இன்று ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மிருகசீரிட நட்சத்திரம் . ஆவணி மாதம் எட்டாம் தேதி. சுப முகூர்த்த நாள். இன்று மாலை 4 முதல் 6 வரை துர்க்கை வழிபாடு பிரத்யங்கரா வழிபாடு நன்மை தரும்.
மேஷம்
பணம் தொடர்பான அத்தனை கவலையையும் விடுங்கள்.பணம் பற்றிய உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றுங்கள், நேர்மறை சக்தி உங்களை தேடி வரும். பணம் உங்களுக்கு வரும் என்று நம்புங்கள். நிச்சயம் அது உங்களை நோக்கி வரும்.உங்கள் பேஷனோடு எதனையும் செய்தீர்கள் என்றால் அபிரிமிதமான அருளும் பணமும் நிச்சயம் கிடைக்கும்.
ரிஷபம்
நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செயல்படுத்துங்கள். உங்கள் அம்மாவின் உறவில் ஒருவர் உங்களுக்கு உதவுவார். தவறு செய்வது சகஜம் என்பதை உணர்வீர்கள். தோல்வி வந்தால் பரவாயில்லை தான் ஆனால் அதற்காக இலக்குகளை கைவிடாதீர்கள்.
மிதுனம்
இன்று அனைத்தும் உங்களுக்காக செல்லும். ஏதாவது எதிர்பாராதது நடந்தால், பதிலளிப்பதற்கு முன் யோசிக்கவும். முக்கியமானவற்றை முக்கியமில்லாதததில் இருந்து விளக்குங்கள். அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதீர்கள். உங்களுக்கு ஒரு சமநிலையான அணுகுமுறை முழுவதும் தேவை.
கடகம்
உங்கள் அடி மனதில் ஆழத்தில் உங்களை குணப்படுத்துதல் நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தால் அது தீர்வதற்கான அறிகுறிகள் வரலாம். சீக்கிரமாக குணமாவீர்கள். உங்கள் எமோஷனல் பக்கங்களும் குணமாகும். ஆரோக்கியம் , பொருளாதாரம் என எல்லா விதத்திலும் நீங்கள் குணமாவீர்கள்.
சிம்மம்
இது உங்கள் கடும் உழைப்பிற்கான பதில் மரியாதை கிடைக்கும் நேரம். கொண்டாடுங்கள். பொருளாதார ரீதி வெற்றிகளை அதிக கவனமாக பார்க்க வேண்டாம். உணர்வுகளுக்கும் பொருளாதார தேவைகளுக்கும் ஒரு சமநிலை கொண்டு வருவது நல்லது.
கன்னி
உங்களில் ஒரு சிலருக்கு நிம்மதியற்ற உறக்கம் ஏற்படலாம். அல்லது மோசமான கனவுகள் வரலாம். உங்கள் மனதில் ஆழமாக வேரூன்றப்பட்ட சில பயங்கள் மற்றும் பாதுகாப்பின்மைகள் வெளியே வரலாம். உதவியை தேடுங்கள். இறையை நாடுங்கள்.
Youtube
துலாம்
கடினமான உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இயந்திரதனமான வாழ்க்கை விட்டு சற்று காலம் விலகியிருங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முயற்ச்சி செய்யுங்கள்.
விருச்சிகம்
எந்த வித திட்டங்களும் இல்லாமல் உலகை வெல்வதில் நீங்கள் கெட்டிக்காரர்தான். ஆனாலும் உங்களது அடுத்த முயற்சிக்கு சில திட்டங்களும் வரைபடங்களும் தேவை. ஆகவே அதனை நிதானமாக தயார் செய்யுங்கள். உங்கள் வெற்றி வாய்ப்பை இது அதிகரிக்க செய்யும்
தனுசு
நீங்கள் சம்பந்தப்பட்ட நபர்களை காயப்படுத்த விரும்பாததால் உங்கள் உணர்ச்சிகளை மறைத்து வருகிறீர்கள்.. ஆனால் உங்கள் உணர்ச்சிகளை அடக்குவது தூரத்தையும் தவறான எண்ணங்களையும் உருவாக்கும், எனவே உங்கள் உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவது நல்லது.
மகரம்
உங்கள் திறமைகளை பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடிய அனைத்து அற்புதமான விஷயங்களையும் பாருங்கள். வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாதனைகள் திறக்க அன்பு, பாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நீங்கள் சிறந்த முறையில் வழங்கினால், அங்கீகாரம் மற்றும் பாராட்டு உங்களுக்கு வரும்.
கும்பம்
இந்த நேரத்தில் பல்வேறு வாய்ப்புகள் உங்களை வந்தடையும்.ஆனால் உங்கள் சுய அறிவுடன் நீங்கள் பகுத்தறிந்து உங்களுக்கான வாய்ப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். உடனடி பலன்களை எதிர்பாராதீர்கள். இது உங்கள் அடித்தளத்தை வலிமையாக்கும் நேரம்.
மீனம்
உங்களுடன் தொடர்பு கொள்ள இதுவே நேரம்.உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளாகிய வேர்களுடன் தொடர்பில் இருங்கள்.இயற்கையோடும் மௌனத்தோடும் அதிகம் கலந்திருங்கள். புற்களில் உங்கள் பாதம் பதிய விடுங்கள்.உங்களுக்குள் ஒலிக்கும் குரலை செவிமடுங்கள்.
Predicted by astro asha shah.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.