மினுமினுக்கும் எகிப்தியர்களின் அழகு ரகசியம் - உங்களையும் மெருகேற்றட்டும்!

மினுமினுக்கும் எகிப்தியர்களின் அழகு ரகசியம் - உங்களையும் மெருகேற்றட்டும்!

உலகிலேயே மிக அழகு நிறைந்தவர்கள் என்று வரலாறால் ஒப்புக் கொள்ளப்பட்டவர்கள் எகிப்தியர்கள். இவர்களின் அழகு சாம்ராஜ்யம் என்பது நிறைய ரகசியங்களால் ஆனது. பார்ப்பவர்களைத் திகைக்க வைக்கும் அழகு கொண்ட எகிப்தியர்கள் தங்கள் தேக அழகிற்கு என்னென்ன செய்தார்கள் எனும் ரகசியம் காலத்தின் பெயரால் தற்போது வெளியாகி இருக்கிறது (egyptian beauty secret) .


பல்வேறு மர்மங்களைத் தன்னிடத்தே கொண்ட சாம்ராஜ்யம் எகிப்து சாம்ராஜ்யம். அங்கிருக்கும் ராஜா ராணி க்களின் அழகு என்பது அனைவரையும் விட பேரழகு என ஒப்புக் கொள்ளப்பட்டது எதனால் எப்படி அவர்கள் அத்தனை அழகாக இருக்கிறார்கள் என்கிற ரகசியக் குறிப்பை Popxo வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறது மனம். 



Pinterest

எகிப்தியர்களைப் பொறுத்தவரை கூந்தலின் அழகு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர்களின் கூந்தல் பல நீண்ட காலத்திற்கு கருமையோடும் கண்ணாடி போன்ற பளபளப்போடும் இருந்ததே அதன் சாட்சி. அதற்காக அவர்கள் பிரத்யேகமாக தேங்காய் வெண்ணெய் எனும் பொருளைப் பயன்படுத்தினார்களாம். 

எகிப்தியர்கள் முகங்களை கூர்ந்து கவனித்தால் மாசு இல்லாத பரிசுத்தமான பளிங்கு முகத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள். அதற்க்கு காரணம் வெந்தயத்தின் விதைகள் தான். பருக்கள் அற்ற முகம் வேண்டுபவர்கள் வெந்தய விதைகளை அரைத்து அதன் மேல் தடவி வந்தால் விரைவில் முகம் பளிங்கு போல மாறும். 



Pinterest

சிவந்த உதடுகள் யாரைத்தான் சுண்டி இழுக்காது. அப்படிப்பட்ட சிவந்த உதடுகளை பெற அவர்கள் ஒருவகையான களிமண்ணை உபயோகித்தார்கள் என்கிறது வரலாறு. ரெட் அச்ரே எனும் மூலப் பொருள் களிமண்ணில் இருந்து எடுக்கப்பட்டு அதையே தங்கள் உதடுகளுக்குப் பூச்சாக அவர்கள் பயன்படுத்தி வந்தனர். 

எகிப்தியர்களின் மிக முக்கியமான அழகு ரகசியமாக சொல்லப்படுவது நம்மையெல்லாம் ஒரு நிமிடம் அய்யே என்று சொல்ல வைக்கும். ஆனாலும் அதுதான் அவர்கள் அழகு ரகசியம். கழுதைப் பாலுடன் எருமை சாணி கலந்து அவர்கள் தங்கள் உடல் அழகை மினுமினுக்க வைத்திருக்கின்றனர். இன்றளவும் ஆன்லைனில் கழுதைப்பால் சோப்கள் விற்கப்படுகின்றன. 

Pinterest

குளியல் நேரம் என்பது எகிப்தியர்களுக்கு புனித நேரம் போன்றது. அந்த நேரத்தில் பால் மற்றும் தேன் பயன்படுத்தி உடலை அதில் ஊற வைத்து குளிப்பது அவர்களின் அழகை நீண்ட காலம் நிலைத்திருக்க செய்திருக்கிறது. என்றும் இளமை தோற்றம் வேண்டுபவர்கள் பாலையும் தேனையும் பயன்படுத்துங்கள். 

இந்த விஷயங்களை நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் சருமத்தின் நிறம் எதுவாக இருந்தாலும் பளபளக்கும் பொன் மேனியைப் பெறுவீர்கள். எகிப்தியர்கள் எப்படி உலக அளவில் அழகில் சிறந்தவர்களாக இருந்தார்களோ அதை போல நீங்களும் உங்கள் மேனி அழகில் ஜொலிக்க தொடங்குவீர்கள்.

 

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                              

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.