தேன் (honey) ஓர் இனிய மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருள் ஆகும். பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மேலும் நமது சரும அழகு பொருளாகவும் தேன் முக்கிய பங்காற்றுகிறது. அவை குறித்து இங்கு காணலாம்.
pixabay
ஆரோக்கிய குணங்கள் நிறைந்த தேன்
- தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவைப் பொறுத்துத்தான் உங்கள் திறன் உள்ளது.
- உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் பண்பு தேனுக்கு உள்ளது. மேலும் ஜீரண சக்தியை மேம்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.
- தினமும் காலையில் தேன் பருகினால் உங்கள் செயல் திறன் அதிகரித்து உற்சாகமாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
- தேன் பெண்களுக்கு மிகவும் ஏற்றது என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தேன் சிறந்த மருந்தாகும்.
- தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள சிறுதானிய உணவு ரெசிபிகளை ஈசியாக செய்யலாம்!
pixabay
- தேன் மிக சிறந்த உணவுப் பொருளாகும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டு சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால் தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
- ஒரு குவளை வெந்நீரில் ஒரு கரண்டி தேன் கலந்து அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
- நெல்லிக்காய்களை துண்டு துண்டாக்கி, ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். இதனை தேனில் ஊறவைத்து பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
- தேனில் ஃப்ரக்டோஸ், க்ளுகோஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் வழங்க வல்லது.
- தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இருக்கிறது. இதனால் உணவில் தேனை சேர்த்து வந்தால் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் பெற்றது.
- மூட்டு வலிகளுக்கு தேன் சிறந்த மருந்து. வலி உள்ள இடத்தில் நன்றாக தேனை தேய்த்துவிட வேண்டும். இதனால் மூட்டுகள் தேயாமல் இருப்பதுடன், மூட்டு வலியும் குறையும்.
- பழச்சாறுகளில் சர்க்கரைக்கு பதிலாக தேன் (honey) கலந்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டுமின்றி அல்சரும் குணமாகும்.
- குழந்தைகளுக்கு அன்றாட உணவில் தேன் கொடுத்து வளரச் செய்யுங்கள். அது அவர்கள் வருங்காலத்தை இனிக்கச் செய்யும்.
pixabay
தேனின் அழகு பலன்கள்
- தேனை சருமத்தில் தடவி உலர்ந்த பின்னர் கழுவி வர வேண்டும் வாரம் மூன்று முறை இதனை செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கி சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- தேன் சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி அசுத்தங்களை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் நோய்த்தொற்று மற்றும் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- உதடுகள் சுருக்கம் மற்றும் வெடிப்புகள் நிறைந்து காணப்பட்டால் தேனை தினமும் இரவு தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால் உதடுகள் பட்டு போல மிருதுவாகும்.
பொடுகு பிரச்சனையால் முகத்தில் தோன்றும் பருக்களை சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்!
கலப்பட தேனை கண்டறியும் வழிகள் :
- சிறிதளவு தேனில் (honey) தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறியலாம்.
- மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன்.
pixabay
- ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும். நீரில் கரைந்தால் அதில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்படும்.
பெண்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் குறிப்புகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.