உங்கள் நேரத்தை மிச்சமாக்கும் சிம்பிள் ஹேர் ஸ்டைல்ஸ் மற்றும் டிப்ஸ்கள்!

உங்கள் நேரத்தை மிச்சமாக்கும் சிம்பிள் ஹேர் ஸ்டைல்ஸ் மற்றும் டிப்ஸ்கள்!

காலேஜ் பெண்களின் டிரெண்டி ஹேர் ஸ்டைல்ஸ் (hair) நாளுக்கு நாள் மாறி வருகிறது. 70 மற்றும் 80 களின் காலகட்டத்தில் தலைமுடி அலங்காரங்கள் டாப்பில் இருந்தன. அதன் பிறகான கால மாற்றத்தால் தலை வாறுவது என்பதே பழைய ஸ்டைலாகிப்போனது. எளிதான ஹேர் ஸ்டைல்கள் குறித்து இங்கே காணலாம். 

எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

போனிடைல்

குதிரைவால்/ போனிடைல் ஒரு ஈஸியான ஹேர் ஸ்டைல் ஆகும். நாம் வேகமாக கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டால் போனிடைல் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் நமது அனைத்து முடியையும் ஒன்று சேர்த்து போனிடைல் போடுவது எளிதான ஒன்றாகும். போனிடைல் போடும் போது சற்று தூக்கி போட்டால் ஸ்டைலாக இருக்கும். போனிடைல் (Ponytail) போடும்போது அல்லது கொண்டை போடும்போதோ, முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம். மேலும் எப்போதும் பின்புறம் நோக்கி தலையை சீவ வேண்டாம். இதனால் மயிர்கால்கள் வலுவிழந்து, பின் நாளடைவில் தலையின் முன்புறம் வழுக்கை ஏற்பட்டுவிடும்.

pixabay

கதம்ப ஜடை பின்னல்

கதம்ப ஜடை நேர் வகிடு எடுத்து முன் பகுதியை சரி செய்து உச்சியில் முடி எடுத்து பில்லை செட் செய்யவும் பில்லை சுற்றி பல வண்ண மலர் சுற்றி வைத்து கதம்ப இணைப்பை வைக்கவும். இதுபோன்ற ஸ்டைல்களில் கூந்தல் அலங்காரம் செய்து போனால் அங்கு அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும் என்பதில் சந்தேகமில்லை. பல வண்ண மலர் ரெடிமேடாக கிடைப்பதால் அவற்றை வாங்கி பொருத்தி கொள்ள அதிக நேரம் எடுக்காது. திருமணம் போன்ற விழாக்களுக்கு இந்த ஜடை பொருத்தமாக இருக்கும்.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் 10 ஸ்டைலான தனித்துவமிக்க ஸ்லிங் பைகள்!

நகை கொண்டை ஜடை

கூந்தலின் நடுப்பகுதியில் பப் வைக்கவும். பிறகு போனிடைல் போடவும். கூந்தலை இரண்டு பகுதியாக பிரிக்கவும். முதல் பகுதியில் சுருள் போடவும் மீதியுள்ள பகுதியில் பின்னல் போட்டு குஞ்சலம் வைக்கவும். விருப்பத்திற்கு ஏற்ப கோழி கொண்டை, மல்லிகைப்பூ, நகை வைத்து அலங்கரிக்கவும்.

 

youtube

வாட்டர் ஃபால் பிரைட்

இந்த வகை பிரைட் மேல் பகுதியில் மட்டும் பின்னிக் கொண்டு, கீழ் பகுதி முடிகளை விட்டுவிட வேண்டும். அதை அவரவர் விருப்பங்களுக்கு ஏற்றார் போல் சுருள் செய்தும் அல்லது ஸ்ட்ரெய்ட்னிங் செய்வது என செய்து கொள்ளலாம். கவுன் வகை உடைகளுக்கு ஏற்ற ஸ்டைல். லேஸ் பிரைட், ஷூ லேஸ் கட்டுவது போன்று பின்னப்படுகிறது. முன் பக்கமாக மூன்று அல்லது நான்கு முடியைக் கொண்டு பின்னப்படுகிறது. லெஹங்கா, கவுன் போன்ற உடைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

கூந்தலை பராமரிக்கும் விதத்தில் நீங்கள் செய்யும் தவறுகள்

ஐந்துகால் பின்னல்

முதலில் பிரன்ச் பிளாட் போட்டு (hair) கொண்டு அதன் பிறகு மீதியுள்ள முடியை ஐந்து பகுதியாக பிரித்து முதல் மூன்று கால்களில் சாதாரணமாக போடவும். பிறகு இரண்டு பகுதியை எடுத்து இணைக்கவும். அதன் பின்னர் பூக்கள் வைத்து பீட் வைத்து அலங்கரிக்கவும். முடி அடர்த்தியாக இருப்பவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பொருத்தமாக இருக்கும்.

pixabay

டிப்ஸ்

 • விசேஷங்கள் அல்லது பார்ட்டிக்கு செல்கிறீர்கள் என்றதால் அதற்கு முன் தினமே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள். இதனால் கிளம்பும் போது எளிதாக இருக்கும். 
 • ஃபெதர் கட் (hair) செய்துகொண்டால் எப்போதும் ஃப்ரெஷ் லுக்கில் டிரண்ட்லியாகத் தெரியலாம்.
 • முடியின் அமைப்பை மாற்ற வேண்டாம் என நினைப்பவர்கள், மாதம் ஒருமுறை முடியை டிரிம் செய்துகொள்ளலாம்.
 • ஹேர்ஸ்டைலுக்கு என உள்ள ஆப்ஸை டவுன்லோடு செய்து, உங்கள் போட்டோவைப் பதிவிடுங்கள். அதில்வரும் ஹேர் கட் வகைகளில் உங்கள் முகத்துக்குப் பொருந்துவதைப் பார்த்து அதன்பின் ஹேர்கட் செய்துகொள்ளலாம். 
 •  ஃப்ரின்ச் கட் போன்ற ஹேர்ஸ்டைல்களை தேர்வுசெய்பவர்கள் ரெகுலராக அதைப் பராமரிப்பது அவசியம் அப்போதுதான் நீட் லுக் இருக்கும்.
 •  ஹேர்கட் செய்துகொள்வதற்கு முன்பு உங்கள் பணி மற்றும் வயதையும் கருத்தில்கொண்டு தேர்வுசெய்வது அவசியம். ஹேர் கட் செய்வது உங்களது விருப்பத்திற்கு மட்டுமின்றி நீங்கள் இருக்கும் இடத்தையும் பொறுத்தது. 
 • ஹார்டின் வடிவ முக அமைப்பு உடையவர்கள் ஃப்ரின்ஜ் கட் ( fringe cut), ஃப்ரென்ட் பேங்ஸ் ( front bangs) எனப்படும் நெற்றியின் மீது முடி படுவது போன்ற ஹேர்கட் பொருத்தமாக இருக்கும்
pixabay

 • நீள் வடிவ முகம் உடையவர்கள் முடியை லூஸ்ஹேர் விடாமல், நடு வகிடு எடுத்து முடியை இழுத்துப் பின்னலிட்டால், முகம் எடுப்பாகத் தெரியும். 
 • முக்கோண வடிவ முகம் . இத்தகையவர்கள் முடியை முன்னால் வெட்டிக்கொள்வது பொருந்தாது. `யூ' கட் அல்லது `வி' கட் செய்து, ஹை பொனிடை போட்டுக்கொண்டால், டிரண்ட்லி லுக் பெறலாம்.
 • நீள் வட்ட வடிவ முகம் உடையவர்கள் அதிர்ஷடசாலிகள் என்றே சொல்லலாம். இவர்கள் எல்லா வகையான ஹேர் கட்டையும் முயன்று பார்க்கலாம். எந்த விதமான முடி அமைப்பிலும் நீள் வடிவ முகம் அழகாக இருக்கும்.
 • சதுரவடிவ அமைப்பை கொண்டவர்களுக்கு `யூ' கட் பொருத்தமாக இருக்கும். அல்லது ஸ்கோயர் கட் முறையை முயன்று பார்க்கலாம்.
 • வட்ட முகம் உடையவர்களுக்கு லேயர் கட் சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றை தெரிந்து கொண்டு ஹர் கட் செய்வதால் நீங்கள் அழகாக இருப்பிர்கள். 
 • நீங்கள் என்ன ஹேர் ஸ்டைல் செய்ய போறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள். வெளியே கிளம்பும் சமயத்தில் புதிய ஹேர் ஸ்டைலை முயற்சிக்க வேண்டாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.