logo
ADVERTISEMENT
home / Bigg Boss
மீண்டும் இரு கிராமங்களாக பிரிந்த பிக் பாஸ் வீடு : பாரம்பரிய கலைகளை கற்கும் போட்டியாளர்கள்!

மீண்டும் இரு கிராமங்களாக பிரிந்த பிக் பாஸ் வீடு : பாரம்பரிய கலைகளை கற்கும் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் (bigg boss) போட்டியில் வெற்றி பெற உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் இவ்வொரு போட்டியாளர்களும் தனக்கு என்ன தகுதிகள் உள்ளது என்பது குறித்து கூற வேண்டும். மற்ற போட்டியாளர்கள் குறுக்கிட்டு கேள்விகள் கேட்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், ஜெயிப்பதற்கு தனக்கு என்ன தகுதி இருக்கிறது என லாஸ்லியா பேசுவதில் தொடங்கியது.

twitter

அவரை தொடர்ந்து சேரன் பேசினார். விட்டுக் கொடுக்கும் பண்பு, சகிப்புத் தன்மை, பிரச்னைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றின் மூலம் தனக்கு பிக் பாஸ் 3 டைட்டிலை ஜெயிப்பதற்கான தகுதி இருக்கிறது என்று குறிப்பிட்டார் சேரன். நான் ஒரு இயக்குநர் என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. கவின், சாண்டி, சரவணன் ஆகிய 3 பேரிடம் நான் அன்பை மட்டுமே தான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் சிரிக்கக் கூட காசு கேட்பது போன்று இருந்தார்கள். எனக்கு யாரிடமும் இணைய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. 

ADVERTISEMENT

லாஸ்லியாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது அன்பால் மட்டும் செய்ததே தவிர, அவர்களுடன் இணைந்து தான் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை. அப்பா – மகள் உறவையும் தாண்டி லாஸ்லியா போராடினால் தான் வெற்றி பெறுவார். அவருக்காக நான் உதவி செய்ய முடியாது என்று வெளிப்படையாக கூறினார். இந்த டாஸ்க்கிற்கு பின்னர் போட்டியாளர்கள் அனைவரையும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நேரடியாக கேள்வி கேட்ட நபர் யார் என்பதை பிக்பாஸ் கேட்டிருந்தார். இதனையடுத்து அனைவரும் ஒருமனதாக வனிதாவை தேர்ந்தெடுத்தனர். 

இதனால் வனிதா அடுத்த வாரம் தலைவர் போட்டிக்கு நேரடியாக பங்கு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. வனிதாவை காப்பாற்ற அடுத்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக அவரை நியமனம் செய்ய பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாயின. இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட வனிதாவை தேர்வு செய்து, அதன் பின்னர் அவரை அடுத்த வார கேப்டனாக நியமனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. வனிதா பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன் ஆகிவிட்டால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

twitter

ADVERTISEMENT

எனவே அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து வனிதா தப்பி மீண்டும் ஒரு வாரம் பிக்பாஸ் (bigg boss)  வீட்டில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை கடைசி வரை பிக்பாஸ் கொண்டு சென்றது போல் இந்த நிகழ்ச்சியிலும் வனிதாவை கடைசி வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே வனிதாவை தேர்ந்தெடுத்த பின்னர், மற்ற போட்டியாளர் அனைவருக்கும் பிக்பாஸ் உண்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். 

அந்த உண்டியலில் யார் அதிகமாக காயின்களை பெறுகிறார்களோ அவர்கள் அடுத்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிடலாம் என்று அறிவிக்கப்படுள்ளது. மேலும் இதற்காக கிராம வாழ்க்கை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் கலையை பயிலும் டாஸ்க் கொடுத்துள்ளனர். கூத்து போன்ற விஷயங்கள் குறித்து போட்டியளர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். அதனை போட்டியாளர்கள் செய்து காட்ட வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி பிக் பாஸ் (bigg boss)  வீடு மீண்டும் இரண்டு கிராமங்களாக பிரிந்தது. 

twitter

ADVERTISEMENT

இதில் சாண்டி, முகென், லோஸ்லியா, வனிதா ஆகியோர் ஒரு குடும்பமாகவும், கவின், சேரன், தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு குடும்பமாகவும் பிரிந்தனர். அதன் பிறகு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டனர். அப்போது லாஸ்லியா தனக்குரிய காஸ்ட்யூமிற்காக கழுத்தில் கருப்பு நிற கயிறு அணிய வேண்டும் என்று கவினிடம் கூறினார். இதையடுத்து கவின், லாஸ்லியா கழுத்தில் கருப்பு நிற கயிறை கட்டினார். வெறும் கயிறு மட்டும்தானா, வேறு எதுவும் மணி இருக்கிறதா என்று லாஸ்லியாவிடம் கவின் கேள்வி எழுப்பினார். 

இந்த காட்சி கவின் – லாஸ்லியா ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. இதையடுத்து மறந்து போன தமிழக கலைகளை மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக போட்டியாளர்களுக்கு நாட்டுப்புற கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதற்காக 5000 கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய காளீஸ்வரன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அவர் பொம்மலாட்டம் குறித்து முக்கியத்துவத்தை பற்றி பேசிய பின்னர் போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார். இதனை ஒவ்வொரு நாளும் தினமும் மாலை நேரத்தில் கிராமத்தினர் அரங்கேற்ற வேண்டும் என கூறப்பட்டது.

twitter

ADVERTISEMENT

இதையடுத்து சேரன் கிராமத்தினர் மது ஒழிப்போம் பற்றியும், வனிதா கிராமத்தினர் கூட்டுக் குடும்பம் பற்றியும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இதில் வனிதா, முகென், லோஸ்லியா, சாண்டி ஆகியோர் கச்சிதமாக நிகழ்ச்சியை அரங்கேற்றி வெற்றி பெற்றனர். சில நாட்களிலேயே இப்படி ஒரு கலையை கற்று அதை செய்துக் காட்டும் போட்டியாளர்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில் இதே டாஸ்க் நடைபெறுவது காட்டப்பட்டுளளது. மேலும் இன்று தெருக்கூத்து குறித்து போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. பின்னர் 4  நபர்களாக பிரிந்து அதனை செய்து காட்ட வேண்டும் என கூறப்படுகிறது. சேரன் மற்றும் வனிதா தெருக்கூத்து நடத்துகின்றனர். அதோ சமயம் லாஸ்லியா அவர் வேடத்தில் இருக்கும் போது சாண்டியை தள்ளிவிட்டு கொஞ்சம் சொதப்புவது போல காட்டப்பட்டுள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
27 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT