நாக்குக்கு ருசியான நாட்டுக்கோழி குருமா சமைக்கலாம் வாங்க !

நாக்குக்கு ருசியான நாட்டுக்கோழி குருமா சமைக்கலாம் வாங்க !

கோழிக்குழம்பு என்கிற பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும் போது நாட்டுக்கோழிக் குழம்பு என்பது நாடி நரம்புகளில் ஆசையைக் கிளப்பும் குழம்பாகும். அப்படிப்பட்ட நாட்டுக் கோழிக்குழம்பை எப்படி சமைப்பது என்று நமக்கு தெரிந்திருக்கும்.

அதிலேயே நாட்டுக் கோழி குருமா உங்கள் பசியைத் தூண்டி விட்டு வயிறை சந்தோஷப்படுத்தும் ஒரு உணவாகும். நாட்டுக் கோழி குருமாவை (country chicken kuruma) எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

சென்னைக்காதலர்களே! நீங்க இந்த மழைக்காலத்தில் அவசியம் செல்ல வேண்டிய சில ரொமான்டிக் இடங்கள்!

 

Youtube

தேவையானவை

நாட்டுக்கோழி - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 25
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
மிளகாய் தூள் 3 ஸ்பூன்
மிளகு தூள் 1 ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
கசகசா 1 ஸ்பூன்
முந்திரி 10
நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தேங்காய் அரை மூடி

சுவையான சூடான விதவிதமான முட்டை ஆம்பிளேட் கறி செய்வது எப்படி!

Youtube

செய்முறை

நாட்டுக்கோழியை நன்றாக அலசி மஞ்சள் தூள் போட்டு கழுவி நீரை வடித்து வைத்து விடவும்.

தேங்காய் முந்திரி மற்றும் கசகசாவை மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக வதக்கி விட வேண்டும்.

நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள் , மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது நீர் ஊற்றி மிதமான தீயில் வதக்கவும்.

அதன் பின்னர் கோழிக்கறியை சேர்த்துப் பிரட்டி விடவும். அதன் பின்னர் சிறிது நீர் விட்டு 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

கொதிக்கும் கோழிக்கறியோடு அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேருங்கள். அதனுடன் அளவாக உப்பு சேர்க்கவும்.

அதன் பின்னர் குக்கரின் மூடியை மூடி விசில் போடவும். 3 முதல் நான்கு விசில்களில் இறக்கி விடவும்.

சுவையான நாட்டுக் கோழி குருமா மணக்க மணக்க தயார் ஆகியிருக்கும்.

இதனை சாதம், சப்பாத்தி, தோசை போன்ற எந்த உணவுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

கோளா உருண்டை சாப்பிட ஹோட்டல் எதுக்கு? மணக்கும் மட்டன் கோளா உருண்டையை வீட்டிலேயே செய்யலாம் வாங்க !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                            

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.