லது சகோதரனுக்கு ஒரு நல்ல பரிசை தேர்வு செய்ய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருகின்றீர்கள் என்றால், இங்கே, உங்களுக்காக சில யோசனைகள்;

pixabay

எப்படி சரியான பரிசை தேர்வு செய்வது?

உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு ரக்ஷா பந்தன் (raksha bandhan) பரிசை வாங்க முயற்சி செய்து கொண்டிருகின்றீர்கள் என்றால், எந்த மாதிரியான பொருளை தேர்வு செய்வது மற்றும் எப்படி தேர்வு செய்வது என்று பல குழப்பங்கள் உங்களுக்குள் இருக்கும். உங்களுக்கு சரியான பொருளை தேர்வு செய்து எடுக்க, இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்;

1. பிடித்த பொருள்: எப்போதும் ஒரு பரிசு பொருளை நீங்கள் தேர்வு செய்யும் போது, அது நீங்கள் கொடுக்கபோகிரவருக்கு பிடிக்குமா என்று தெரிந்து கொண்டு பின்னர் வாங்குவது நல்லது. ஏதாவது ஒரு விதத்தில் உங்களிடம் என்றாவது அவர் தனக்கு பிடித்த சில விடயங்களை பற்றி பகிரிந்திருக்கலாம். அதனை நினைவு படுத்தி, உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

2. பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும்: உங்கள் பட்ஜெட் என்னவென்று பாருங்கள். நீங்கள் கடைக்கு பரிசு பொருளை வாங்க செல்லும் முன், எவ்வளவு விலையில் வாங்கப் போகின்றீர்கள் என்பதை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு ஒரு நல்ல பரிசு பொருளை தேர்வு செய்வது நல்லது. இது ஏமாற்றத்தை தராது.

3. தரமான பொருள்: எப்போதும் நல்ல தரமான பரிசு பொருளை தருவது முக்கியம். அப்படித் தந்தாள் மட்டுமே அந்த பரிசு பொருள் நன்கு உழைக்கும், மேலும் அவரது தேவையை அல்லது பயன்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.

pixabay

4. தேவையான பொருள்: நீங்கள் பரிசு பொருளை வாங்க செல்லும் முன், அந்த பொருள் அவருக்கு தேவைப்படுமா என்பதை தெரிந்து கொள்வது நல்லது. அப்படி தேவைப்படும் பொருளை பரிசளிப்பது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக மட்டுமல்லாது, அவர்களுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.  

5. முக்கியத்துவம் உள்ள பொருள்: ஏதோ ஒரு பரிசு பொருளை தேர்வு செய்வதை விட, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளை தேர்வு செய்வது நல்லது. அது அவருக்கு ஒரு நல்ல நினைவாக மட்டும் இல்லாமல், நிச்சயம் அவருக்கு அது உதவும் வகையிலும் இருக்கும். அதனால் ஒரு நல்ல சிறந்த பரிசு பொருளை தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.

6. ஒப்பிட்டு பார்த்து வாங்கவும்: எப்போதும் ஒரு பொருளை வாங்கும் போது பிற நிறுவனம் மற்றும் அதன் பயன்பாடுகள் என்று சில விடயங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். இப்படி செய்யவில்லை என்றால், நீங்கள் அதிக விலை கொடுத்தோ அல்லது தரம் குறைந்த ஒரு பொருளையோ வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதனால் உங்கள் முயற்சிகள் வீணாகலாம்.

ரக்ஷா பந்தனுக்கு கொடுக்க சில சுவாரசியமான பரிசுகள்!

7. நீண்ட காலம் பயன்படும் பொருள்: நீங்கள் தேர்வு செய்யும் பொருள், உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு பல நாட்கள் பயன் தரக்கூடியதாகவும், நீண்டு உழைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இது இருவருக்கும் மகிழ்ச்சியையும் தரும்.  

pixabay

8. இணையதளத்தில் வாங்கலாம்: இன்று பல இணையதளக் கடைகளில் எண்ணற்ற பரிசு பொருட்கள் கிடைகின்றன. மேலும் இங்கே நீங்கள் கடைகளில் விற்கப்படும் விலைகளை விட சற்று குறைவான விலைக்கோ அல்லது சில சலுகைகளுடனோ வாங்கலாம்.  ஒரு நல்ல பரிசு பொருளை தேர்வு செய்யவும் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதனால் நீங்கள் இணையதள கடைகளுக்கு சென்று உங்கள் சகோதரி அல்லது சகோதரனுக்கு பிடித்த மற்றும் பயன் தரக்கூடிய வகையில் பரிசுகள் உள்ளதா என்று பார்த்து வாங்கலாம்.

9. தள்ளுபடி விலைகளில் மற்றும் சலுகைகள்: பண்டிகை காலங்களில் பொதுவாக தள்ளுபடி விலைகளில் பொருட்கள் விற்கப்படும். மேலும் அவை நல்ல சலுகைகளிலும் கிடைக்கும். அதனால் ஒரு நல்ல கடையை தேர்வு செய்து நீங்கள் தள்ளுபடி விலையில் வாங்க முயற்சி செய்யலாம். எனினும், அப்படி வாங்கும் பொருள் தரம் உள்ளதாக இருகின்றதா என்று பார்க்க வேண்டும். 

10. நல்ல ஞாபங்கங்களை உண்டாக்க வேண்டும்: நீங்கள் தரும் பரிசு பொருள் உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு நல்ல ஞாபங்களை காலம் முழுவதும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு நீங்கள் பரிசு தந்த அந்த இனிய தருணம் ஞாபகத்திற்கு வர வேண்டும். இது நிச்சயம் நெகிழ்ச்சி ஊட்டும் ஒரு தருணமாகவும் இருக்கும்.

ஆடி மாதம் - ஆடியில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 8 முக்கிய நாட்களும் அதன் சிறப்புகளும்!

pixabay

இன்று இணையதள கடைகள் நீங்கள் வாங்கும் பொருட்களை உரிய நேரத்தில் அல்லது நீங்கள் தேர்வு செய்யும் நேரத்தில், கொடுக்கும் விலாசத்திற்கு அனுப்பி வைத்து விடும். இது உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு பண்டிகை நாளன்று ஒரு ஆச்சரியம் தரக்கூடிய விடயமாகவும் அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.