காஞ்சிபுரத்தில் கடந்த 46 நாட்களாக அருள்பாலித்து வரும் அத்தி வரதர் (athivaradar) தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்துள்ளது. காஞ்சிபுரம் நகரமே கடந்த 48 நாட்களாக திருவிழாக்கோலமாக காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகளால் நிரம்பி வழிந்தது. இதற்கு காரணம் அத்திவரதர் திருவிழா தான். சுமார் 40 ஆண்டுகாலமாக ஆனந்தசரஸ் குளத்தில் சயனகோலத்தில் இருந்த அத்திவரதர் கடந்த ஜூன் 30ம் தேதி வெளியே வந்தார். பூஜைகளுக்குப் பின்னர் ஜூலை 1ம் தேதி முதல் தினம் தினம் ஒரு பட்டுப்புடவையில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
தமிழகமே கொண்டாடும் இந்த அத்தி வரதர் யார்? இவரின் சிறப்புகள் என்ன?பலன்கள் என்ன?பார்க்கலாமா!
அலங்கார மாலைகள், ரோஜா, தாமரை, சாமங்கி என வண்ண வண்ண மலர்கள் சூடி அலங்கார ரூபனாய் எழுந்தருளினார். அவரின் அழகை காண கண் கோடி இருந்தாலும் போதாது என்று தரிசித்த பக்தர்கள் கூறினர். 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரது தரிசனம் காண தமிழகம் மட்டுமல்லாது வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும், நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் அத்திவரதரை தரிசித்தனர். தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரைக் காண காஞ்சிபுரத்தில் குவிந்ததால் நகரமே குலுங்கியது. கடந்த 46 நாட்களாக 1 கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் கடைசி என்பதால் நேற்று காலை முதலே பக்தர்கள் அலைமோதினர். நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
விஐபிகளுக்கான தரிசனம் நேற்றைய முந்தினமே நிறைவடைந்தது. இதனால் விஐபி வரிசையில் மட்டும் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 48 நாட்கள் கொண்ட அத்திவரதர் திருவிழா நிறைவடைந்தது. நேற்று காலை 5 மணிக்கு தொடங்கிய பொது தரிசனம் நள்ளிரவு வரை நீடித்தது. இன்று முதல் அவர் ஆனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார். இனி அத்திவரதரை 2059ம் ஆண்டுதான் தரிசிக்க முடியும்.
குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாத அதிசயம்
அத்திவரதர் (athivaradar) சிலை காடுகளில் வளர்ந்த அத்திமரத்தை கொண்டு செய்யப்பட்டது. மூலிகை கலவை பூசப்பட்டதால் எந்தவித சிதிலமும் அடையாமல் அப்படியே இருக்கிறது. அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் இன்றும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறதோ, அதேபோல் அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு பிறகும் பொலிவு மாறாமல் சிதிலம் அடையாமல் இருக்கிறது. தேக்கு, வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் சிலை வடித்து நீரில் வைத்து பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுத்தால் அதன் பழைய தோற்றத்தை காணமுடியாது.
உருவஅமைப்பு மாறிவிடும் என்பதே உண்மை. ஆனால் அத்திமர சிலை மூலிகைகள் பூசி குளத்தில் வைத்து பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கும்போது அதன் உருவ அமைப்பு அப்படியே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். அத்திமர சிலையை வழிபடும்போது பலவிதமான தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அத்திவரதர் சிலை சிதிலம் அடையாமல் இருப்பது ஒரு அதிசயமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.
தரிசனத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
அத்தி வரதர் (athivaradar) சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எடுத்து 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டும் என எந்த ஆகம விதிகளும் இல்லாத நிலையில் அத்திவரதர் தரிசன உற்சவத்தை நீட்டிக்க கோரியும், தரிசன கால அளவை நீட்டிக்காமல் இருப்பது பக்தர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்ககை விசாரித்த நீதிபதிகள், கோவில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட முடியாது. அத்திவரதர் தரிசன கால அளவு நீட்டிப்பது குறித்து கோவில் நிர்வாகமும், அரசும் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறி வழக்கு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதன்படி அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள் ஈஸியாக செய்யலாம்!
தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்த அத்தி வரதர்
ஒவ்வொருமுறையும் அத்தி வரதர் தரிசனம் முடிந்து மீண்டும் குளத்திற்குள் செல்லும் போதெல்லாம் நல்ல மழை பெய்திருக்கிறதாம். 1979ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி முதல் ஆகஸ்டு 18ம் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், கடைசி நாள் இரவு அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்பட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நீரில்லாமல் இருந்த அந்தக் குளத்தின் முதல் படி மூழ்கும் அளவுக்கு ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மாநிலத்தில் பெரிய கனமழையால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. மேட்டூர் ஆணை கொள்ளளவை எட்டிய நிலையில் முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டுள்ளார். மேலும் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்தும் வருகிறது. எப்படியோ அத்திவரதர் அருளால் தண்ணீர் தட்டுப்பாடு குறைந்தது நிதர்சனமான உண்மை!.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.