மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டி வேர் : ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள் !

மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டி வேர் : ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள் !

பருவ நிலை மாறுபாடு ஏற்படும் சமயங்களில் பலவேறு நோய்கள் வர தொடங்கும், வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டி அடிப்பதில் வெட்டி வேர் (vettiver) மூலிகைக்கு நிகர் எதுவும் இல்லை. பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவப் பயன்கள் அனைத்துமே மகத்தானவை. அனைத்து வகை நிலங்களிலும் வளரும் இயல்புடையதாக இருந்தாலும், மணற்பாங்கான ஆற்றங்கரையோரங்களில் சிறப்பாக செழித்து வளரக்கூடியது வெட்டி வேர். சுமார் ஐந்து அடி வரை வளரும் புல் வகையைச் சார்ந்தது.

 • வெட்டி வேரை (vettiver) சுத்தப்படுத்தி, உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதனுடன் சோம்புத் தூளை சம அளவு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் காணாமல் போகும்.
 • வெட்டி வேர் நா வறட்சியை போக்கும் குணம் வாய்ந்தது. மண்பானையில் ஒரு கைப்பிடி சுத்தமான வெட்டி வேரையும், சிறிது திருநீற்றுப் பச்சிலையையும் போட்டு அதில் நல்ல நீரை ஊற்றிவைத்து குடிநீராக பயன்படுத்தலாம். இதனால் நா வறட்சி தீரும்.  

மகத்துவம் நிறைந்த தேனின் ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!

 • வெட்டி வேரை நீரில் போட்டு நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். இந்த நீரை குடித்து வர காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வு நீங்கும். மேலும்  இந்த நீரை தினமும் பருகுவதால் செரிமான ஆற்றல் அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

 • வெட்டி வேர் (vettiver) எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து தினமும் குளிக்கலாம். 
 • வெட்டி வேர் தூளுடன் தண்ணீர் சேர்த்து குலைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க  வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி 'பேக்’ போட்டு வந்தால் பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும்.
 • சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும். 
 •  தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் பவுடரை பயன்படுத்தலாம். வெட்டி வேர் தூளை தலைக்கு தேய்த்து குளிப்பதால், முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.

 • வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.
 • வெட்டி வேரை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். இரண்டு நாள் கழித்து அந்த எண்ணெயினை எடுத்து கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். 

சருமத்தின் அழகை மீட்டு தரும் ஒயின் : பயன்படுத்தும் முறைகள் குறித்து எளிமையான டிப்ஸ்!

 • பாசிப்பயறு 100 கிராம் ,வெட்டிவேர்  50 கிராம் எடுத்து அந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்தப் பவுடரை உடலுக்கு தேய்த்துக்  தினமும் குளித்து வந்தாலே உடம்பில் வரும் சிறு சிறு உஷ்ணக் கட்டிகளும் , உடல் விரிவதனால் ஏற்படும் வரிகளும் மறைந்து போகும்.

 • வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி வர இயற்கையாக முகம் அழகு பெறும். 
 • வெட்டி வேரினால் செய்யப்படும் இருக்கைகள் மூலநோய் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரத்தைக் குறைத்து உடலுக்கு நன்மை பயக்கும்.

பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.