அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா ?வரலக்ஷ்மி வழிபாடுசெய்யுங்கள் !

அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா ?வரலக்ஷ்மி வழிபாடுசெய்யுங்கள் !

கேட்கும் வரங்களை எல்லாம் நமக்கு அருளும் தாய் தான் வரலக்ஷ்மி அம்மன். பொதுவாக பெண்களின் மாங்கல்ய பலம் வேண்டியே இந்த வரலக்ஷ்மி பூஜை நடப்பதாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதனையும் தாண்டி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அஷ்ட லக்ஷ்மிகளின் அருளையும் நமக்கு அளிக்க வல்லது வரலக்ஷ்மி பூஜை. ஆடி அமாவாசை முடிந்து பௌர்ணமிக்கு நடுவில் வருவதுதான் வரலக்ஷ்மி பூஜை (varalakshmi poojai).

வரலக்ஷ்மி பூஜை அன்று மாங்கல்ய பலம் மட்டும் வேண்டாமல் அஷ்ட லக்ஷ்மிகளின் அருள்பார்வை பெறவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

Youtube

வீண் பழிகள் , துரோகங்கள், உடன் பழகியவரின் பழிவாங்கல் நடவடிக்கைகள் போன்ற சொல்ல முடியாத பலவேறு துன்பங்களால் நாம் உழன்று கொண்டிருப்போம். இந்த நேரங்களில் நமக்குத் துணையாக இருந்து நமது துன்பத்தை போக்குபவள் ஆதி லக்ஷ்மி.

இந்த உலகில் நமக்கான பிடிப்பு என்றால் அது உறவுகள்தான். அதிலும் தொப்புள் கொடி உறவு என்பதுதான் உறவுகளில் ஆக சிறந்த உறவு. நமக்கான சந்தான பாக்கியத்தை அருள்பவள்தான் சந்தான லக்ஷ்மி தாயார்.

ஞானம் என்பது இல்லாவிட்டால் எல்லாம் இருந்தும் நாம் எதுவும் இல்லாதவர்கள்தான். படித்தவர்கள் எல்லாம் ஞானம் அடைந்து விட முடியாது. அந்த அறிவைக் கொண்டு அடுத்தவரை நேசிக்கவும் முடியும், அதீத அறிவினால் மற்றவர் மனம் நோக செய்யவும் முடியும். இந்த கெடுதல் எண்ணங்களை நீக்கி நமக்கு ஞானத்தை வழங்குபவர் வித்யாலக்ஷ்மி.

நம்மை இந்த பூமியில் உயிரோடு வைத்திருக்க உதவுவது உணவு. வீட்டில் எப்போதும் தானியம் நிறைந்து இருக்க வேண்டும். எப்போதும் நம் வீட்டிற்கு யார் வந்தாலும் வயிறார உணவு கொடுத்து அனுப்ப வேண்டும். அதற்காக நம் வீட்டில் எப்போதும் தானியம் நிறைந்திருக்க அருள்புரிபவள் தான்ய லக்ஷ்மி.

Youtube

இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்கள் தான் நம் முதுகில் குத்தும் துரோகிகள். அவர்கள் நம் மீது வீண் பழி சொல்லுதல் ,நம்மைப் பற்றிய அவதூறு பேசுதல் போன்ற துரோகங்களை செய்யும்போது நம்மையறியாமல் நாம் நடுங்குவோம். நல்லவளை ஏன் சோதிக்கிறாய் என்று புலம்புவோம். அந்த நேரத்தில் நமக்குத் தைர்யம் தந்து நம் துயர்களைக் களைபவள் தைர்ய லக்ஷ்மி.

கடவுளின் அனுக்கிரகம், தூய்மையான மனம், யாருக்கும் தீங்கு விளைவிக்காத செயல்கள் பொய் சொல்லாத உதடுகள் இவற்றைப் பெற்ற நாம் எது செய்தாலும் அது வெற்றியில் முடிய நமக்கு அருள் தருபவள் விஜய லக்ஷ்மி .

இந்த அஷ்ட லக்ஷ்மிகளின் அத்தனை குணமும் ஒன்றாக பெற்றவள் நம் மாங்கல்ய பலம் காக்கும் வரலக்ஷ்மி தாயார். தீர்க்க சுமங்கலியாக வாழ்வது என்பது மிகப் பெரிய பேறு. மாங்கல்யத்தின் அருகாமை நம் வாழ்வை பாதுகாப்பாக அழைத்து செல்லும் கதகதப்பான கைகளை நமக்குத் துணையாக தரும்.

ஆகவே வரலக்ஷ்மி பூஜை நாளான இன்று வீடுகளில் பூஜை செய்து அஷ்டலக்ஷ்மிகளின் அனுக்கிரகத்தை பெறுங்கள். முடியாதவர்கள் கோயிலுக்கு சென்று அம்மன் அருளை அடைந்திடுங்கள்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                                       

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.