வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கேட்பதற்கு சாதரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம். இதனை தக்க சமயத்தில் கவனிக்கத் தவறி விட்டால், பல இன்னல்களையும், ஆரோக்கிய தீங்குகளையும், வறண்ட சருமம் உண்டாக்கக் கூடும். மேலும் வறண்ட சருமம் (dry skin)உங்கள் உடலில் ஏதோ ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளது என்பதையும் வெளி உணர்த்தும் விதமாகவும் இருக்கும். நீங்கள் வறண்ட சருமத்தை போக்கி, அழகான தோற்றத்தை பெற விரும்புகின்றீர்களா, அப்படியானால், இந்த தொகுப்பு உங்களுக்கானது!
வறண்ட சருமம் உண்டாக காரணம் என்ன?
வறண்ட சருமம் (dry skin) இருகின்றதே என்று வருத்தப்படுவதை விட, அதனை எப்படி போக்கி, அழகான பொலிவான சருமத்தை பெறுவது என்பதே நல்லது. ஆனால், நீங்கள் ஒரு தீர்வு காண்பதற்கு முன், எதனால் உங்கள் சருமம் இப்படி வறண்டு போனது என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்வது மிக முக்கியம். இது நீங்கள் சரியான தீர்வை கண்டறிய உதவும். உங்கள் சருமம வறண்டு போவதற்கு இங்கே சில காரணங்கள்:
• சீதோஷண நிலையில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக குளிர் காலம் மற்றும் கோடைக் காலம்
• காற்று மண்டலம் வறண்டு இருப்பது, ஈரத்தன்மை இல்லாமல் இருக்கும் பகுதியில் நீங்கள் வாழ்வது
• அதிகம் ஹீட்டர் பயன் படுத்துவது – இதனால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் வற்றி காற்று வறட்சியாவது
• சுடு தண்ணீரில் அதிகம் குளிப்பது
• குலோரின் கலந்த தண்ணீர் இருக்கும் நீச்சல் குளத்தை பயன்படுத்துவது
• அதிகம் ரசாயனங்கள் இருக்கும் சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்துவது
• சோரியாசிஸ், சரும நோய் மற்றும் எக்சிமா போன்ற பிரச்சனைகளால் சருமம் வறண்டு போகலாம்
• அதிகம் ரசாயனம் கலந்த சரும சுத்திகரிப்பான் (க்ளென்சர்) பயன்படுத்துவது
சமீபத்தில் செய்த ஒரு ஆய்வின் படி, 88% பெண்கள் சரியான குளியல் பொருட்களையோ அல்லது சரும பாதுகாப்பிற்கான பொருட்களையோ பயன்படுத்துவதில்லை. சரியான தேர்வும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க ஒரு முக்கிய காரணமாகும்.
வறண்ட சருமதிற்குத் தேவையான வைட்டமின்கள்
சருமம் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு சில முக்கிய வைட்டமின்கள்த் தேவைப்படுகின்றது. அதிலும் வறண்ட சருமத்தை பாதுக்காக்க உங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட விடமிங்களின் உதவித் தேவை. இங்கே, நீங்கள் தெரிந்து கொள்ள அவை:
• வைட்டமின் E
o இது சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும், ஈரத்தன்மையோடு வைத்திருக்கவும், ஆக்சிஜநேற்றத்தோடு வைத்திருக்கவும் உதவும்
o ஊதா கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும்
o வறண்ட சருமம் மற்றும் தோல் உரிதல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்
• வைட்டமின் C
o இதில் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளது
o சுருக்கம், வறட்சி மற்றும் சோர்வை போக்கும்
o வயதான தோற்றத்தை மாற்றும் தன்மை உள்ளது
o சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும்
o சோரியாசிஸ், எக்சிமா, மற்றும் ரோசகிய போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்
• பயொடின் அல்லது வைட்டமின் B7
o இது தலை முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்
o சருமத்திற்கு நீர் சத்து அதிகம் கிடைக்க உதவும்
o சருமம் நல்ல பொலிவையும், தோற்றத்தையும் பெற உதவும்
வறண்ட சருமத்தை கட்டுபடுத்த என்ன செய்ய வேண்டும்?
வறண்ட சருமத்தை போக்க நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு சில விடயங்களை செய்யலாம். இதற்கு அதிக நேரம் செலவாகாது, மேலும் நல்ல பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்குக்காக வறண்ட சருமத்தை போக்க இங்கே சில எளிய குறிப்புகள்:
1. சரியான குளியல்:
o அதிக நேரம் தண்ணீரில் இருந்து குளிக்கக் கூடாது.
o விரைவாக குளித்து விட்டு வர வேண்டும்.
o சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்ப்பது மிக முக்கியம்.
o சுடு தண்ணீர் சருமத்தில் இருக்கும் எண்ணை மற்றும் ஈரப்பதத்தை குறைத்து, சருமத்தை வறண்டு போக செய்யும்.
o குளிப்பதற்கு முன், நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தேய்த்து, சிறிது நேரம் கழித்து பின் குளிக்க செல்லலாம்.
o வறண்ட சருமதிர்கேன்றே இருக்கும் சோப்பை பயன்படுத்துவது நல்லது
2. குளித்த பின் செய்ய வேண்டியவை:
o குளித்த பிறகு, நன்கு உடலை துடைத்து விட வேண்டும்
o கடுமையாக சருமத்தை துடைக்கக் கூடாது. மென்மையாக தண்ணீரை துடைக்க வேண்டும்
o அதன் பின் பாதுகாப்பான மாயச்ச்சரைசர் பயன்படுத்தலாம்.
3. மாயச்ச்சரைசர்
o வறண்ட சருமதிர்க்கான முதல் பாதுகாப்பு மாயச்ச்சரைசர் பயன்படுத்துவது
o இயற்க்கை பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட மாயச்ச்சரைசர்களை பயன்படுத்துவது நல்லது
o இயற்க்கை எண்ணை, கலந்த மாயச்ச்சரைசர் பயன்படுத்தவும்
o இது சருமம் ஈரத்தன்மையோடும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்
4. முடி சவரம் செய்வது
o பெண்கள் சருமத்தில் இருக்கும் மெல்லிய முடிகளை சவரம் செய்வது இன்று இயல்பாகி விட்டது. ஆனால் வறண்ட சருமம் இருப்பவர்கள் இப்படி செய்தால், அது உங்கள் சருமத்தை மேலும் பாதிக்கும்
o சவரம் செய்த பின், சோப்பு மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை உடனடியாக பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது
o சரியான பொருளை பயன்படுத்தி சவரம் செய்ய வேண்டும்
5. வயதான தோற்றத்தை போக்க பயன்படுத்தும் பொருட்களை தவிர்க்க வேண்டும்
o ஆண்டி ஏஜிங் – வயதான தோற்றத்தை போக்க பயன்படுத்தும் பொருட்களை வறண்ட சருமம் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது
o இது உங்கள் சருமத்தை மேலும் வறண்டு போக செய்வதோடு, மேலும் சில பிரச்சனைகளை உண்டாக்கும்
o இது சருமத்திற்கு ஒவ்வாமை, அரிப்பு, தடிப்பு, சிவந்தால் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்
o மாறாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட க்ரீம்களை பயன்படுத்தலாம்
6. உதடுகளை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள;
o சருமம் வறண்டால், அது உதடுகளையும் பாதிக்கும்
o இதனால் உதடுகளில் தோல் உரிவது, எரிச்சல் உண்டாவது போன்ற உபாதைகள் ஏற்படும்
o சரியான லிப் பாம் பயன்படுத்தி உதடுகளை ஈரத்தன்மையோடு வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்
o தேன், சர்க்கரை, வெண்ணை போன்று வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உங்கள் உதடுகளுக்கு ஈரத்தன்மையை அதிகப்படுத்துங்கள்
7. முகத்தை தளர விடுங்கள்
o எப்போதும் முகத்திற்கு தொடர்ந்து மசாஜ் மற்றும் பேசியல் செய்து கொண்டே இருக்காதீர்கள்
o வாரம் இரண்டு முறை ஸ்க்ரப் செய்தால் போதுமானது
o இறந்த அணுக்களை சருமத்தில் இருந்து உத்திர அவகாசம் கொடுங்கள்
o இப்படி சற்று இடைவேளை கொடுத்து பேசியல் மற்றும் ஸ்க்ரப் செய்வதால் உங்கள் சருமம் பாதுகாப்பாகவும், ஈரத்தன்மையோடும் இருக்கும்
8. சன் ஸ்க்ரீன் லோசன்
o வறண்ட சருமம் விரைவாக சுர்க்கம் பெரும்
o இதனால் வயதான தோற்றம் விரைவாக தோன்றும்
o சரியான சன் ஸ்க்ரீன் லோசன் பயன் படுத்துவதால் உங்கள் சருமம சூரிய கதிர் மற்றும் ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாப்புப் பெரும்
o எனினும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தும் முன் நீங்கள் மாயச்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும்
9. மீன் எண்ணை மாத்திரைகள்
o இந்த மாத்திரைகள் உங்கள் உடலுக்கும், சருமத்திற்கும் தேவையான போசாக்கு மற்றும் சத்துக்களைக் கொடுகின்றது
o இது உங்கள் உடல் மற்றும் சருமம் ஈரத்தனமையோடு இருக்க உதவுகின்றது
o வறண்ட சருமத்தை போக்க உதவுகின்றது
o சருமத்தை மிருதுவாக்க உதவுகின்றது
வறண்ட சருமத்திற்கு ஒப்பனை குறிப்புகள்
பொதுவாக வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு பல கட்டுபாடுகள் ஒப்பனை செய்வதில் இருக்கும். இது குறிப்பாக அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் எந்த ஒரு பாதிப்பையும் சருமத்திற்கு ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்கே. எனினும், ஒரு சில விடயங்களை நீங்கள் நிச்சயம் உங்கள் மனதில்
நீங்கள் உங்களது வறண்ட சருமத்திற்கு ஒப்பனை செய்ய விரும்புகின்றீர்கள் என்றால், உங்களுக்காக இங்கே சில பயனுள்ள மற்றும் எளிய குறிப்புகள்;
1. உங்கள் சருமத்தை தயார் செய்யுங்கள்: வறண்ட சருமத்திற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்கள் சருமத்தை தயார் செய்வது. குறிப்பாக, சருமம் அதிகம் வறண்டு இருந்தால், முதலில் அதனை ஈரப்பதமாக்குவது முக்கியம். இதற்கு நல்ல மாச்ச்சரைசர் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் சருமத்தை ஒப்பனை செய்ய தயார் செய்யும்.
2. சீரம் சார்ந்த பவுண்டேசன் பயன்படுத்தவும்: சாதாரண பவுண்டேசன் எவ்வளவு தரமானதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருந்தாலும், அது உங்கள் சருமத்தை நிச்சயம் மேலும் வறண்டு போக செய்யும். அதனால் எப்போதும், சீரம் சார்ந்த பவுண்டேசன் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சருமத்தை வறண்டு போக செய்யாது, மேலும் நல்ல ஈர பதத்தைத் தரும்.
3. தூள் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்: முடிந்த வரை தூள் சார்ந்த ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் சருமத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணைத் தன்மையை குறைத்து உங்கள் சருமம மேலும் வறண்டு போக செய்து விடும். அதனால் க்ரீம் மற்றும் சீரம் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
4. சரும பராமரிப்பு விதியை பின்பற்றவும்: எப்போதும் சரும பராமரிப்பு என்று வந்து விட்டால், சில விதிகளை நீங்கள் பின் பற்றுவது நல்லது. தவறாமல் சரியான காலகட்டத்தில் உங்கள் சருமதிற்குத் தேவையான பராமரிப்பை நீங்கள் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறையாவது உங்கள் சருமத்தை ஸ்க்ரப் சித்து, சீரம் போடவும்.
5. மிதமான ஒப்பனை: முடிந்த வரை மிதமான ஒப்பனை செய்வது நல்லது. இது வறண்ட சருமத்திற்கு பாதுகாப்பாகவும் இருக்கும். அடர்ந்த மற்றும் அதிகமான ஒப்பனை உங்கள் வறண்ட சருமத்தில் திட்டு திட்டாக தெரியத் தொடங்கும். இது உங்கள் முக அழகையே பாதித்து விடக் கூடும்.
வறண்ட சருமத்திற்கு எப்படி ஒப்பனை போடுவது?
உங்கள் வறண்ட சருமத்திற்கு ஒப்பனை செய்ய விரும்புகின்றீர்கள் என்றால், இங்கே உங்களுக்காக, படிப்படியான செயல் முறை குறிப்புகள்:
1. முதலில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இது உங்கள் ஒப்பனையை மிருதுவாக்கும்
2. அதன் பின் மாச்ச்சரைசர் போடா வேண்டும். இதனுடன் நீங்கள் சன் ஸ்க்ரீனும் சேர்த்து போடலாம்
3. சரியான முறையில் ஒப்பனை பொருட்களை பயன் படுத்த வேண்டும்
4. ப்ரைமர் பயன்படுத்துங்கள். இது உங்கள் ஒப்பனை அதிக நேரத்திற்கு கலையாமல் இருக்க உதவும்
5. வறண்ட சருமதிர்க்கான சரியான பவுண்டேசனைத் தேர்வு செய்யவும். குறிப்பாக வறண்ட சருமத்திற்கென்றே இருக்கும் பவுண்டேசனை தேர்வு செய்வது நல்லது
6. அதிகம் தூள் / பவுடர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது
7. முகத்திற்கு பொலிவை அதிகப் படுத்த க்ரீம் பார்முலா பயன் படுத்தலாம். இது உங்கள் சருமம் சற்று ஈரத்தனமையோடு இருக்க உதவும்
8. மேட் உதட்டு சாயம் பயன்படுத்துங்கள். இது மேலும் அழகை அதிகப்படுத்தும்
வறண்ட சருமத்திற்கு பேஸ் மாஸ்க்
உங்கள் வறண்ட சருமத்தை பாதுகாக்க நீங்கள் இனி எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முயற்சிக்கலாம். இந்த பேஸ் மாஸ்க் செய்வது மிக எளிது. மேலும் இது உங்களுக்கு நல்ல பலன்களையும், எதிர் பார்த்தபடி தரும். உங்களுக்காக, இங்கே சில எளிய மற்றும் பயனுள்ள வறண்ட சருமதிர்க்கான பேஸ் மாஸ்க்
1. வறண்ட சருமத்திற்கு கற்றாளை
தேவையான பொருள்:
o ஒரு கற்றாளை இல்லை
செய்முறை:
o கற்றாளை இலையை நறுக்கி அதன் சதையை எடுத்துக் கொள்ள வேண்டும்
o இதனை நன்கு மசித்து முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
o இரவில் அப்படியே விட்டு விடலாம், அல்லது அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்
o இதனை தினமும் செய்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும்
2. வறண்ட சருமத்திற்கு எண்ணை:
தேவையான பொருள்:
o சுத்தமான தேங்காய் எண்ணை அல்லது
o நல்லெண்ணை அல்லது
o ஜோஜோபா எண்ணை அல்லது
o அல்மான்ட் எண்ணை அல்லது
o வைட்டமின் E எண்ணை அல்லது
o ஆலிவ் எண்ணை அல்லது
o மஸ்டர்ட் எண்ணை அல்லது
o குகுமாதி தையலம்
செய்முறை
o தேங்காய் எண்ணை அல்லது உங்களுக்கு பிடித்த எண்ணையை தேர்வு செய்து சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யவேண்டும்
o அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
o பின் மிதமான சூடு உள்ள தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீரில் குளித்து விடலாம்
o இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
3. கிளிசரின்
தேவையான பொருள்
o கிளிசரின் ஒரு தேக்கரண்டி
o ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் ஒரு தேக்கரண்டி
செய்முறை
o கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து கொள்ளவும்
o இதனை உங்கள் சருமத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்யவும்
o அப்படியே சில மணி நேரங்களுக்கு விட்டுவிடவும்
o சற்று காயத் தொடங்கியதும் முகத்தை கழுவி விடவும்
o இதனை தினமும் செய்யலாம்
4. பழங்கள்
அ. தர்பூசணி பேஸ் பாக்
தேவையான பொருள்
o தர்பூசணி
o தேன் ஒரு தேக்கரண்டி
செய்முறை
o தர்பூசணி பழத்தை சிறிதளவு எடுத்துக் கொண்டு நன்கு மசித்துக் கொள்ளவும்
o இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
o இதை முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும்
o பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
o இதனை வரம் இரு முறை செய்யலாம்
ஆ. பைனாப்பிள் பேஸ் பாக்
தேவையான பொருள்
o ஒரு தேக்கரண்டி பைனாப்பிள் சாறு
o ஒரு தேக்கரண்டி தேன்
செய்முறை
o தேன் மற்றும் பைனாப்பிள் சாற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்
o இதனை முகத்தில் தடவி 2௦ நிமிடங்கள் விட்டு விடவும்
o பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
o இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
இ. ஆப்பிள் பேஸ் பாக்
தேவையான பொருள்
o ஆப்பிள் சாறு ஒரு தேக்கரண்டி
o தேன் ஒரு தேக்கரண்டி
o பால் ஒரு தேக்கரண்டி
செய்முறை
o அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்
o முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
o பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
o இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
5. முல்தானி மட்டி
தேவையான பொருள்
o முல்தானி மட்டி ஒரு தேக்கரண்டி
o சிறிது பால்
o ஒரு தேக்கரண்டி தேன்
செய்முறை
o அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும். குளிர் சாதனா பெட்டியில் வைத்து குளிரூட்டலாம்
o பின் அதனை முகத்தில் தடவி மிதமாக கசாஜ் செய்யவும்
o 3௦ நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடவும்
o இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
6. ஆப்பிள் சிடார் வினிகர்
தேவையான பொருள்
o அரை தேக்கரண்டி ஆப்பில் சிடார் வினிகள்
o அரை தேக்கரண்டி தண்ணீர்
o அரை தேக்கரண்டி தேன்
செய்முறை
o இவை அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்
o பின் இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
o அப்படியே சிறிது நேரம் விட்டுவிடவும்
o பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
7. வாழைப்பழ பேஸ் பாக்
தேவையான பொருள்
o பாதி நன்கு பழுத்த வாழைப்பழம்
o ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணை
செய்முறை
o வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்
o இதனுடன் தேங்காய் எண்ணையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
o முகத்தில் தடவி சிறிது நேரம் மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
o பின் அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
o பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
o இதை வாரம் ஒரு முறை செய்யலாம்
8. மஞ்சள்
தேவையான பொருள்
o மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
o ஒரு தேக்கரண்டி தேன்
o ஒரு தேக்கரண்டி தயிர்
செய்முறை
o அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
o பின் இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
o பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
o இதனை வாரம் இரு முறை செய்யலாம்
9. வெள்ளரிக்காய்
தேவையான பொருள்
o அரை வெள்ளரிக்காய்
o ஒரு தேக்கரண்டி தயிர்
o சிறிது கற்றாளை
செய்முறை
o அனைத்தையும் நன்கு கலந்து மசித்துக் கொள்ள வேண்டும்
o பின் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
o அப்படியே சிறிது நேரம் விட்டுவிட வேண்டும்
o பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
o இதனை வாரம் ஒரு முறை செய்யலாம்
10. முட்டை
தேவையான பொருள்
o ஒரு முட்டையின் வெள்ளைக்கரு
o ஒரு தேக்கரண்டி தேன்
o ஒரு தேக்கரண்டி எழுமிச்சைபழ சாறு
o ஒரு தேக்கரண்டி பன்னீர்
செய்முறை
o அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
o இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
o பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்
o இதனை வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம்
11. வெந்தயம் தேவையான பொருள்
o இரண்டு தேக்கரண்டி வெந்தயம்
o சிறிது தேங்காய் எண்ணை
o சிறிது தண்ணீர்
செய்முறை
o வெந்தயத்தை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
o இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணை கலந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
o இதனை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
o பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
o இதனை வாரம் இரு முறை செய்யலாம்
12. இஞ்சி
தேவையான பொருள்
o இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி
o தேன் ஒரு தேக்கரண்டி
o பன்னீர் ஒரு தேக்கரண்டி
செய்முறை
o அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
o முகத்தில் இந்த கலவையை தடவி மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
o சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
o இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
13. தயிர்
தேவையான பொருள்
o கால் கப் தயிர்
o சிறிது சர்க்கரை
o அரை தேக்கரண்டி தேன்
செய்முறை
o அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
o முகத்தில் இந்த கலவையை தடவி மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
o சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
o இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
14. பச்சை தேயிலை
தேவையான பொருள்
o அரை தேக்கரண்டி பச்சை தேயிலை
o ஒரு தேக்கரண்டி பிரஷ் க்ரீம்
செய்முறை
o இந்த பொருட்களை நன்கு கலந்து கொள்ளவும்
o இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
o பின் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்
15. கடலை மாவு
தேவையான பொருள்
o இரண்டு தக்கரண்டி கடலை மாவு
o அரை தேக்கரண்டி மஞ்சள்த் தூள்
o ஒரு தேக்கரண்டி தேன்
o ஒரு தேக்கரண்டி பிரெஷ் க்ரீம்
o ஒரு தேக்கரண்டி பன்னீர்
செய்முறை
o அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
o முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
o பின் மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
o இதனை வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம்
16. வேப்பம் இல்லை
தேவையான பொருள்
o இரண்டு தேக்கரண்டி வேப்பம் இலைகள்
o ஒரு தேக்கரண்டி தேன் அல்லது பால்
o சிறிது மஞ்சள்த் தூள்
o தண்ணீரி சிறிது
செய்முறை
o வேப்பம் இலையை அரைத்துக் கொள்ளவும் அல்லது வேப்பம் இலை பொடியை பயன்படுத்தலாம்
o இதனுடன் தண்ணீர், மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
o இந்த கலவையை முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்யவும்
o பின் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும்
o இதனை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்
17. ஓட்மீல்
தேவையான பொருள்
o 3 தேக்கரண்டி ஓட்மீல்
o ஒரு தேக்கரண்டி தேன்
o கால் கப் பால்
செய்முறை
o பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்யவும்
o ஒரு கிண்ணத்தில் ஓட்மீல் எடுத்துக் கொண்டு அதனுடன் இந்த பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
o சிறிது நேரம் ஆற விட்ட பின், இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்
o இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் சிஎயவும்
o பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
o இதனை வாரம் ஒரு முறை செய்யலாம்
18. பச்சை அரிசி மாவு
தேவையான பொருள்
o ஒரு தேக்கரண்டி பச்சை அரிசி மாவு
o அரை தேக்கரண்டி தேன்
செய்முறை
o தேன், பச்சை அரிசி மாவு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
o இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்
o சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
19. சந்தனம்
தேவையான பொருள்
o ஒரு தேக்கரண்டி பால் தூள்
o அரை தேக்கரண்டி சந்தனத் தூள் அல்லது சந்தன எண்ணை
o சிறிது பன்னீர்
செய்முறை
o இவை அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்
o முகத்தில் இந்த கலவையை தடவி மிதமாக மசாஜ் செய்யவும்
o சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
கேள்வி பதில்கள்
1. கோடை காலத்தில் வறண்ட சருமத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
சரியான குளியல் சோப்பு பயன் படுத்துவதும், உங்கள் சருமத்தை எப்போதும் ஈரத்தன்மையோடு வைத்திருப்பதும் முக்கியம். எந்த காலமாக இருந்தாலும், இவ்விரண்டும் நீங்கள் கவனிக்க வேண்டிய அடிப்படை தேவைகளாகும். இதைத் தவிர, நீங்கள் கற்றாளை, தென் போன்ற பொருட்களை தொடர்ந்து பயன் படுத்தும் போது உங்கள் சருமம் வறண்டு போகாமல், ஈரப்பதத்தோடு எப்போதும் இருக்கும். மேலும், கோடை காலத்தில் நீர் வேகமாக உடலில் வற்றிப் போவதால், அதிகாமாக தண்ணீர் குடுக்க வேண்டும்.
2. அடிக்கடி குளிப்பதால் சருமம் வறண்டு போகுமா?
சுடு தண்ணீரில் அதிகம் முகம் கழுவுவது மற்றும் குளிப்பது போன்றவை நிச்சயம் உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்யும். சுடு தண்ணீர் சருமத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணைத் தன்மையை பாதிக்கும். இதனால், சருமம் வறண்டும், சோர்வடைந்தும் காணப்படும். ஆனால், அதற்கு மாறாக, நீங்கள் குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம். கடுமையான சோப்புகள் மற்றும் ரசாயனம் அதிகம் சேர்க்கப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது.
3. வறண்ட சரும தடிப்பு என்றால் என்ன?
இது சருமத்தில் அதிகம் அரிப்பு மற்றும் உணர்வை உண்டாக்கும். ஒரு சிறிய உராய்வுக் கூட அதிக தடிப்பை உங்கள் சருமத்திற்கு உண்டாக்கலாம்.
4. வறண்ட சருமத்தை பாதுகாக்க எளிதாக என்ன செய்யலாம்?
முடிந்த வரை வாரத்திற்கு ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். கடலை மாவு, அரிசி மாவு, பச்சை பயிர் மாவு மற்றும் இதனுடன் சேர்த்து மஞ்சள், போன்ற இயற்க்கை பொருட்களை சேர்த்த குளியல் பொடியை நீங்களாகவே தயார் செய்து பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்திற்கு நல்ல பொலிவையும், ஈரத்தன்மையையும், ஆரோகியத்தையும் தரும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன