logo
ADVERTISEMENT
home / Bigg Boss
முதல் திரைப்படத்திலேயே காதலியுடன் இணையும் அதிர்ஷ்டம்.. தர்ஷனின் திரைப்படம் இதுதான்!

முதல் திரைப்படத்திலேயே காதலியுடன் இணையும் அதிர்ஷ்டம்.. தர்ஷனின் திரைப்படம் இதுதான்!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் மற்ற சீசன்களை விடப் பிரமாதமாக போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பிக் பாஸ் குழுவினர் அயராத உழைப்பால் சலித்து எடுத்து தெரிந்தெடுக்கப்பட்ட மிக சரியான போட்டியாளர்கள்.

இதில் ஆரம்பத்தில் இருந்தே மற்றவர் மனதை கவர்ந்தவர் தர்ஷன் (tharshan). முதல் இரு வாரங்கள் அவர் எதிலும் கலந்து கொள்ளவில்லை ஆனாலும் பேசுகிற பேச்சில் ஒரு தீர்க்கம் இருந்ததை உணர முடிந்தது. கமல்ஹாசனிடம் இருந்து க்ரீன் சிக்னல் விழுந்ததும் தனது தயக்கங்களை உதறிவிட்டு முன்னே வந்தார் தர்ஷன்.

வனிதா மற்றும் அபிராமி மோதலுக்கிடையில் தர்ஷன் நுழைந்து பேசினார். கண்களில் உண்மையிலேயே தீ இருக்குமோ எனும் அளவிற்கு தர்ஷனின் நேர்மையான கோபங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? அடுத்த தொகுப்பாளர் இவர்தானாம்..

ADVERTISEMENT

Youtube

இதுவரை சினிமாவில் ஆக்ஷன் சொன்னதும் தீப்பொறி வசனங்களை பேசிவிட்டு கட் சொன்னதும் தங்கள் சொந்த வேலையைப் பார்க்கப் போய்விடும் ஹீரோக்கள் மத்தியில் உண்மையிலேயே நியாயமான விஷயங்களுக்கு தன் குரலை உயர்த்தும் தர்ஷனை இந்த மக்களுக்குப் பிடித்துப் போனதில் ஆச்சர்யமே இல்லை.

சினிமா எனும் கனவுத் தொழிற்சாலைக்குள் அவர் நுழைந்த பின்னரும் தர்ஷன் இப்படியே இருந்தால் அவரது எதிர்காலம் அவரே எதிர்பார்க்காத உயரத்திற்கு போய்விடும் என்பதில் மாற்றமில்லை.

ADVERTISEMENT

60 நாட்கள் கடந்தும் ஒரே சீராக இருக்கும் தர்ஷனுக்கென்று அவரது தாய்நாட்டிலும் தமிழகத்திலும் லக்ஷக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் புதுப்படக் குழு ஒன்று 50 நாட்களைக் கடந்தும் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் முதல் இடத்தில் இருப்பது குறித்து பெருமைப்பட்டு அதற்காக வாழ்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.

அனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் ..

Twitter

ADVERTISEMENT

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே தர்ஷன் இந்தப் படத்தில் புக் செய்யப்பட்டுவிட்டார் என்றும் தனது முதல் படத்திலேயே காதலி சனம் ஷெட்டியுடன் ஜோடி சேர்கிறார் என்பதும் கூடுதல் தகவல். இந்த திரைப்படத்திற்கு மேகி என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இன்ஸ்டன்ட் சம்பவங்கள் அதிகமாக இந்தப் படத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை பற்றியும் 60 நாட்கள் கடந்து தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருப்பது பற்றி வாழ்த்தியும் அவரது காதலி சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

முதல் சீசன் வின்னர் ஆரவ் நடித்த எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில் இன்னும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷனின் இந்த திரைப்படம் பற்றிய அப்டேட் அவரது வெற்றி வாய்ப்பை அதிகரித்திருக்கிறது. அவரது ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது.

நீங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது தர்ஷன்.. இதே நேர்மையுடன் இதே தீர்க்கத்துடன் உங்கள் பயணத்தை தொடர நாங்களும் உங்களை வாழ்த்துகிறோம்.

ADVERTISEMENT

லாஸ்லியாவிற்கு இதைவிட சிறந்த தண்டனை வேறு என்ன இருக்க முடியும்? பாரபட்சம் காட்டும் Biggboss

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                                      

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                                                    

27 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT