கடலை பருப்பின் உடல் நல சரும பலன்கள் மற்றும் தலைமுடிக்கான பலன்கள்!

கடலை பருப்பின் உடல் நல சரும பலன்கள் மற்றும் தலைமுடிக்கான பலன்கள்!

கடலை பருப்பை(chana daal) பற்றி நிச்சயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சமையலுக்கு மட்டுமின்றி இதனை பழங்காலத்தில் இருந்து சரும பாதுகாப்பிற்கும், தலை முடி நன்கு வளர்வதற்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடலை பருப்பில் அதிக சத்துக்கள் நிறைந்துல்லாது. இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். கடலை பருப்பு எப்படி உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருகின்றீர்களா? அப்படியானால், தொடர்ந்து படியுங்கள், இங்கே உங்களுக்காக பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் அடங்கியுள்ளது.

Table of Contents

  கடலை பருப்பில் நிறைந்துள்ள சத்துக்கள்(Facts and Nutritional values of Chana daal)

  கடலை பருப்பைப்(chana daal) பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அதை பற்றி பெரிதாக விளக்கம் தேவை இல்லை என்றாலும், அதில் நிறைந்துள்ள சத்துக்களை பற்றியும், சில அறிய தகவல்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டால், அதன் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வமும், பயன்பாடும் நிச்சயம் அதிகரிக்கும்.
  கடலை பருப்பைப் பற்றிய சில அறிய தகவல்கள்:
  · இதில் நார் சத்து அதிகம் நிறைந்துல்லாது
  · இதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது
  · இந்தியாவில் மட்டும் 9௦ மில்லியன் டன்கள் கடலை பருப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது
  · சில நாடுகளில் இதனை வறுத்து, காபி மற்றும் தேயிலைக்கு பதிலாக பயன்படுத்தி வருகின்றனர்
  · இந்த பருப்பின் செடிகள் மற்றும் இலைகள் நீல சாயம் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றது
  28 கிராம் பருப்பில் அடங்கியுள்ள சத்துக்கள்:
  கலோரிகள் 46
  கார்போஹைட்ரெட் 8 கிராம்
  நார் 2 கிராம்
  புரதம் 3 கிராம்
  போலேட் 12% ஆர் டி ஐ
  இரும்பு 4% ஆர் டி ஐ
  பாஸ்பரஸ் 5% ஆர் டி ஐ
  காப்பர் 5% ஆர் டி ஐ
  மங்கனீஸ் 14% ஆர் டி ஐ
  இந்த சத்துக்கள் தவிர, கடலை பருப்பில் மேலும் பல அடங்கியுள்ளது. அவை:
  வைட்டமின் A வைட்டமின் C
  வைட்டமின் D வைட்டமின் K
  வைட்டமின் E தியாமின்
  ரைபோப்லவின் நியாசின்
  வைட்டமின் B6 போலேட்
  வைட்டமின் B12 பண்டோதேனிக் அமிலம்
  ப்லோரைட் சோடியம்
  ஜின்க் கால்சியம்
  கோளின் பிட்டின்
  பொட்டாசியம் செலெனியம்

  pixabay

  கடலை பருப்பில் ஆரோக்கிய பயன்கள்(Health Benefits of Chana Daal)

  கடலை பருப்பில் எண்ணற்ற உடல் நல பலன்கள் அடங்கியுள்ளது. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்

  1. கொழுப்பு சத்தை குறைக்கும்

  தினமும் கடலை பருப்பை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, சிறிது மொளை கட்டியதும், வெறும் வயிற்றில் உண்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு நாளடைவில் குறையும். இதனால் உடல் நல்ல ஆரோக்கியம் பெரும்.

  2. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்

  கடலை பருப்பில் அதிகம் நார் சத்து நிறைந்துல்லாது. இது இரத்தத்தில் சர்க்கரை சாரும் தன்மையை குறைகின்றது. இதனால் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகின்றது. மேலும் நார் சத்து பசி இன்மையை உண்டாகி, அதிகம் உணவை உண்ணாமல், சரியான அளவு உண்ண உதவும்.

  3. இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

  இதில் லேக்யுமெஸ் இருப்பதால், இருதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாக இருபதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள், தாது பொருட்கள் மற்றும் நார் சத்து, உடல் ஆரோகியத்தையும், இருதய ஆரோகியத்தையும் அதிகப்படுத்துகின்றது.

  4. இரத்த அழுத்தத்தை சீர் செய்கின்றது

  கடலை பருப்பில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது குறைந்த இரத்த அழுத்தத்தை சீர் செய்ய பயன்படுகின்றது. இதனால் இருதயமும் உறுதி அடைகின்றது.

  5. உடல் எடையை குறைக்கும்

  கடலை பருப்பில் நிறைந்திருக்கும் நார் சத்து மற்றும் புரதம், உடல் எடை குறைய பெரிதும் உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் கலோரிகளும், உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனால், கடலை பருப்பு உடல் எடையை குறைக்க ஒரு நல்ல பொருளாக கருதப்படுகின்றது.

  6. இரத்த சோகையை போக்கும்

  இரத்த சோகை ஏற்பட ஒரு முக்கிய காரணம் இரும்பு சத்து குறைபாடு தான். கடலை பருப்பில் நிறைந்திருக்கும் இருப்பு சத்து, உடலுக்குத் தேவையான ஹீமோக்ளோபின் பெற உதவுகின்றது. இதனால் இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.

  7. புற்று நோயை தடுக்க உதவும்

  குடல் புற்றுநோயை தடுக்கும் தன்மை கடலை பருப்பிற்கு உள்ளது என்று ஒரு மருத்துவ ஆய்வு கண்டறிந்துள்ளது. இதில் இருக்கும் சபோனின்கள் மற்றும் லிக்னான்கள் மற்றும் எதிர்ப்பு ஸ்டார்ச் குறிப்பாக குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது

  8. மயக்கத்தை போக்கும்

  கடலை பருப்பில் இருக்கும் நார் சத்து செரிமானத்தை மெதிவாக செய்ய செய்யும். சர்க்கரை மெதுவாக ஜீரண குழாயில் இருந்து இரத்த நானங்களுக்கு நகர உதவும், இதனால் அதிக சர்க்கரை உற்பத்தி ஆவதும் தடுக்கப் படும். இந்த செயல், உடலுக்குத் தேவையான சத்துக்களை சீராக பெற்று, மயக்கம் மற்றும் தலை சுற்றல் போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.

  9. எலும்புகளை பலப்படுத்தும்

  கடலை பருப்பில் அதிக கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டு தாது பொருட்களும், எலும்புகள் நல்ல சத்தை பெறவும், பலமாக இருக்கவும் உதவுகின்றது. மேலும் இது வைட்டமின் D சத்து உடலில் தங்கவும், அதனால் மேலும் அதிக அளவு கால்சியம் உடலில் சாரவும் உதவுகின்றது. இது மொத்தத்தில் உடலை நல்ல ஆரோகியத்தோடு வைத்துக் கொள்ள உதவுகின்றது.

  10. மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்

  இதில் இருக்கும் மக்னீசியம் மற்றும் லேக்யுமேஸ் மொல்லை சிறப்பாக செயல்பட உதவுகின்றது. இந்த தாது பொருட்கள் இரத்த நாங்களை தளரச் செய்து, மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் விடமின் B சத்து மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகின்றது.

  11. வீக்கத்தை குறைகின்றது

   கடலை பருப்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் இது வீக்கத்தை குறைக்க உதவுகின்றது. கடலை பருப்பில் அதிக அளவு செலனியம், பொட்டாசியம், வைட்டமின் A மற்றும் வைட்டமின் B6 நிறைந்துள்ளது. இது அழற்சி எதிருப்பு பண்புகளை அதிகப்படுத்தும்.

  12. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்

  கடலை பருப்பில்(chana daal) அதிக அளவு வைட்டமின் B6 நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த பெரிதும் உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் A, ஜின்க் மற்றும் லேக்யுமெஸ் நோய் எதிருப்பு அமைப்பை பலப்படுத்துகின்றது.

  13. ஜீரணத்தை சீர் செய்கின்றது

  கடலை பருப்பில் நார் சத்தும் மற்றும் பிற சத்துக்களும் நிறைந்துள்ளதால், இது ஜீரண அமைப்பை பலப்படுத்தி சீராக செயல் பட உதவுகின்றது. இதனால் ஜீரண பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. மேலும் இதில் இருக்கும் நார் சத்து பசியை போக்கி, எப்போதும் நல்ல பலத்தோடு இருக்க உதவுகின்றது. இதனால் உடல் எடையும் சீரான அளவு இருகின்றது.

  14. சக்தியை அதிகப்படுத்தும்

  கடலை பருப்பில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் அமினோ அமிலம் மேத்யோனைன் அணுக்களின் செயல் திறன்களை அதிகப்படுத்தி உடலில் இருக்கும் சக்தியை அதிகரிக்கின்றது.

  pixabay

  சரும ஆரோக்கியத்திற்கு கடலை பருப்பு(Benefits of Gram flour for Skin)

  கடலை பருப்பு(chana daal) நல்ல சருமத்தைப் பெற ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதில் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றது. பல ஆண்டுகளாக மக்கள் கடலை மாவை சரும ஆரோகியதிர்க்காக பயன் படுத்தி வருகின்றனர். குறிப்பாக இதனை ஒரு நல்ல குளியல் பொடியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கடலை மாவு எப்படி சரும பாதுகாப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்

  1. சருமத்தில் இருக்கும் கறைகளை போக்கும்

  பலருக்கும் சருமத்தில், அதிலும் குறிப்பாக வெள்ளையாக அல்லது பழுப்பு நிறத்தில் கறை இருப்பது போல தோன்றும். இது முகத்தின் அழகை பெரிதும் பாதிக்கும். கடலை மாவை தொடர்ந்து சரியான முறையில் பயன்படுத்தி வரும் போது, அத்தகைய கரைகள் அகலும். முகமும் பொலிவு பெரும்.

  2. பருக்களை போக்கும்

  பெண்களுக்கு, அதிலும் இளம் வயது பெண்களுக்கு பருக்கள் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இது முகத்தின் அழகை பாதிப்பதோடு, அரிப்பு மற்றும் வலி போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகின்றது. கடலை மாவில் இருக்கும் ஜின்க், மற்றும் வைட்டமின்கள், பருக்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. இதனால் சருமமும் நல்ல ஆரோக்கியத்தோடு இருகின்றது.

  3. இறந்த அணுக்களை போக்குகின்றது

  இறந்த அணுக்கள் சருமத்தில் படியும் போது, புதிதாக தோன்றும் அணுக்கள் பாதிக்கப்படுகின்றது. இதனால் சருமத்தின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது. ஆனால், கடலை மாவை பால் மற்றும் மஞ்சளுடன் சேர்த்து பயன் படுத்தும் போது, அழுக்கு, தூசி மற்றும் இறந்த அணுக்களை அகற்றி விடும். இதனால் சருமமும் பொலிவு பெரும்.

  4. எண்ணை பிசுக்கை போக்கும்

  கடலை மாவு முகத்தில் ஏற்படும் எண்ணை பிசுக்கை போக்க உதவுகின்றது, மேலும் சருமத்தை சுத்தம் செய்யவும் இது உதவுகின்றது. இயற்கையாக சருமத்தில் ஏற்படும் எண்ணையை தக்க வைத்து, அதே நேரம் அதிகமாக படியும் எண்ணை பிசுக்கை போக்க உதவுகின்றது.

  pixabay

  5. நல்ல நிறத்தை தரும்

  கடலை மாவை பிற குறிப்பிட்ட பொருட்களான, ஆரஞ்சு தோல், பால் மற்றும் தேன் போன்றவற்றோடு பயன்படுத்தி வரும் போது சருமம் நல்ல நிறத்தையும் பெறுகின்றது.

  கடலை மாவு பேஸ் பாக்(Gram flour face pack)

  எளிய முறையில், சுலபமாக வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, எப்படி பேஸ் பாக் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்

  1. பழுப்பு நீங்க பேஸ் பாக்

  செய்முறை
  · 4 தேக்கரண்டி கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்
  · ஒரு தேக்கரண்டி எலுமிச்சைப் பழசாற்றை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
  · ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் சிறிது மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளவும்
  · அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
  · சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்
  · இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் பழுப்பு நீங்கும்

  2. சருமத்தை மிருதுவாக்க

  செய்முறை
  · 4 தேக்கரண்டி கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்
  · இதனுடன் சிறிது பச்சை பால் மற்றும் ஒரு எலுமிச்சைப் பழ சாற்றை சேர்க்கவும்
  · அனைத்தையும் நன்கு கலந்து கொண்டு முகத்தில் தேக்க வேண்டும்
  · சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  3. எண்ணை பிசுக்கை போக்க

  செய்முறை
  · சிறிது கடலை மாவு மற்றும் தயிர் எடுத்துக் கொள்ளவும்
  · இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் ஐயாவும்
  · பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

  4. பருக்களை போக்க

  செய்முறை
  · இரண்டு தேக்கரண்டி கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்
  · இதனுடன் சந்தன பொடியை சேர்த்துக் கொள்ளவும்
  · ஒரு தேக்கரண்டி பால் மற்றும் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்
  · அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
  · சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்

  5. முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை போக்க

  செய்முறை
  · சிறிது வெந்தயப் பொடி மற்றும் கடலை மாவை சேர்த்து, சிறிது பன்னீருடன் கலந்து கொள்ளவும்
  · இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்
  · சிறிது நேரம் காய விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  6. தழும்புகளை போக்க

  செய்முறை
  · ஒரு தேக்கரண்டி கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்
  · இதனுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  · இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
  · சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்
  · பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  pixabay

  7. வறண்ட சருமத்தை போக்க

  செய்முறை
  · இரண்டு தேக்கரண்டி கடலை மாவு எடுத்துக் கொள்ளவும்
  · இதனுடன் சிறிது மஞ்சள் தூள், பால் மற்றும் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளவும்
  · அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
  · சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  8. கருமுள்ளை போக்க

  செய்முறை
  · நான்கு தேக்கரண்டி கடலை மாவு எடுத்துக் கொள்ளவும்
  · சிறிது மஞ்சள் தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும்
  · அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
  · சிறிது நேரம் கழித்து நன்கு காய்ந்த கலவையை கைகளால் தேய்த்து உதிர்த்து விட வேண்டும்
  · பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  9. இளமையான தோற்றம் பெற

  செய்முறை
  · கடலை மாவு இரண்டு தேக்கரண்டி, தேன், முட்டையின் வெள்ளைக் கரு, மற்றும் எலுமிச்சை பல சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்
  · அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  · இதனை முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
  · பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
  · இது நல்ல இளமையான தோற்றத்தை பெற உதவும். மேலும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கும்

  பிற எளிய பேஷ் பேக்(Other simple face pack)

  1. பால் மற்றும் கடலை மாவு
  செய்முறை
  · இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் இரண்டு தேக்கரண்டி பால் எடுத்துக் கொள்ளவும்
  · இதனை பசை போல கலந்து முகத்தில் தேக்க வேண்டும்
  · பிறைகு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  2. கடலை மாவு மற்றும் பாதம் பருப்பு
  செய்முறை
  · ஒரு தேக்கரண்டி பாதாம் பருப்பு பொடியை எடுத்துக் கொள்ளவும்
  · இதனுடன் ஒரு தேக்கரண்டி கடலை மாவு, அரை தேக்கரண்டி எலுமிச்சை பல சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  · இந்த கலவையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
  · பின் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்

  3. கடலை மாவு மற்றும் வெள்ளரிக்காய்
  செய்முறை
  · இரண்டு தேக்கரண்டி கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்
  · இதனுடன் இரண்டு தேக்கரண்டி வெள்ளரிக்காய் சாறு சேர்க்க வேண்டும்
  · இதனுடன் சிறிது எலுமிச்சை பழ சாற்றை சேர்க்க வேண்டும்
  · அனைத்தையும் நன்கு கலந்து, முகத்தில் தேக்க வேண்டும்
  · சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  தலைமுடி நன்கு வளர கடலை மாவு(Gram flour for Hair Health)

  கடலை மாவு உடல் நலன் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தலைமுடி நன்கு வளரவும் பயன்படுகின்றது. இதனை சரியான முறையில் பயன்படுத்தும் போது தலைமுடி உதிர்வு குறைந்து நல்ல அடர்ந்த கூந்தலை பெற உதவுகின்றது. மேலும் தலைமுடியும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும்.

  1. தலைமுடி போஷாக்கு பெற

  கடலை மாவை தேங்காய் எண்ணை அல்லது தேங்காய் பால், தேன் ஆகியவற்றுடன் சேர்த்து நன்கு பசை போல கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், வறண்ட தலைமுடிக்கு போஷாக்கு கிடைத்து அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

  2. தலைமுடியை சுத்தம் செய்யும்

  தலைமுடியில் அதிகம் அழுக்கு மற்றும் தூசி படியும். இதனால் அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால் கடலை மாவை பயன்படுத்தி தலைமுடியை அலசினால், அத்தகைய அழுக்கு நீங்கி சுத்தமாகும்.

  3. தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்

  கடலை மாவில் இருக்கும் சத்துக்கள், குறிப்பாக வைட்டமின் E தலைமுடி நன்கு வளர உதவுகின்றது. இது உடைந்த அல்லது பாதிக்கப்பட்ட முடிகளை அகற்றி நல்ல சத்துள்ள தலைமுடிகளை வளர செய்கின்றது.

  4. பொடுகை போக்கும்

  கடலை மாவை சிறிது நீரில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். இதனால் முடி உதிரவும் குறையும்.

  கடலை மாவை தலைமுடி வளர்சிக்கு(Gram flour for hair treatment method)

  1. தலை முடியை சுத்தம் செய்ய
  செய்முறை
  · தேவையான கடலை மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து பசை போல ஆக்கிக் கொள்ள வேண்டும்
  · இந்த பசையை நன்கு வேர்களில் தேக்க வேண்டும்
  · சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்
  · பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்

  2. தலைமுடி நன்கு வளர
  செய்முறை
  · சிறிது கடலை மாவு, பாதாம் பொடி, தயிர் மற்றும் விடமின் E எண்ணை ஆகிய அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  · இதனை தலிமுடியின் வேரில் நன்கு தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்
  · சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்

  3. பொடுகு நீங்கள்
  செய்முறை
  · தேவையான கடலை மாவை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல செய்ய வேண்டும்
  · இதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்
  · நன்கு தலைமுடியின் வேரில் தேய்க்க வேண்டும்
  · சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. சரும பாதுகாப்பிற்கு கடலை மாவு எப்படி தயார் செய்வது?

  நீங்களாகவே வீட்டில் எளிய முறையில் செய்யலாம். தேவையான கடலை பருப்பை நன்கு வெயிலில் முதலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸர் கிரைண்டரில் நன்கு பொடி போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு சல்லடையில் சலித்து எடுத்துக் கொண்டால், உபயோகிக்க மேலும் எளிதாக இருக்கும். அப்படி வீட்டில் அரைக்க முடியவில்லை என்றால், ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம்.

  pixabay

  2. கடலை பருப்பு பைல்ஸ் பிரச்சனைகளை போக்குமா?

  கடலை பருப்பை(chana daal) சரியான அளவு தினமும் நீங்கள் முறையாக உண்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து வெளி வரலாம். இதில் அதிகம் நார் சத்து, புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் B சத்து இருப்பதால், ஒரு நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகின்றது. அதனால் பைல்ஸ் பிரச்சனைகள் எளிதில் குணமாகும்.

  3. தினமும் கடலை மாவை சரும பாதுகாப்பிற்கு பயன்படுத்தலாமா?

  நிச்சயம் பயன்படுத்தலாம். தினமும் நீங்கள் குளியல் பொடியோடு சேர்த்தோ அல்லது தனியாக கடலை மாவாகவோ பயன் படுத்தலாம். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

  4. நீரழிவு நோய் இருப்பவர்கள் எப்படி கடலை பருப்பை எடுத்துக் கொள்ளலாம்?

  நீரழிவு நோய் இருப்பவர்க்கள், மொளை கட்டிய பயிரை எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு ஈரத்துணியில், குறிப்பாக பருத்தி துணியில் முழு கடலை பருப்பை / கொண்டைக்கடலையை கட்டி, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு விட்டு விட வேண்டும். துணியில் இருக்கும் ஈரப்பதம் சரியாக உள்ளதா என்றும் அவ்வப்போது பார்க்க வேண்டும். இது முளை கட்டியதும், அப்படியே எடுத்து உண்ணலாம். இதனை அனைவரும் உண்ணலாம். 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.