சரியாக தூங்கும் நிலை – நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்!

சரியாக தூங்கும் நிலை – நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்!

இன்றைய விரைவாக ஓடும் உலகில், அனைவரும் இழந்து தவிப்பது தூக்கம் தூங்க சிறிது நேரம் கிடைத்தாலும், அந்த நேரத்திலும் சரியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முதலில் உங்களுக்கு இருக்கும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், உடலில் இருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் சரியான படுக்கை வசதிகள் இல்லாதது.

உங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைத்து விட்டால், நீங்கள் எந்த சூழலிலும் நல்ல தூக்கத்தைப் பெறலாம். இந்த தொகுப்பு, உங்களுக்கு பல அறிய தகவல்களையும், எப்படி நல்ல தூக்கத்தைப் பெறுவது என்கின்ற குறிப்பையும் தரும். தொடர்ந்து படியுங்கள்!

 

Table of Contents

  pixabay

  பல விதமான தூங்கும் நிலைகள் (Different Sleep Positions / Postures)

  அனைவரும் ஒரே நிலையில் தூங்குவதில்லை (Sleeping). ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேர்ப்பவும், தூங்கும் இடதிர்கேர்ப்பவும் தூங்குகின்றார்கள். பல தூங்கும் நிலைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில தகவல்கள்;

  • விட்டத்தை பார்த்து முதுகை தரையில் நன்கு படிய செய்து கைகளை இரு பக்கங்களிலும் வைத்து தூங்கும் நிலை
  • முதுகு தரையில் படிந்து கைகளை உடலுக்கு மேல் வைத்து தூங்கும் நிலை
  • முகமும், வயிற்று பகுதியின் தரையில் படியுமாறு குப்பறப் படுப்பது
  • பக்க வாட்டில் சாய்ந்து கால்கள் இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்து தூங்கும் நிலை
  • பக்க வாட்டில் சாய்ந்து கைகள் இரண்டையும் பக்க காட்டில் வைத்துக் கொள்வது
  • பக்க வாட்டில் சாய்ந்து கைகள் இரண்டும் வெளி புறமாக அகன்று இருப்பது

  இந்த ஒவ்வொரு நிலையம் உங்கள் உடல் நிலை மற்றும் மன நிலையை பிரதிபலிக்கும். மேலும் இது உங்கள் குணங்களையும் பிரதிபலிக்கும். நீங்கள் தினமும் தூங்கும் நிலையைக் கொண்டு, நீங்கள் எப்படிப் பட்ட குணங்களைக் கொண்டவர் என்று கண்டரிந்துக் கொள்ளலாம்.

  pixabay

  தூங்கும் போது உடல் எப்படி புத்துணர்ச்சி பெறுகின்றது? (How Body Rejuvenates While Sleeping)

  இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும், ஏன் மரங்களும் கூட ஒரு நாளைக்கு சிறு மணி நேரமாவது தூங்குகின்றன (Sleeping) . தூக்கம் ஒரு ஜீவன் புத்துணர்ச்சியோடு செயல் பட உதவுகின்றது. தூங்கும் போது தான் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, உடலும், மூளையும் தன்னைத் தானே சரி செய்து கொள்கின்றது. மேலும் ஆத்மாவும் தன்னை அடுத்த நிலைக்கு தயார் செய்து கொள்கின்றது. நல்ல தூக்கம் உடல், மனம் மற்றும் ஆன்மா, ஆகிய அனைத்தும் ஒரு நிம்மதியான நிலைக்கு செல்ல உதவுகின்றது.

  தூங்கும் போது எப்படி உங்கள் உடல் புத்துணர்சி பெறுகின்றது என்று இங்கே பார்க்கலாம்;

  • அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை உடல் தன்னை சரி செய்து கொள்ளும் வேலையை செய்கின்றது. இந்த நேரத்தில் உடலில் ஏதாவது பாதிப்புகள் இருந்தால், அது சக்தி பெற்று குணமடைய இந்த நேரம் ஏற்ற நேரமாக இயற்கையில் உருவாக்கப் பட்டிருகின்றது.
  • தூங்கும் போது தசைகளும், எலும்புகளும் வளர்ச்சி அடைகின்றன. இதனால் ஏதாவது பலவீனம் எலும்புகளிலும், தசைகளிலும் இருந்தால், அது தானாக குணமடையும் வாய்ப்பு உண்டாகின்றது.
  • மனித உடலுக்கு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. எனினும் இந்த சக்தியை ஒருவர் நன்கு தன்னை மறந்து தூங்கும் போது பெறுகின்றார். அப்படி தூங்கும் போது பல நோய்கள் நம்மை அறியாமலும் குனமாகின்றது.

  மேலும் படிக்க - பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

  pixabay

  • சுரபிகள் சீர் பெறுகின்றன. உடலில் சுரக்கும் ஸ்ரபிகள் தூங்கும் போது சீரான நிலைக்கு வருகின்றன. இதனால் எந்த சுரபியாக இருந்தாலும், அது ஒரு சரியான நிலையில் சுரக்கத் தொடங்கும்
  • அணுக்கள் உற்பத்தியாகும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது புதிய அணுக்கள் உற்பத்தி ஆகின்றது. இதனால் உடலில் ஏதாவது காயங்கள் இருந்தால் அல்லது நோய் ஏற்பட்டிருந்தால், இந்த புது அணுக்களின் உற்பத்தி அதனை குணப்படுத்தி விடுகின்றது.
  • இருதயம் அமையாகும். நன்கு தூங்கும் போது, இருதயம் அதிகம் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்காது. இதனால் இருதயத்திற்கும் அதிக வேகமாங்க துடிக்கும் தேவை குறைந்து, அமைதியாக செயல் படும். இதனால் உடல் முழுவதும் சீராக இரத்த ஓட்டம் ஏற்படும்
  • இரவில் நன்கு தூங்கும் போது உடல் எடையும் சீராகின்றது. இதனால், உடல் எடையால் அவதிப் படுபவர்கள் கூட, நல்ல ஆரோக்கியத்தோடு இருகின்றார்கள்

  நல்ல தூக்கம் பெற வெவ்வேறு தூங்கும் நிலை (Different Sleep Position to Get Peaceful Sleep)

  உங்களுக்கு சரியாக தூக்கம் வரவில்லையா? நீங்கள் எப்படி படுத்தால் நல்ல தூக்கத்தைப் (Sleeping) பெறலாம் என்று சிந்தித்துக் கொண்டிருகின்றீர்களா? அப்படியென்றால் உங்களுக்காக இங்கே சில பயனுள்ள குறிப்புகள். தொடர்ந்து படியுங்கள்;

  1. பின்னால் சாய்ந்து படுப்பது:

  இந்த நிலையில் வீட்டின் விட்டத்தை பார்த்தவாறு, முத்துத் தண்டு தரையில் படியுமாறு நேராக படுக்க வேண்டும். இப்படி படுக்கும் போது, உங்கள் தலை, கழுத்து மற்றும் முதுக ஒரு நல்ல நிலையில் இருக்கும். இது உங்கள் உடலுக்கு ஓய்வு கிடைக்க உதவும். மேலும் இரவு உணவு உண்ட பின் படுக்கைக்கு செல்லும் போது, உணவும் சரியாக ஜீரணமாக இந்த நிலை உதவும். 

  மேலும் படிக்க - பெண்களுக்கான அழகு பொருட்கள் – எப்படி சரியான அழகுப் பொருட்களை தேர்வு செய்வது?

  2. பக்கவாட்டில் படுப்பது:

  இந்த நிலையில் வலது புறம் அல்லது இடது புறம் திரும்பி பக்கவாட்டில் சாய்ந்து படுப்பதாகும். இந்த நிலையில் படுக்கும் போது முழு உடலும் ஓய்வு பெற்று, நல்ல ஆரோக்கியமும் பெரும். இது குறட்டை வருவதை தடுக்க உதவும். மேலும் முதுகு தண்டுக்கு ஓய்வு கிடைக்கவும் இது உதவும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களை சீராக சுரக்க செய்ய இந்த நிலை உதவும். இந்த நிலை கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது. வலது புறம் சாய்ந்து படுப்பது முதுகு தண்டுக்கு பலன் தரும். இடது புறம் சாய்ந்து படுப்பது நுரையீரல் மற்றும் கல்லீரலுக்கு ஏற்றது அல்ல.

  pixabay

  3. வயிற்றின் மீது படுப்பது:

  இந்த நிலை குப்பற படுத்து உங்கள் வயிறு தரையில் படிந்து அமுங்கும் படி படுப்பதைக் குறிக்கும். இப்படி படுக்கும் போது கைகளும் உங்கள் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும். இது உங்கள் முதுகு சற்று தளர உதவும். இது உங்கள் உடலுக்கு ஒரு மசாஜ் தந்தது போன்ற உணர்வைத் தரும்.

  4. கால்களை மடக்கிக் கொண்டு விட்டத்தை பார்த்து படுப்பது:

  இந்த நிலையில் ஒருவர் முதுகு தண்டு தரையில் படியும் படி படுத்து, கால்களை மடக்கி வைத்துக் கொள்வதைக் குறிக்கும். இந்த நிலையில் தூங்கும் போது இடுப்பு பகுதிக்கு நல்ல ஒரு அழுத்தம் கிடைக்கும். இது மசாஜ் செய்வது போல இருக்கும். மேலும் கால்களை மடக்கி வைத்துக் கொள்ளும் போது உங்கள் கால்குக்கு சற்று தளர்ச்சியை உண்டாக்கி, நீண்ட நேரம் நீங்கள் நடந்ததால் அல்லது நின்றதால் உண்டான வலியை போக்க உதவும்.

  5. படுக்கையை போர்க்கலமாக்குவது:

  இந்த நிலையில் நீங்கள் ஒரு போர் வீரரை போல பல நிலைகளில் உங்களை கிடத்தி தூங்குவீர்கள். இது ஒரு நிலையான நிலையை குறிக்காது. எனினும், உங்கள் வசதிகேற்ப அவ்வப்போது நிலையை மாற்றும் போது, முழு உடலுக்கும் தேவையான ஓய்வு கிடைகின்றது, மேலும் நல்ல உறக்கமும் கிடைகின்றது.

  pixabay

  சிறந்த தூங்கும் நிலைகள் (Best Sleep positions)

  நல்ல தூக்கம் பெற வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்கின்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அது தெரிந்து விட்டால், நிச்சயம் அனைவரும், சில மணி நேரமாவது நல்ல தூக்கத்தை தினமும் பெறலாம். அப்படி நீங்கள் ஒரு நல்ல தூங்கும் நிலையை எதிர் பார்த்து தேடிக் கொண்டிருந்தாள், இங்கே உங்களுக்காக, சில நிலைகள்:

     மேலும் படிக்க - எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

  1. இயல்பாக படுப்பது (The Fetal Position) :

  இந்த நிலையில் ஏறத்தாள 7% மக்கள் தூங்குகின்றனர். இந்த நிலையில் வயிற்று பகுதி சற்று தரையில் சாய்ந்து, தலை பக்க வாட்டில் திரும்பி படுத்திருப்பார்கள். இந்த நிலையில் பலர் தலையணையை கட்டி அணைத்தப்படி படுத்திருப்பார்கள்.

  2. போர் வீரர் நிலை (The Soldier Position) :

  இந்த நிலையில் சுமார் 8% மக்கள் தூங்குவார்கள், இந்த நிலையில் முதுகு நன்கு தரையில் பதிந்து, கைகள் இரண்டும் நேராக பக்க வாட்டில் உடலுக்கு அருகில் வைத்த வாறு தூங்குவார்கள். இந்த நிலையில் படுத்தால் குறட்டை வருவது நிச்சயம். இதனால் சரியான தூக்கமும் இல்லாமல் போகலாம்.

  3. நட்சத்திர மீன் ( The Starfish Position) :

  இந்த நிலையில் சுமார் 5% மக்கள் தூங்குவார்கள். இந்த நிலையில் முதுகு தரையில் படியும் படி படுத்துக் கொண்டு கால்கள் மற்றும் கைகள் நன்கு அகண்டு விரிந்து வைத்த படி தூங்குவார்கள். இப்படி தூங்குபவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும் இது குறட்டை உண்டாகும் சாத்தியங்களையும் அதிகமாக்கும்.

  pixabay

  4. கருவில் இருக்கும் குழந்தைப் போல (Freefall position) :

  இந்த நிலையில் சுமார் 41% மக்கள் தூங்குவார்கள். இந்த நிலையில் பக்க வாட்டில் திரும்பி, முட்டி கால்களை மடக்கி தூங்குவார்கள். இது குழந்தை தவழும் வடிவத்திலும் இருக்கும். ஆண்களை விட அனேக பெண்கள் இந்த நிலையில் தூங்குவார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும், ஏனென்றால், இது குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்க இந்த நிலை உதவும்.

  5. பக்கவாட்டில் நேராக படுப்பது (The Yearner Position) :

  இந்த நிலையில் கால்கள் மற்றும் கைகளை மடக்காமல், அப்படியே நேராக உடலோடு ஒட்டிக் கொண்டு பக்க வாட்டில் தூங்குவார்கள். இப்படி சுமார் 15% மக்கள் தூங்குவார்கள். இந்த நிலை குறட்டை விடுபவர்களுக்கு ஒரு நல நிலையாகும். ஆனால் மூட்டு வலி இருப்பவர்களுக்கு இது ஏற்ற நிலை அல்ல.

  6. தேக்கரண்டி நிலை (The Spooning Position) :

  இந்த நிலையில் பொதுவாக தம்பதியினர் தூங்குவார்கள். ஒரவர் பின் ஒருவர் நெருக்கமாக அணைத்த வாறு, படுத்துக் கொள்வார்கள். மேலும் பக்கவாட்டில் சாய்ந்து படுப்பதால் உடல் நல்ல தளர்ச்சியைப் பெற்று, அமைதியான தூக்கம் கிடைகின்றது. இது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

  pixabay

  வெவ்வேறு உடல் நல பிரச்சனை இருப்பவர்களுக்கு ஏற்ற தூங்கும் நிலைகள் (Sleep Position for People With Each Health Problem)

  ஒருவர் தூங்கும் நிலை அவர் உடலில் இருக்கும் பிரச்சனைகள் குறையவும் அதிகரிக்கவும் காரணமாக உள்ளது. அதனை ஓரளவிர்க்கயினும் நீங்கள் தெரிந்து கொண்டால், முடிந்த வரை உடலில் ஏற்படும் பிரச்சனைகளை, சரியான தூங்கும் நிலையைக் கொண்டே நீங்கள் சரி செய்து விடலாம். அப்படி நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில குறிப்புகள்;

  1. சைனஸ் இருப்பவர்களுக்கு (Sleep Position for Sinus):

  சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், ஒரு தலையை அதிகமாக தலைக்கு உயரம் வைத்து தூங்கலாம். இதனால் உங்கள் மூக்கு அடைக்காமல் எளிதாக சுவாசிக்க உதவும். தூக்கமும் நன்றாக வரும்.

  2. நெஞ்செரிச்சல் இருப்பவர்களுக்கு (Sleep position for heartburn):

  உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருக்கின்றது என்றால், நீங்கள் இடது பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும், இந்த நிலை கீழ் உணவுக் குழாய் சுழற்சியில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் நல்ல பலனைப் பெற நீங்கள் உங்கள் கைகளை உங்கள் முகத்திற்கு நேர் வருபடி பக்க வாட்டில் சாயந்து வைத்து தூங்கலாம். மேலும் கால்களை சற்று மேலே தூக்கியவாறு மடக்கி குழந்தை போல தூங்கலாம்.

  3. முதுகு வலி இருப்பவர்கள் (Sleep Position for Hip Pain) :

  உங்களுக்கு முதுகு வலி இருந்தால், நீங்கள் பக்கவாட்டில் சாய்ந்து கால்களை உங்கள் உடலின் கனத்தை தாங்கும் படி வசதியாக வைத்து தூங்கலாம். அதாவது உங்கள் இடுப்பிற்கு நேராக கால்களை மடக்கி தூங்கலாம். சற்று வசதியாக இருக்க, ஒரு தலையணையை கால்களுக்கு இடையே வைத்துக் கொள்ளலாம்.

  pixabay

  4. தோள்களில் வலி இருப்பவர்கள் ( Sleep Position for Shoulder Pain):

  உங்களுக்கு தோள்களில் வலி ஏற்பட்டால் உங்கள் பக்க வாட்டில் சாய்ந்து, மெதுவாக கால்களை மடக்கி தூங்க வேண்டும். இரண்டு கைகளையும் ஒரு தலையணையை அணைத்தவாறு வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இரண்டு தோள்களும் வலிக்கும் போது நீங்கள் முதுகுத் தண்டு தரையில் படியும் படி நேராகப் படுக்கலாம்.

  5. கர்ப்பிணி பெண்கள் தூங்கும் நிலை (Sleeping positions for Pregnant Womens):

  கர்ப்பிணி பெண்கள் எப்போதும் இடது புறம் சாய்ந்து தூங்குவது நல்லது. இது இரத்த ஓட்டம் சீராக இருக்கவும், உடலுக்கு தேவையான ஓய்வு எளிதாக கிடைக்கவும் உதவும். மேலும் குழந்தைக்கும் இது பலனளிக்கும். ஒரு தலையணையை நீங்கள் உதவிக்கு பக்கவாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

  pixabay

  6. இடுப்பு வலி இருப்பவர்களுக்கு (Sleep Position for Back Pain):

  உங்களுக்கு இடுப்பு வலி இருந்தால், நீங்கள் முதுகு தரையில் படியும் படி நேராக விட்டத்தை பார்த்தவாறு படுக்கலாம். இது உங்கள் முதுகுத் தண்டை நேராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, சிறிது அழுத்தத்தையும் இடுப்பு பகுதிக்குத் தரும். இதனால் மிதமாக மசாஜ் செய்தது போல உங்கள் இடுப்பிற்கு இருக்கும். மேலூம் நல்ல தூக்கமும் வரும்.

  7. கழுத்து வலி இருப்பவர்கள் (Sleep Position for Neck Pain) :

  உங்களுக்கு கழுத்து வலி இருந்தால், சரியான தலையணையை முதலில் தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் கழுத்து வலியை போக்க உதவும். எனினும், கழுத்து வலி இருப்பவர்கள் தலையை நேராக வைத்து விட்டத்தை பார்த்தபடி படுக்க வேண்டும். அதிக உயரம் இருக்கும் தலையணையை தவிர்ப்பது நல்லது.

  8. முட்டி வலி இருப்பவர்கள் (Sleep Position for Knee Pain) :

  உங்களுக்கு முட்டி வலி இருந்தால், இரண்டு கால்களுக்கும் இடையே ஒரு தலையணை வைத்து தூங்கலாம். இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று உரசாமல், குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டு பகுதிகள் ஓரசாமல் வைத்து தூங்குவது நல்லது. இது வலியையும் குறைக்க உதவும்.

  9. குறட்டை விடுபவர்களுக்கு (Sleep Position for Snoring) :

  நீங்கள் தூங்கும் போது அதிகம் குறட்டை விடுபவராக இருந்தால் நேராக படுப்பதை தவிர்க்க வேண்டும். பக்கவாட்டில் சாய்ந்து, சரியான அளவு தலையணை வைத்து தூங்க வேண்டும். இப்படி படுத்தால், அதிக அளவு குறட்டை ஏற்படாமல் தடுக்கலாம்.

  pixabay

  11. முகத்தில் சுருக்கம் இருப்பவர்கள் (Sleep position for wrinkles):

  நீங்கள் தூங்கும் நிலையம் உங்கள் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட காரனாக இருக்கலாம். இதற்கு காரணாம் நீங்கள் அதிகம் ஒரு பக்கமாக, இடது புறம் அல்லது வலது புறம் சாய்ந்து படுத்தால், அந்த பக்கத்தில் உங்கள் முகத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படும். அதனால், சுருக்கங்களும் உண்டாகின்றது. இதனை தவிர்க்க நீங்கள் நேராக படுக்கலாம்.

  12. தலை வலி இருப்பவர்கள் (Sleep Position for Head Pain):

  உங்களுக்கு அதிகம் தலை வலி ஏற்படும் என்றால், நீங்கள் உயரம் குறைந்த தலையணை அல்லது தலையணை இல்லாமல் நேராக படுக்க அல்லது உங்கள் உடலையும், தலையையும் வசதியான ஒரு நிலையில் வைத்துக் கொண்டு தூங்கலாம். இப்படி முயற்சி செய்யும் போது, ஓரளவிர்க்காயினும் தலை வலி குறையும்.

  13. மேல் முதுகுத் தண்டில் வலி இருப்பவர்கள் (Sleep Position for Upper Back Pain) :

  உங்களுக்கு மேல் முதுகு தண்டில் வலி இருந்தால், நீங்கள் ஒரு நல்ல மிருதுவான தலையணையை உங்கள் தலைக்கு கீழ் பகுதியில் வைத்துக் கொண்டு, பக்க வாட்டில் சாய்ந்தவாறு படுக்க வேண்டும். மேலும் ஒரு தலையணையை உங்கள் கால்களுக்கு இடையே வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தூங்கினால் நல்ல தூக்கம் வரும்.

  14. விலா வலி (Sleep Position for Rib Pain) :

  உங்களுக்கு விலா எலும்பில் வலி ஏற்பட்டால் போதுமான தலையணையை உங்கள் அனைத்து பக்கங்களிலும் வைத்துக் கொண்டு, அதிகம் திரும்பாமல் பாதுகாப்பான ஒரு நிலையில் தூங்க முயற்சி செய்யலாம்.

  15. கைகளில் வலி இருப்பவர்கள் (Sleep Position for Arm Pain) :

  உங்களுக்கு கைகளில் வலி இருந்தால், உங்கள் கைகளுக்கு உதவியாக தலையணைகளை வைத்துக் கொண்டு தொங்கலாம். நல்ல மிருதுவான் தலையணை மீது கைகளை வைத்துக் கொண்டு தூங்கலாம். இது வலியை குறைக்க உதவும்.

  pixabay

  16. கணுக்கால் வலி (Sleep Position for Ankle Pain) :

  உங்களுக்கு கணுக்காலில் வலி இருந்தால் ஒரு தலையணையை உங்கள் கணுக்காலுக்கு வைத்து, ஒரு மிருதுவான உணர்வை உண்டாகி தூங்க முயற்சி செய்யலாம். இது வலியை குறைக்க உதவும்.

  நீங்கள் தூங்கும் நிலையம் உங்கள் குணங்களும் (Sleeping Posture and Personality)

  ஒருவர் தூங்கும் நிலையை வைத்தே அவர் எப்படி பட்ட குணங்களை கொண்டவர் என்று கூறி விடலாம். அப்படி நீங்கள் உங்கள் குணங்களை பற்றியோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் அன்பானவர்களின் குணங்களை பற்றியோ அவர்கள் தூங்கும் நிலையைக் கொண்டு தெரிந்து கொள்ள விரும்பினால், இங்கே உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்கள்:

  • நட்சத்திர வடிவில் கைகள் மற்றும் கால்களை நன்கு விரித்து பரந்த நிலையில் வைத்து தூங்குபவர்கள் நம்பிக்கைக்குரியவர்கலாவார்கள், மேலும் இவர்களுக்கு நல்ல தொடர்பு கொள்ளும் திறனும் இருக்கும். வெளிப்படையாக மனம் விட்டு பேசுபவர்களாக இருப்பார்கள்.
  • குழந்தை போல தூங்குபவர்கள் அதிக அமைதியாகவும், அதிக கவனத்தோடும் இருப்பார்கள். யாரிடமும், குறிப்பாக புதிதாக அறிமுகம் ஆபவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.  வெளி தோற்றத்தில் கடினமானவர்கள் போல தெரிந்தாலும், மிகவும் மென்மையான இதயம் கொண்டவர்கள்.
  • பக்கவாட்டில் தூங்குபவர்கள், கால்கள் மற்றும் கைகளை நேராக வைத்துக் கொண்டு தூங்குபவர்கள் அனைவரிடமும் நன்கு பழகும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரிடத்திலும் நன்றாக பேசுவார்கள் ஆனால், ஒரு கூட்டத்தில் பேச மாட்டார்கள். மேலும் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருப்பார்கள்.
  • இராணுவ வீரரை போல நேராக தூங்குபவர் அமைதியாகவும், உறுதியான மனதோடும், மற்றும் தன் சொந்தங்களிடம் அதிகம் அக்கறையோடும் இருப்பார்கள். எதையும் கவனத்தோடும், உறுதியாகவும் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
  • வயிற்றின் மீது சாய்ந்தவாறு தூங்குபவர்கள் அதிக விளையாட்டுத் தனமாகவும், குறும்புத் தனம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு அதிகம் சாகசங்கள் பிடிக்கும். 
  • குழந்தைப் போல தூங்குபவர்கள் எதையும் எளிதாக நம்பி விடக்கூடிய குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரிடமும் உடனடியாக பழகி விடமாட்டார்கள்.
  pixabay

  நல்ல தூக்கம் பெற சரியான தலையணையை எப்படி தேர்வு செய்வது? – குறிப்புகள் (How to Select Best Pillow for Sleeping? - Tips )

  நல்ல தூக்கம் வேண்டும் என்றால், அதற்கு சரியான நிலையில் படுப்பது மட்டும் போதாது, மேலும் நீங்கள் ஒரு நல்ல தலையணையையும் தேர்வு செய்ய வேண்டும். ஒரு சரியான தலையணையை தேர்வு செய்ய இங்கே சில குறிப்புகள் உங்களுக்காக:

  • சரியான உயரம் இருக்க வேண்டும். அதிக உயரம் கொண்ட தலையணையை தவிர்ப்பது நல்லது. அது கழுத்து வலி, தலை வலி போன்ற உபாதைகளை உண்டாக்கக் கூடும்.
  • சரியான அளவு இருக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் தலையணை சரியான அளவில் இருக்க வேண்டும். மிக சிறியதாக இருந்தால், நீங்கள் திரும்பி படுக்கும் போது அது சில அசௌகரியத்தை உண்டாக்கக் கூடும்.
  • இயற்க்கை பொருட்களை கொண்டு செய்யப்பட்ட தலையணை வாங்க வேண்டும். பருத்தி, இளவம் பஞ்சு மற்றும் சனல், பறவை சிறகுகள் போன்ற இயற்க்கையனா பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்ட தலையணைகளை பயன் படுத்துவது நல்லது.
  • நெகிழி போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட தலையணையை தவிர்க்க வேண்டும். இது பல இன்னல்களை உடலுக்கு ஏற்படுத்தக் கூடும்.
  • தலையணை கணம் குறைந்ததாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டும்.
  • அதிக அழுத்தம் தரக்கூடியதாக இருக்கக் கூடாது.
  pixabay

  எப்படி சரியான மெத்தையை தேர்வு செய்வது? – குறிப்புகள் (How to choose Right Mattress for Sleeping? - Tips )

  ஒரு நல்ல தலையணையை தேர்வு செய்த பின், நல்ல மெத்தையை தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்;

  • இளவம் பஞ்சினால் ஆன மெத்தைகளை அதிகம் பயன் படுத்துவது நல்லது. இது சூட்டை குறைத்து, உடலுக்கு மிதமான உணர்வைத் தரும்.
  • அதிக கணம் உடையதாக இருக்கக் கூடாது. மேலும் மெதுவாகவும், உங்கள் உடலுக்கு நல்ல சுகமான உணர்வை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  •  செயற்கையாக தயார் செய்த பஞ்சினால் செய்யப்பட்ட – குஷன் போன்ற மெத்தைகளை தவிர்பப்து நல்லது.
  • சரியான அளவு மெத்தையை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அடர்ந்த கனமாகவோ அல்லது மெல்லிய கனமானதாகவோ மெத்தைகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • நீங்கள் வாழும் இடத்தின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு ஒரு மெத்தையை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் உடல் முழுவதும் சௌகரியமாக தூங்கும் வகையில் மெத்தையின் நீளம் மற்றும் அகலம் இருக்க வேண்டும்.
  pixabay

  கேள்வி பதில்கள் (FAQ's)

  1. எப்படி தூங்குவது ஆரோகியமான தூக்கம்? (What is the healthiest way to sleep?)

  விட்டத்தை பார்த்து, முதுகு தண்டு தரையில் படிந்து கால்கள் மற்றும் கைகள் தளர்வாக ஓய்வு பெரும் வகையில், தலை சரியான நிலையில் வைத்து தூங்குவது சரியான நிலை. இது நல்ல ஆரோகியத்தையும் தரும்.

  2. வயிற்று பகுதி தரையில் வைத்து வயிறு அமுங்கும் படி தூங்குவது நல்லதா? (Is it Bad to Sleep on Your Stomach?)

  இது குறட்டை விடுவதை குறைத்து, நல தூக்கத்தை வர செய்தாலும், உங்களுக்கு கழுத்து வலி மற்றும் முதுகு வலி இருந்தால், இது ஒரு சரியான நிலையாக இருக்காது.

  3. இடது பக்கம் அல்லது வலது பக்கம், எந்த பக்கம் சாய்ந்து தூங்குவது நல்லது? (Is it Better to Sleep on Left or Right Side?)

  வலது பக்கம் சாய்ந்து படுக்கும் போது உடலில் அமிலங்கள் சுரக்கும் தன்மை பாதிக்கப்படுகின்றது. ஆனால் இடது பக்கம் படுக்கும் போது இரத்த ஓட்டம் சீராக இருகின்றது, இதனால் ஆரோக்கியம் அதிகரிகின்றது, மேலும் ஜீரணமும் சீராக நடகின்றது.

  pixabay

  4. தலையணை இல்லாமல் படுக்கலாமா? (Is it Better to Sleep With or Without a Pillow?)

  அதிக உயரமான தலையணை வைத்து படுப்பது நல்லது அல்ல. மாறாக நீங்கள் தலையணை இல்லாமலோ அல்லது ஒரு மெல்லிய தலையணை வைத்துக் கொண்டோ தூங்கலாம். இது உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்க உதவும்.

  5. இரவில் தூங்க எது நல்ல தூங்கும் நிலை? (What is the Best Sleeping Position at Night?)

  முதுகு தரையில் படிய, விட்டத்தை பார்த்து, முட்டி கால்களுக்கு தலையணை வைத்து தூங்குவது ஒரு நல்ல நிலையாக இருக்கும். இந்த நிலையில் உங்கள் முதுகுத் தண்டு நேராக இருக்கும் ,மற்றும் உடலில் அழுத்தமும் குறையும்.

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.