கண்ணில் பார்வை கோளாறு இருப்பவர்களுக்கு கண்ணாடிகள் உள்ளன. அவரவர் பிரச்சனைகளுக்கு ஏற்ப கண்ணாடிகள் மாறுபடும். நாளுக்கு நாள் பார்வை குறைபாடுகள் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 வருடங்களாகவே பள்ளிக்குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் பார்வை குறைபாட்டை பெற்றோர் புரிந்து கொள்வதற்குள் குறைபாடு அதிகரித்துவிடுகிறது. இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
கண்ணாடி அணிவது சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். கண்ணாடியை மிக கவனமாக பாதுகாக்கவும் வேண்டும். இதனை அணிவதால் மூக்கின் மேல்பகுதியிலும், முகத்திலும் தழும்பும் உருவாகலாம். சிலர் முக்கியமான வேலைக்கு செல்லும்போது கண்ணாடியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டு சென்று, அவஸ்தைபடுவதும் உண்டு. இதற்கு மாற்றாக நவீன உலகில் வந்தது தான் கான்டாக்ட் லென்ஸ் (contact lenses). பார்வைக் கோளாறை சரிப்படுத்துவதற்காக கான்டாக்ட் லென்ஸ் தயாரிக்கப்பட்டது.
சருமத்தில் பருக்கள் வர காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் குணப்படுத்தும் வழிமுறைகள்!
pixabay
பார்வைக் குறைபாட்டுக்காக ஆரம்பத்தில் பயன்படுத்தி வந்தாலும், தற்போது பேஷனுக்காகவும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்கின்றனர். இப்போது பெண்கள் உடைக்கு தக்கபடி கலர்கலரான காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகளை (contact lenses) பொருத்தி கொள்கிறார்கள். பல வண்ணங்களில் லென்சுகள் கிடைக்கின்றன. கண்ணாடிக்குப் பதிலாக கண்ணின் மேல்புறத்தில் பொருத்தப் படும் ஒரு மெல்லிய சாதனம் `கான்டாக்ட் லென்ஸ்’ எனப்படுகி றது. இந்த கான்டாக்ட் லென்ஸ் ஒரு குறிப்பிட்ட வகை பாலிமர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதை எளிதாக கண்ணில் பொருத்தவும், அகற்றவும் இயலும்.
கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிக துல்லியமான பக்கவாட்டு பார்வையை பெறலாம். ஒருவர் மிக அதிகமான `பவர்’ கொண்ட கண்ணாடி அணியும்போது கண்ணாடி மிக தடினமாகவும், பார்வை தெளிவு இல்லாமலும் இருக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தால் பார்வை துல்லியமாகும். கண்களின் அழகை மேம்படுத்த காஸ்மெட்டிக் `கான்டாக்ட் லென்ஸ்’ பயன்படுகிறது. கண்களின் தோற்றத்தை சீரமைக்க பிராஸ்தெட்டிக் (prosthetic) கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம். காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்கு தகுந்த நிறத்துக்கு ஏற்றபடி அவைகளை தேர்வு செய்யலாம்.
எகிப்தியர்களின் அழகு ரகசியம் – உங்களையும் மெருகேற்றட்டும் !
pixabay
முன்னெச்சரிக்கைகள்
- கண்களுக்குள் ஆக்ஸிஜனை செல்லவிடாமல் லென்ஸ்கள் தடுக்கின்றன. இதனால் கான்டாக்ட் லென்சை (contact lenses) தொடர்ந்து பயன்படுத்துவது கண்களுக்கு நல்லதல்ல.
- குறைந்த விலையில் கிடைக்கும் போலியான லென்ஸ்கள், தரமற்ற தயாரிப்புகள் போன்றவற்றால் கண்கள் விரைவில் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் கவனம் தேவை.
- கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது மீண்டும் மீண்டும் கழற்றி அணிவதால் விழிவெண் படலம் பாதிக்கப்படலாம்.
- கான்டாக்ட் லென்களின் தரம் மற்றும் அவற்றை பயன்படுத்தும் விதம் சரியாக இல்லாதபோது அவை நீண்டகாலப் பாதிப்புகளையும் ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
பராமரிக்கும் முறைகள்
- கான்டாக்ட் லென்ஸ்களை அணிவதற்கும் அகற்றுவ தற்கும் சரியான வழிகளை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் அவற்றை பயன்படுத்த வேண்டும்.
- கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் முன்பும், கண்களிலிருந்து அவற்றை அகற்றும் முன்பும் கைகளை சுத்தமாகக் கழுவி கொள்ள வேண்டும்.
- கான்டாக்ட் லென்ஸ்களுடன் வழங்கப்பட்ட திரவத்தை அதற்கான குப்பியில் ஊற்றி, அதில் கான்டாக்ட் லென்ஸ்கள் மூழ்க வைத்து தினமும் இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும்.
- கான்டாக்ட் லென்ஸ்களைப் பாதுகாக்கும் குப்பியையும் அதைப் பாதுகாக்கும் திரவத்தையும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ரம்புட்டான் பழங்கள் சீசன் தொடங்கியது!
pixabay
செய்யக்கூடாதவை
- கான்டாக்ட் லென்ஸின் வட்ட அமைப்பில் விரலை வைத்து எடுக்கக்கூடாது.
- கான்டாக்ட் லென்ஸை அணிந்துகொண்டிருக் கும்போது குளிப்பது, முகம் கழுவுவது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது.
- கான்டாக்ட் லென்ஸ்களை நேரடியாக சூரியஒளியில் வைக்கக்கூடாது. அதுபோல் குளிர்சாதனப் பெட்டியிலும் அவற்றை வைக்கக்கூடாது.
- கான்டாக்ட் லென்ஸ்களை அணிந்தி ருக்கும்போது, அவற்றின்மீது எவ்வித கண் சொட்டுமருந்து களையும் மருத்துவர் ஆலோசனையின்றி ஊற்றக்கூடாது.
தரமான கான்டாக்ட் லென்ஸ்களை கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று வாங்கி அணிய வேண்டும். சரியான முறைப்படி அவற்றைப் பராமரிக்கவும், பயன்படுத்தவும் செய்தால் அவ்வித பிரச்னைகளும் ஏற்படாது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.