முதல்முறையாக நாமினேஷனில் இடம்பெற்றுள்ள ஷெரின் : லாஸ்லியாவை வம்புக்கு இழுத்த வனிதா!

முதல்முறையாக நாமினேஷனில் இடம்பெற்றுள்ள ஷெரின் : லாஸ்லியாவை வம்புக்கு இழுத்த  வனிதா!

பிக் பாஸ் இல்லத்தில் இருந்து கஸ்தூரி வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சி வழக்கம் போல ராசாத்தி... ராசாத்தி... என்ற பாடல்  பாடலுடன் தொடங்கியது. இந்த பாடலுக்கு போட்டியாளர்கள் உற்சாகமாக நடனமாடினர். இதையடுத்து குளிப்பதன் முக்கியத்தும் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று சாண்டிக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி பேசிய சாண்டி, குறைவான நீரில் எப்படி குளிப்பது என்று போட்டியாளர்கள் அனைவருக்கும் பாடம் எடுத்தார். ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் கைக்குட்டையை நனைத்து அப்படியே உடலில் துடைத்த எடுக்க வேண்டும் என்றார். 

சீக்ரெட் ரூம் ஆஃப்சனுக்கு நோ சொல்லிவிட்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் நடிகை கஸ்தூரி!

twitter

இதனை கேட்டு சாண்டியை கலாய்த்த கவின்,  25% தண்ணீர் மட்டும் இருக்கும் நிலையில் எல்லாவற்றையும் காலி செய்து விட்டீர்கள். அப்போது நீங்கள் சோப் நுரையுடன் மட்டும் இருக்கிறீர்கள் எனில் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு சாண்டி அதான் டவல் இருக்கிறதே, அதை வைத்து துடைத்து கொள்ளலாம் என்றார். இதை கேட்ட மற்ற போட்டியாளர்கள் சிரித்தனர். இதையடுத்து கவினும், லாஸ்லியாவும் தனியாக பேசிக் கொண்டிந்தனர். அதனை சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் தொலைவில் இருந்து கவனித்து கொண்டிருந்தனர். 

கடந்த வாரம் இருவரும் மைக்கை ஆஃப் செய்து விட்டு பேசிக்கொண்டிருந்ததாக பிரச்னை எழுந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. ஒவ்வொருவராக கன்பெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது ஷெரின் – கவின் மற்றும் முகென், லாஸ்லியா – வனிதா மற்றும் ஷெரின் (sherin) , தர்ஷன் – கவின் மற்றும் வனிதா, வனிதா – கவின் மற்றும் முகென், கவின் – வனிதா மற்றும் ஷெரின், சேரன் – கவின் மற்றும் முகென் ஆகியோரை தேர்வு செய்திருந்தனர். இறுதியாக இந்த வார நாமினேஷனில் கவின், முகென், வனிதா, ஷெரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக பிக் பாஸ் அறிவித்தார்.

twitter

இதில் ஷெரின் (sherin) முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றார். ஒருவேளை இந்த வாரம் எலிமினேஷன் வைத்திருந்தால் கண்டிப்பாக வனிதா வெளியேறி இருப்பார் என்பது பார்வையாளர்களின் கருத்து கணிப்பு. ஆனால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றும் நாமினேஷன் மட்டும் நடைபெறும் என கமல் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியாது. இதனையடுத்து லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் இது குறித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது லாஸ்லியா நீ நாமினேட் ஆனதற்கு நான் தான் காரணம் என்கிறார். அதற்கு உன்னை காப்பாத்த நினைப்பவர்கள் என்னை உன்னிடமிருந்து பிரிக்க நினைப்பார்கள் என்று கவின் கூறினார். 

பின்னர் நினைவாற்றலை சோதிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒருவர் பேசும்போது அவருக்கு எதிராக மற்றவர்கள் பேசவேண்டும் என்றும் கூறப்பட்டது. இதில் ரெட் அணி, புளூ அணி என்று இரு அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த டாஸ்க்கில் புளூ அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் முதலில் தனக்கு தகுதி இருக்கிறது என்று கவின் பேசினார். இதுவரை பிக்பாஸ் வீட்டில் எப்படி இருந்தேன், இனிமேல் எப்படி இருப்பேன் என்பதற்கான விளக்கம் கொடுத்தார்.

பிக்பாஸ் ஸ்கூல்... பள்ளிக் குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள் : ஆசிரியர்களாக கஸ்தூரி, சேரன்!

twitter

முக்கியமாக நண்பர்கள் குறித்து பேசும் போது இடையில் குறுக்கிட்ட வனிதா, காதல் விவகாரத்தை முன்வைத்தார். லாஸ்லியாவுக்கு வயது குறைவு. அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. கேரியர் இருக்கிறது. அவங்களோட எதிர்காலத்தையும் மனசில் வெச்சு தான் சில விஷயங்களை கேமரா முன்பு சொல்ல வேண்டும் என வனிதா பேசினார். இதனை கேட்ட லாஸ்லியா, எனக்கும் கவின் டைட்டில் ஜெயிப்பதற்கு என்ன சம்பந்தம் என கோபமாக கேட்டுவிட்டார். மேலும் நண்பர்கள் பற்றி மட்டுமே பேசுங்கள். ஏன், என்னையும், அவரையும் பேசுறீங்கள் என்றார். இதனை தொடர்ந்து பேசிய ஷெரின், ஒரு சில இடங்களில் தான் நான் சண்டையிட்டிருக்கிறேன். இந்த போட்டியில் கண்டிப்பாக நான் ஜெயிக்க வேண்டும் என்று நான் வரவில்லை. ஆனால் 50 நாட்களுக்குப் பிறகு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது என கூறினார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த வனிதா : போட்டியாளர்கள் திணறல்!

இந்நிலையில் இன்றை நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த பிக் பாஸ் விடு இரு கிராமங்களாக மாறுவது போல் உள்ளது. அனைவரும் பாரம்பரிய உடையில் இருக்கின்றனர். இந்த பையன் என் கையை பிடித்து இழுத்தான் என கவினை பார்த்து லாஸ்லியா கூறுகிறார். அப்போது நாம் கலாச்சாரத்தை மறந்த வாழ்வதால் அதை கற்று தர ஒரு புதிய நபர் உள்ளே சென்றுள்ளார். அவர் கற்றுத்தருவதை போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கற்றுக்கொண்டு மாலை நேரத்தில் அதனை செய்து காட்ட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது புரொமோவில் கவினும், லாஸ்லியாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் வனிதா, சேரனிடம் புகார் அளிக்கிறார். சேரனும் வனிதாவை மதினி என்றே அழைக்கிறார். இந்த உரையாடலின் போது, கவினை வெளிநாட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என ஐடியா சொல்கிறார் வனிதா. அங்கு இரண்டு மூன்று வருடங்கள் இருந்து விட்டு வரட்டும் என்கிறார். மேலும் சனிக்கிழமை வருபவரோடு கவினை அனுப்பி வைத்து விடலாம் என சொல்லி சிரிக்கிறார். வனிதாவின் இந்த ஜாடைமாடைப் பேச்சை கேட்டு ஷெரினும், வனிதாவுடன் சேர்ந்து சிரிக்கிறார். வனிதா கவினை வெளியே அனுப்பிவிட வேண்டும் என திட்டமிடுகிறார்.

மூன்றாவது புரோமோவில் லாஸ்லியாவிடம் சேரனை நாமினேட் செய்த பின்னர் அழுதது குறித்து தர்ஷன் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய லாஸ்லியா, சேரனை நாம் நாமினேட் பண்ண நினைக்கவில்லை என கூறினார். அப்போது பேசிய சேரன், உன்னை யாரும் நாமினேட் பண்ணுமாறு கூறினார்களாக என கவினை குறிவைத்து கேட்டார். அதற்கு லாஸ்லியா இல்லை என கூறினார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.