சென்னையில் உங்கள் டேஸ்ட் பட்களுக்கு சவால் விடும் சில ஸ்ட்ரீட் ஃபுட் கடைகள் !

சென்னையில் உங்கள் டேஸ்ட் பட்களுக்கு சவால் விடும் சில ஸ்ட்ரீட் ஃபுட் கடைகள் !

உணவு நம் உடலை மட்டும் வளர்க்கவில்லை. உள்ளத்தின் உணர்வுகளையும் ஞாபகங்களையும் சேர்த்தே வளர்க்கிறது. அதனால்தான் எப்போதோ சிறுவயதில் நாம் சாப்பிட்ட உணர்வுகள் இன்றும் நம் ஞாபக நியூரான்களில் மிதந்து கொண்டிருக்கிறது. அதே சுவையுள்ள ஒரு உணவை இன்று சாப்பிட்டாலும் அந்த நியூரான்கள் சந்தோஷப்பூக்களை பூத்தபடி இருக்கின்றன.

உணவு என்பது உலகின் மற்ற முக்கிய விஷயங்களைப் போலவே தனக்கான வரலாறுகளைக் கொண்டுதான் இருக்கிறது. உணவின் சரித்திரம் என்பது உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

உங்கள் நாவிற்கு சுவை தர நீங்கள் விரும்புகிறீர்களா! உங்கள் டேஸ்ட் பட்களுக்கு சவால் விடும் சென்னையில் famous ஸ்ட்ரீட் ஃபுட் சிலவற்றை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்றால் பின்னர் என்றைக்கும் உங்கள் நாக்கு நன்றியை மறக்காமல் அடிக்கடி உங்களை அங்கு அழைத்து செல்லும்.

Youtube

அஜ்நபி மிட்டாய் கடை ஜார்ஜ் டவுன்

சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள அஜ்நபி மிட்டாய் கடை மும்பை ஸ்ட்ரீட் ஃபுட்களை நினைவூட்டும் சுவையைக் கொண்டது. இங்கே கிடைக்கும் வடா பாவ் உங்களை மும்பைக்கே கூட்டிப் போகும் சுவை நிறைந்தது. பானி பூரி என்பதும் அதே போன்ற அற்புதமான சுவை தரும். அதன் இனிப்பும் புளிப்பும் சேர்ந்த சுவை உங்களுக்கு சில நிமிடங்கள் சொர்க்கத்தை காட்டி விடும். இதனைத் தவிர குஜராத் இனிப்பு வகைகள் இங்கே கிடைக்கிறது. மும்பை உணவை சுவைக்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்.

இருக்கும் இடம் 108 ஜார்ஜ் டவுன் எலிபன்ட் கேட்டில் இருக்கிறது. 044 4272 5768

Youtube

வைஷ்ணவி இட்லி கடை அண்ணா நகர்

கிழக்கு அண்ணா நகரில் இருக்கும் இந்தக் கடை தென்னிந்தியா உணவான இட்லிக்குப் பெயர் போன கடை. பியூஷன் முறையில் புதுமைகளை புகுத்தி இவர்கள் தரும் உணவுகளின் சுவையும் தரமும் அபாரமானவை. இங்கே மிக ஃபேமஸான உணவு என்பது தட்டு இட்லி மற்றும் முறுக்கு சான்ட்விச் ஆகும்.

Bay 1 ground floor plot 91 Q block 4th main road Anna nagar east chennai - 9003008888

Youtube

ரிச்சி ஸ்ட்ரீட் மவுண்ட் ரோடு

ஜனநெருக்கடி நிறைந்த ரிச்சி ஸ்ட்ரீட்டில் அங்குள்ளவர்களுக்காகவே தனியாக தயாரிக்கப்பட்ட உணவுதான் குட்டி சமோசா. அங்கிருக்கும் ஒரு சில டீ கடைகளில் இது ஃபேமஸ்! ஒரு தட்டு நிறைய சூடான குட்டி சமோசாக்களை அவர்கள் வைத்துக் கொடுக்கும் அழகிலேயே நமக்கு மனம் நிறைந்து விடும். அதனுடன் கூடவே ஒரு மசாலா டீ சாப்பிட்டால் அன்றைய நாள் நம் ஆத்மா நிம்மதியாக உறங்கும்.

ரிச்சி ஸ்ட்ரீட் ரோடு, இந்தியா சில்க் பின்புறம்.

Youtube

பட்னி பிளாசா NSC ரோடு

கச்சோரி எனப்படும் காரசாரமான உணவு சென்னை முழுதும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனாலும் சூடான மொறுமொறுப்பான கச்சோரி வேண்டும் என்று விரும்புகிறவர்கள் NSC ரோடில் இருக்கும் பட்னி பிளாசா கடையை முற்றுகையிடுங்கள் ! உங்கள் கலோரிகள் அதிகரிப்பது பற்றிய கவலையே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்க செய்யும் சுவை கொண்டது பட்னி பிளாசா கச்சோரிகள் !

இடம் NSC போஸ் ரோடு, பத்ரி கார்டன், ஜார்ஜ் டவுன் சென்னை.

Youtube

காக்கடா ராம்பிரசாத் சௌகார்பேட்டை

உங்களுக்கு சாட் உணவுகள் மீது விருப்பம் அதிகம் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது இங்குதான். கச்சோடி மற்றும் சமோசாக்கள் இங்கே பிரபலமான உணவு வகை. வடஇந்திய உணவு வகைகள் மிக அதிகமாக கிடைக்கும் கடை. தஹி கச்சோடி, பாதாம் பால் ஆகியவை இங்கே ஃபேமஸ் உணவுகள்.

இடம் மின்ட் வீதி, சௌகார்பேட்டை 348/343 போன் - 04425382851

Youtube

காளத்தி நியூஸ் பேப்பர் மார்ட் மைலாப்பூர்

மயிலாப்பூரில் மிக சிறிய இடத்தில் இருக்கும் இந்த கடை ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் செஃப் ஒருவரை வருகை தரும்படி ஈர்த்திருக்கிறது என்றால் இதன் சுவையைப் பற்றி யோசித்துக் கொள்ளுங்கள். செஃப் சாரா டாட் ( ) இங்கு வந்திருக்கிறார். இங்கு தயாரிக்கப்படும் ரோஸ் மில்க் உலக அளவில் ஃபேமஸ் ஆகியிருக்கிறது. வெறும் 15 ரூபாய்க்கு கிடைப்பது அதனை விட ஆச்சர்யமானது இல்லையா! அருந்தி மகிழுங்கள்.

இடம் 27, கிழக்கு மாட வீதி மைலாப்பூர் போன் 9840919797

Youtube

மன்சுக் இனிப்பு மற்றும் காரம் - திநகர்

இனிப்பு என்றாலே அது வட இந்தியர்களின் இனிப்புதான் என்று சொல்லும்வகையில் இங்கே அத்தனை வகையான இனிப்புகள் கிடைக்கின்றன. 65 வருட பாரம்பர்யம் கொண்ட இந்த கடை இப்போது மூன்று கிளைகளைக் கொண்டுள்ளது. பாரம்பர்ய ராஜஸ்தானி உணவிற்கு பெயர் போனவை.இங்கே டோக்ளா, ஃபலூடா, ரசகுல்லா , சாட் ஆகியவை பிரபலமான உணவுகள்.

இடம் 10/35 ராமசாமி வீதி திநகர் போன் 04424341867

Youtube

பெசன்ட் நகர் சுண்டல்

அது என்ன பெசன்ட் நகர் சுண்டல் மெரினா சுண்டல் நன்றாக இருக்காதா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். செய்முறை வித்யாசங்களால் பெசன்ட் நகர் சுண்டல் வேறுபடுகிறது. சுண்டலை ருசித்தபடியே பீச்சில் நடந்து கடலை ரசிப்பதும் அலாதியான சுவைதான் இல்லையா. தேங்காய் பூ மாங்காய் மற்றும் சுண்டல் சேர்ந்த கலவை உங்கள் மாலையை ஆரோக்கியமாக்கும்.

இடம் பெசன்ட் நகர் பீச் 6வது அவென்யூ

காளான் கடை முகப்பேர்

கோவையில் பிரபலமான காளான் கடை இப்போது சென்னையில் கிடைக்கிறது. எண்ணையில் வறுத்த அதன் மொறுமொறுப்பும் சுண்டி இழுக்கும் அதன் நிறமும் பசிக்காத போதும் பசியைத் தூண்டும். காளான்களை பொரித்து அதனுடன் செமிக்ரேவி கலவையை சேர்த்து அதன் மேல் நறுக்கிய வெங்காயம் தூவி எலுமிச்சை துளிகளை விட்டு சாப்பிட்டால் ஆஹா.. நம் மொத்த துக்கங்களும் ஓடியே போய்விடும்.

இடம் பாரி சாலை முகப்பேர் .

பழமுதிர்ச்சோலை தேங்காய் போளி நொளம்பூர்

நொளம்பூரில் இருந்து மேற்கு முகப்பேர் பேருந்து நிலையம் செல்லும் இடத்தில் கங்கா ஸ்வீட்ஸ் அருகே இருக்கிறது இந்த இடம். மாலை 6 மணிக்கு இங்கே சென்றால் விதம் விதமான போளிகளை சூடாக சுவையாக நம் கண்முன்னே போட்டு தருவார்கள். தேங்காய் போளி , பருப்பு போளி மற்றும் கார போளி ஆகியவை இங்கே ஃபேமஸ்.

இடம் மேற்கு முகப்பேர் பெட்ரோல் பங்க் அருகில்

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.