ஆரோக்கியமான உணவு முறைகளால் சருமத்தின் காவலன் கொலாஜனை அதிகரிக்கும் வழிமுறைகள்!

ஆரோக்கியமான உணவு முறைகளால் சருமத்தின் காவலன் கொலாஜனை அதிகரிக்கும்  வழிமுறைகள்!

நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே கொலாஜன் (collagen) என்றழைக்கப்படுகிறது. இந்த புரதச்சத்து சருமங்களில் அதிகமாக இருக்கும். ஒருவருடைய சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணமாக உள்ளது. இது சருமங்களில் மட்டுமல்லாமல் எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதையிலும் உற்பத்தியாகிறது. கொலாஜன் உடலுக்கு  அவசியமாகிறது என்றாலும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. நமது அன்றாட உணவுமுறைகள் மூலம் நமது உடலில் கொலாஜன் உற்பத்தியை நம்மால் அதிகரிக்க முடியும். 

pixabay

காய்கள் : பச்சைக் காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், தக்காளி, பூண்டு போன்றவை கொலாஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. 

முட்டைக்கோஸ் : வைட்டமின்கள் ஏ ,சி, ஈ, ஆகியன அடங்கியுள்ள முட்டைக்கோஸில் அதிக வைட்டமின் சி காணப்படுகிறது. சேதமடைந்த செல்களையும், திசுக்களையும் சரி செய்யவும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் நாம் உடலுக்கு தேவைப்படும் அதிகப்படியான வைட்டமின் சியை நாம் முட்டைக்கோஸ் மூலமாக பெறலாம்.  

சிட்ரஸ் பழங்கள் : வைட்டமின் சி மிகுந்துள்ள சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, கொய்யா போன்ற பழ வகைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போதும் கொலாஜன் (collagen) உற்பத்தி தூண்டப்படும். இதனை அன்றாடம் உணவு இடைவேளையில் அல்லது ஜூஸ் செய்து அருந்தினால் சருமம் பொழிவு பெறும். 

மணப்பெண் ஆகப் போகிறீர்களா! தேர்ந்தெடுங்கள் உங்களுக்கான சிறந்த மணப்பெண் அலங்கார பார்லரை!

pixabay

கேரட் : கேரட்டில் கரோட்டினாய்டு நிறைந்துள்ளது. இது தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிடமிருந்து நம்மை காக்கிறது. நமது சருமத்தில் சூரிய கதிர்களை ஏற்படுத்தும்  கருமைகள் மற்றும் தீங்குகளை கேரட் சாப்பிட்டால் சரி செய்ய முடியும். தினமும் ஒரு கேரட் சாப்பிடுபவர்களுக்கு கொலாஜன் அதிகரிக்கும். 

சிவப்பு திராட்சை : சிவப்பு திராட்சையில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இளமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த சிவப்பு திராட்சைக்கு உள்ளது. விட்டமின் சி யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டை விட இந்த சிவப்பு திராட்சையில் 50 மடங்கு அதிகம் உள்ளது. அதேபோல் விட்டமின் ஈ யில் உள்ளதை விட 20 மடங்கு அதிகம் உள்ளது. இதனால் வாரம் ஒரு முறை சிவப்பு திராட்சை சாப்பிட்டாலே கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். 

நட்ஸ் : நட்ஸ் அற்புதமான ஸ்நாக்ஸ் உணவாகும்.முந்தரி மற்றும் பூசணிக்காய் விதைகளில் தேவையான மினரல்கள் உள்ளன.  மாலையில் நேரத்தில் ஏதேனும் ஒரு நட்ஸ் வகையையே சாப்பிட்டால் ஒட்டிய கன்னங்கள், வறட்சியான சருமம் சரியாகும். தினமும் நட்ஸ்  சாப்பிட்டு வர சருமத்திற்கு போதிய கொலாஜன் (collagen)  உற்பத்தியாகி சருமத்தில் மிருதுதன்மை நாளடைவில் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

அழகை அதிகரிக்க இந்த ஒரு வாதுமைப் பழத்தை சாப்பிட்டால் போதும்!

pixabay

காலே கீரை : இந்த கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வாரம் மூன்று முறையாவது உணவில் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே நம்ப மாட்டீர்கள். சருமத்தின் திசுக்களில் ஏற்படும் பிரச்சனைகளை சீர் செய்து சரிபடுத்தி  இளமையாக தோன்ற வைக்கும் ஆற்றல் இந்த கீரைக்கு உள்ளது. 

அவகேடோ : அதிக நார்சத்தும், ஆன்டி ஆக்ஸிடென்டும் அவகோடாவில் உள்ளது. கொழுப்பினை  கட்டுபடுத்தும், விட்டமின் ஈ அதிகம் உள்ளது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் இதனை தொடர்ச்சியாக உண்ணும்போது இளமையான தோற்றத்தை பெறுவது உறுதி.

ப்ளூபெர்ரி பழங்கள் : மற்ற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது சிறந்த ஆக்சிஜனேற்ற பண்பினை ப்ளூபெர்ரி பழங்கள் தன் வசம் கொண்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது சருமம் முன்னதாகவே முதிர்ச்சி அடைவதை எதிர்க்கிறது மற்றும் கொலாஜன் உருவாக்கத்தை  ஊக்குவிக்கிறது.

முட்டை – எப்படி உங்கள் உடல் நலன் மற்றும் சரும அழகை மேம்படுத்த உதவுகின்றது?

pixabay

எலுமிச்சை : எலுமிச்சையை அடிக்கடி உணவில் சேர்த்து வர அது சருமத்தினை மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. சுருக்கங்களை எதிர்த்து போரிடுகிறது. பருக்கள் உருவாவதை குறைகிறது. இதனால் தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். 

தண்ணீர் : சிறந்த தோற்றத்தை பெற தண்ணீர் அருந்துதல் அவசியமான ஒன்றாகும். நமது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக பராமரிக்கவும், சிறப்பான சரும பொலிவிற்கும், நேர்த்தியாக நம்மை காட்டி கொள்ளவும் தவறாமல் தினமும் சரியான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். 

அசைவ உணவு : அசைவ உணவான முட்டையின் வெள்ளைக்கரு, மீன் வகைகள், சிப்பி மீன் வகைகள் போன்றவையும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். மிக பழமையான மற்றும் அனைவரும் அறிந்த ஆட்டுக்கால் சூப் போன்றவற்றிலும் கொலாஜன் உற்பத்தி மிகுதியாக இருக்கும்.

pixabay

கடல் உணவுகள் : கடல் உணவுகளும் நமது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். சால்மன் போன்ற  மீன் இதற்கு சிறந்த உதாரணமாகும். பெரும்பாலான கடல் உணவுகள் துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிக அளவில் பெற்று காணப்படுகின்றன. இவை சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்துகின்றன. வீக்கம் மற்றும் வறட்சியை குறைக்கிறது. நமது சருமத்தின் இளமையை மீட்டெடுக்கிறது.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.