logo
ADVERTISEMENT
home / அழகு
30 வயதை தாண்டி தமிழ் சினிமாவில் அழகாக இருக்கும் நடிகைகளின் ரகசியங்கள்

30 வயதை தாண்டி தமிழ் சினிமாவில் அழகாக இருக்கும் நடிகைகளின் ரகசியங்கள்

30 வயதை கடந்தாலும் இன்னும் சில நடிகைகள்(actresses) இளைஞர்களின் கனவு கன்னியாகவே வலம் வருகின்றனர். அவர்களின் இளமையும் தோற்றமும் அதற்கான ரகசியங்களை பகிர்ந்துள்ளனர். இது பற்றி இங்கு பார்ப்போம்

அனுஷ்கா
“உடம்புக்கும் மனதுக்கும் இடையே ஒற்றுமை இருந்தால் அழகு விஷயத்தில் அற்புதங்கள் நடக்கும். அழகு என்பது உள்ளத்தில் இருந்து வரவேண்டும். வெளியே அதை உருவாக்க முடியாது. இந்த ரகசியங்களை நான் தெரிந்து வைத்து இருப்பதால் என்னை அழகாக வைத்து இருக்க முடிகிறது. வயது ஏறுவதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. வயது ஏறிக்கொண்டு போகிறதே என்று கவலைப்படக்கூடாது. வயது என்பது ஒரு எண்ணிக்கைதான். அதை சந்தோஷமாக நகர்த்தினால் வயது முதிர்வின் தாக்கம் நம்மீது விழாது. ஓய்வு கிடைக்கும்போது வேறு வேலைகளில் ஈடுபடாமல் ஓய்வாகவே இருப்பேன். அப்போது தனிமையைத்தான் விரும்புவேன். என்னைப்பற்றி சிந்திப்பேன்.

ஏதேனும் தவறுகளை என்னை அறியாமல் செய்து இருந்தால் அது நினைவுக்கு வரும். அந்த தவறை மீண்டும் செய்யாமல் திருத்திக்கொள்ள தெளிவு கிடைக்கும். மனதுக்கு அமைதியும் கிடைக்கும். இப்போது படங்களில் நடிக்காமல் இருப்பதும் நானாக எடுத்த முடிவுதான். உடம்புக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்படுவதால் புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். இந்த ஓய்வை சந்தோஷமாக அனுபவிக்கிறேன்.”

 

ADVERTISEMENT

Youtube

நயன்தாரா
கொஞ்ச காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த நயன்தாரா தனது மறுபிரவேசத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகிவிட்டார். நயன்தாரா நடிக்க(actresses) வந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் எப்பவும் மினுமினுப்பாகவே இருக்கிறார். அதற்கு காரணம் சேச்சி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து அழகைக் கூட்டிக் கொள்கிறார். இதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் கேரளா சென்று அங்கு 4 நாட்கள் தங்கி அழகை மெருகேற்றிவிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT

Youtube

த்ரிஷா
15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாதுறையில் இருந்தாலும் அங்கங்கே அழகான அளவோடு இருக்கும் நடிகை த்ரிஷா(actresses) தனது அழகை கட்டுப்பாட்டோடு வைக்க அதிகம் மெனக்கெடுவதில்லையாம். நிறைய தண்ணீர், சாத்துக்குடி, மாதுளை ஜூஸ் குடிக்கிறாராம். நீச்சல் மிகவும் பிடித்தமான விசயமாம். வெளிநாட்டிற்குப் போனால் இன்டோர் நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீந்தி ரிலாக்ஸ் செய்வது பிடித்தமான செயல் என்கிறார் த்ரிஷா. காபி, டீயை பக்கத்தில் கூட வரவிடுவதில்லையாம் அதைத்தவிர பவர்யோகா செய்து மனதையும், உடலையும் இளமையாக வைத்திருக்கிறாராம் த்ரிஷா.

 

ADVERTISEMENT

Youtube

காஜல் அகர்வால்
தான் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருப்பதற்கு யோகா தான் முக்கியக் காரணம் என நடிகை காஜல் அகர்வால்(actresses) தெரிவித்துள்ளார். நான் அழகாக இருப்பதாகவும், உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளதாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக பலர் பாராட்டுகின்றனர். இதற்கு காரணம் யோகா. தினமும் யோகா பயிற்சி செய்கிறேன். அதுதான் என் அழகு ரகசியம்’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

Youtube

தமன்னா
நடிகை தமன்னா ஸ்லிம்மாக இருப்பதற்கு பட்டர் கலந்த காப்பியைக் குடிப்பதாக தெரிவித்துள்ளார். பிரபல நடிகை தமன்னா(actresses) தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இருக்கும் அழகான நடிகைகளில் ஒருவராக தமன்னா இருந்து வருகிறார். அதேசமயம், தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

இந்நிலையில், அவர் தனது உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கான ரகசியத்தை கூறியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படத்தில், நான் காலையில் பட்டர் காபி குடிக்கும்போதெல்லாம், எனது நாளின் தொடக்கம் சிறப்பாக உள்ளது. இதனால் எனது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக உள்ளது, நானும் அட்டகாசமாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அவர் கூறும் பட்டர் காபி என்பது, சாதாரண காபியில் வெண்ணையை சேர்த்து பருகுவது மட்டுமே. இதனால் அவரது உடல் எடைக் கட்டுக்கோப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், நடிகை தமன்னா ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதையும், உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT

Youtube

26 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT