தனுசு ராசிக்காரர்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசப் போகிறது !

தனுசு ராசிக்காரர்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசப் போகிறது !

இன்று ஞாயிற்றுக் கிழமை த்ரிதியை திதி உத்திர நட்சத்திரம் ஆவணி மாதம் 15ம் நாள். இந்த நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

நீங்கள் சோர்வாகவும் சோம்பலாகவும் இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஒரு குளியல் போடுங்கள்.அல்லது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுங்கள். ஒரு வாரத்திற்கு பழச்சாறு டயட் எடுங்கள் , விரதம் இருங்கள், சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.ஆரோக்கியமான உடல் உங்களுக்கு எல்லாவற்றையும் சாதித்து தரும்.

ரிஷபம்

உங்களால் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக எல்லா விஷயங்களையும் செய்யுங்கள். உங்கள் எல்லைகளைத் தாண்டி நகருங்கள். நீங்கள் ஆச்சர்யப்படும் வகையிலான வாழ்க்கை காத்திருக்கிறது. தீர்மானத்தோடும் அர்ப்பணிப்போடும் உங்கள் வேலைகளை செய்யுங்கள்.

மிதுனம்

வேலை இடத்தில் எளிதாக கடக்க முடியாத எதிர்பாராத இன்னல்களை சந்திப்பீர்கள். எப்போதும் இல்லாதது போல் மிகவும் கடுமையாக உங்கள் வேலை ஆராயப்படும். சுய சந்தேகம் உதவாது. விரைவில் நிம்மதியாக உணர்வீர்கள், பொறுமையாக மற்றும் திறமையில் கவனமாய் இருங்கள்.

கடகம்

ப்ரியம் உங்களை பல்வேறு விதங்களில் வந்தடையும். அது உங்கள் வேலை செய்யும் இடத்தில இருந்து வரும் நல்ல சேதியாக வரலாம் அல்லது அல்லது உங்கள் வாழ்வின் காதலை நீங்கள் கண்டடையலாம். நீங்கள் ப்ரியத்தோடு முழுமையாக இருக்க வேண்டிய ஒரு நாள் இது.

சிம்மம்

இப்போது செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு எவையெல்லாம் முக்கியமான செய்ய வேண்டிய வேலை என்பதை பட்டியல் போடுங்கள்.உங்கள் கர்வம் உங்கள் வேலைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்.எது முக்கியமோ அதில் கவனத்தை செலுத்தி விட்டு மற்றதை மற்றவர்களிடம் விட்டு விடுங்கள். உங்கள் வேளைகளில் கவனம் மற்றும் விழிப்புணர்வு தேவை.

கன்னி

கண்மூடித்தனமாக யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். உங்கள் நோக்கங்களை மற்றவர்களுக்காக மாற்றி கொள்ளாமல் வெறுமனே அவர்களின் பேச்சுக்கு மட்டுமே மரியாதையை கொடுப்பது உங்களுக்கு நல்லது.

Pinterest

துலாம்

உங்கள் மனதை அமைதிப்படுத்தி, தெய்வீகத்தின் மென்மையான நினைவூட்டல்களைக் கேளுங்கள். ஒரு அமைதியான மனது தெளிவாக கேட்கும். உங்களுடைய ஜெபங்கள் பதில் அளிக்கப்படுவதில்லை என நீங்கள் உணர்ந்தால், பொருமையாக காத்திருங்கள்.

விருச்சிகம்

உங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பொருளாதார ரீதியாக நீங்கள் தடுமாறிக் கொண்டிருக்கலாம். அதற்காக ஏழ்மையை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களிடம் உள்ளவர்களுக்காக நன்றி செலுத்துங்கள்.உங்கள் செலவுகளை நன்றியோடு செய்யுங்கள். பணத்தை ஆகர்ஷியுங்கள்.

தனுசு

நல்ல அதிர்ஷ்டம் இப்போது உங்கள் ஆதரவில் உள்ளது . ஒரு புதிய சுழற்சி ஆரம்பிக்கப் போகிறது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கமாக இருக்கிறது, நீங்கள் ஆழமாக கனவு காணும் போது , தொடர்ந்து நினைத்துப் பார்க்கும் போது, கற்பனை செய்யமுடியாத வழிகளில் வெளிவர இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை அழகாக வடிவமைக்க அனுமதிக்கவும்.

மகரம்

இப்போது உங்கள் தேடலில் உங்களுக்கு உதவ தயாராக இருக்கும் அற்புதமான மக்கள் உள்ளனர். வாய்ப்புகள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன, ஆனால் நீங்கள் கவனம் செலுத்துவதில்லை அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளில் நீங்கள் மிகவும் கடினமானவராக இருக்கலாம். உங்களைத் தளர்த்திக்கொண்டு எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்

கும்பம்

உங்களுடைய விருப்பங்கள் , கனவுகள், இலட்சியங்கள் எல்லாவற்றிலும் கவனத்தை செலுத்துங்கள். ஆனால் உங்களுக்குத் தேவையானது எதுவோ அதுவே உங்களை வந்தடையும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மாறாக நீங்கள் அழுத்தம் கொடுத்தீர்கள் என்றால் விரும்பத்தகாத விளைவுகள் நேரிடலாம்.உங்கள் விருப்பங்கள் நிறைவேற பொறுமையாகக் காத்திருங்கள்.

மீனம்

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருங்கள்.அது ஏன் வேண்டும் எதற்காக வேண்டும் எப்படி வேண்டும் என்பதை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். வாய்ப்புகள் சீக்கிரமே வரலாம். அந்த சமயம் அதனை பற்றி கொள்ள உங்களுக்கு தெளிவு வேண்டும்.

predicted by astro asha shah

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.