உறவினர் வருகையால் குதூகாலமாக இருக்கும் மூன்று ராசிக்காரர்கள் யார்? : சரி பாருங்கள்!

உறவினர் வருகையால் குதூகாலமாக இருக்கும் மூன்று ராசிக்காரர்கள் யார்? : சரி பாருங்கள்!

இன்று சனிக்கிழமை துவிதியை திதி சதயம் நட்சத்திரம். ஆடி மாதம் 32ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள். 

மேஷம்

இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படக் கூடும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உங்களது சாமர்த்திய பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். நிலுவை பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். மாலை நேரத்தில் ஒய்வு எடுப்பது அவசியம். 

ரிஷபம்


உங்களது நீண்ட நாள் ஆசையில் ஒன்று இன்று நிறைவேறும். வேலையில் புதிய முயற்சி சாதகமாக முடியும். உடன் பணிபுரிபவர்கள் ஆதவராக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து மோதல்கள் வேண்டாம். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். 

மிதுனம்

புது முடிவுகள் எடுப்பீர்கள். உடல் நிலை சீராகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அலுவலகத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். உங்களது கருத்தை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். இன்று பொறுமையாக இருக்க வேண்டும். 

கடகம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் குழப்பமாக காணப்படுவீர்கள். முடிந்த ஒரு பிரச்னை குறித்து சிந்திபீர்கள். ஆனால் அதில் எவ்வித பலனும் இல்லை என்பதால் அதனை மறந்து விடுங்கள். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

இன்று உற்சாகமான நாளாக அமையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் தலைமை யின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.  

 கன்னி

இன்று துணிச்சலாக அனைத்து பணிகளையும் முடிப்பீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். குடும்பத்தில் வயதான உறுப்பினருடன் விவாதம் வேண்டாம். அலுவலகத்தில் காகித வேலைகளை நிறைவு செய்வீர்கள். உடன் பணிபுரிபவர்கள் பிரச்சனையில் நீங்கள் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தொட்டது துலங்கும் நாள்.

youtube

துலாம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. குடும்பத்தின் தேவைகளை உணர்ந்து சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கனவு நனவாகும் நாள். 

விருச்சிகம்

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

 தனுசு

மனதில்  உற்சாகம் பெருக்கெடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அலுவலத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தைரியம் கூடும் நாள். 

மகரம்

இன்று எதிலும் அவசரம் வேண்டாம். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பம் தொடர்பான வேலைகளுக்காக பயணம் மேற்கொள்ள நேரிடும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தெய்வப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.   

கும்பம்

இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லகூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. எனவே நாவடக்கம் தேவை.  அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்

செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆனால் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். நாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். எனினும் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.