25 வயதிலேயே இந்திய அரசியலில் உச்சம் தொட்ட சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் .. போய் வாருங்கள்!

25 வயதிலேயே இந்திய அரசியலில் உச்சம் தொட்ட சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் .. போய் வாருங்கள்!

25 வயதிலேயே அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த பாஜகவின் மூத்த பெண் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

1953ம் ஆண்டு ஹரியானவில் பிறந்த சுஷ்மா ஸ்வராஜ் (susma swaraj) ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தை சேர்ந்தவர். சுஷ்மாவின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் இருந்து பிரிவினையின் போது இந்தியா வந்தனர். இவர் சமஸ்கிருதம் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்று உள்ளார். அதேபோல் இவர் சட்டமும் பயின்றுள்ளார். 1973ல் உச்ச நீதிமன்றத்தில் சுஷ்மா வழக்கறிஞராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ் கௌஷலை 1975ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுஷ்மா ஸ்வராஜ் திருணம் செய்தார்.

அரசியல் வருகை

 • 1970ல் மாணவர் தலைவராக இருந்தார் சுஷ்மா ஸ்வராஜ் அப்போதைய இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய இவர், ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அவசர காலத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
 •  1978-1990 வரை அம்மாநிலத்தில் சுஷ்மா கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதன்பின் 1998ல் இருந்து டெல்லியின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார். இந்திய அரசியல் மீது அவருக்கு இருந்த ஆர்வம் அவரை டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக்கியது.

என் மனைவி ஆசையை நிறைவேற்றிட்டேன்.. அஜித் இன்றி இது சாத்தியமில்லை : நெகிழ்ந்த போனி கபூர்!

 •  ஆனால் உடனே அவர் அந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்கு வந்தார். தேசிய அளவிலான கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா என்ற பெருமையை பெற்றார்.
 •  பின்னர் சுஷ்மா ஸ்வராஜ் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். தனது 27 வயதிலேயே ஹரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.
 •  2014 முதல் 2019 வரையிலான பாஜக ஆட்சியின் போது வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மா.
 •  2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை அவர் பெற்றார். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மாவின் செல்யல்பாடுகள் சில...

 • ஈரானில் மாட்டிக்கொண்ட 168 இந்தியர்களை தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் விரைந்து மீட்டார்.
 • விதிகளை தளர்த்தி பாகிஸ்தான் சிறுமிக்கு ஒரு ஆண்டு விசா கொடுத்து இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழி செய்தார்.
 • காது கேளாத வாய் பேசாத இந்திய பெண் கீதாவை பாகிஸ்தானில் இருந்து மீட்டார்.
 • தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை அரசு பிடியில் இருந்து சட்ட விதிகள் மூலம் விடுவித்தார்.
 • குறிப்பாக 2003ம் ஆண்டு கேரளாவுக்கு சென்றிருந்த சுஷ்மா சுவராஜ், அங்கே ஹெச்ஐவி.,யினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவரை கட்டியணைத்து எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார். இப்பட்ட ஒரு தலைவரின் மறைவு பாஜகவுக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கே ஒரு பேரிழப்புதான்.

ஸ்மார்ட் போன்களிடம் இருந்து உங்கள் இளம் வயது மகன்/மகளை பாதுகாப்பாக விலக்கி வைப்பது எப்படி?

சுஷ்மா உடல் நலக்குறைவு

சுஷ்மா ஸ்வராஜ் (susma swaraj) சிறுநீரக பிரச்சனை தொடர்பாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சகராக இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீர் மாரடைப்பால் தனது 67வது வயதில் உயிரிழந்தார்.

சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் தலைவர்களில் ஒருவர் சுஷ்மா. உதவி வேண்டும் என ஒரு டிவிட் போட்டால் போதும் அது மிகவும் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பாராபட்சம் பார்க்காமல் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பதாகட்டும், சட்ட வழியில் நடவடிக்கை எடுத்தார். சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்த நிலையில், அவரிடம் உதவி பெற்ற இந்தியர்கள் பலரும் ட்விட்டரில் அவரது இழப்பிற்காக வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

முறையான அலுவலக மற்றும் தொழில்முறை ஆடைகளை எப்படி தேர்ந்தெடுப்பது?

கடைசி ட்வீட்

சுஷ்மா சுவராஜ் கடைசியாக வெளியிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. டுவிட்டர் மூலமாகவே பல்வேறு பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்த சுஷ்மா சுவராஜ், அவரது டுவிட்டர் தளத்தில் கடைசியாக செய்த பதிவு என்ன தெரியுமா? "நன்றி பிரதமர் மோடி அவர்களே. மிகவும் நன்றி. எனது வாழ்க்கையில் இந்த நாளைத்தான் பார்ப்பதற்கு காத்துக்கொண்டு இருந்தேன்" என்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதாகவும் அறிவித்தது. இதை பார்க்கத்தான் வாழ்நாள் முழுக்க காத்திருந்ததாக உணர்ச்சி பொங்க சுஷ்மா தெரிவித்திருந்தார். ஆனால் வாழ்நாள் முழுக்க காத்திருந்த ஒரு விஷயத்தை பார்த்த மறு நாளே, அவர் தனது வாழ்நாளை முடித்துக் கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது தான் சோகம். 

தலைவர்கள் அஞ்சலி

மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி துணைநிலை ஆளுநர் அஜில் பைஜால். யோகாகுரு தேவ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.