நண்பர்களின் பரிபூரண ஆதரவை பெறும் அதிஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் : தெரிந்து கொள்ளுங்கள்!

நண்பர்களின் பரிபூரண ஆதரவை பெறும் அதிஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று வெள்ளிக் கிழமை பிரதமை திதி அவிட்டம் நட்சத்திரம். ஆடி மாதம் 31ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள். 

மேஷம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். 

பிகில் டீமிற்குத் தங்க மோதிரம் பரிசளித்து அசத்திய நடிகர் விஜய்!பெருமையில் பூரிக்கும் குழு!

ரிஷபம்


உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் (astro) மாற்றிக் கொள்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். அலுவலகத்தில் எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நன்மை தரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். இதனால் குடும்பத்தினர் உற்சாமாக காணப்படுவார்கள். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். வியாபாரம் சூடுபிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்


இன்று தன்னம்பிக்கை குறையும் நாள். உறவினர், நண்பர்களால் செலவுகள் அதிகரிக்கும். எனினும் அனைத்து செலவுகளும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். அலுவலகத்தில் சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும். பொறுமை தேவைப்படும் நாள். 


கடகம்

இன்று உங்கள் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலக பணிகளில் சமயோசிதமாக செயல்படுவீர்கள். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.

சிம்மம்


இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். எவரிடமும் ரகசிய விஷயம் சொல்ல வேண்டாம். குடும்பத்தினருடன் உங்களின் நேரத்தை செலவழிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சீரான ஓய்வு எடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

மகனை நெஞ்சோடு அணைத்தபடி புதைந்து கிடந்த அம்மா.. மீட்பு படையினரையே கலங்க வைத்த சோகம்.. கேரளா

youtube

துலாம்

இன்று தடைகளை தாண்டி முன்னேறும் நாள். வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள்.  புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். மாலை நேரத்தை உங்கள் அன்பானவர்களுடன் செலவழிப்பீர்கள்.  

கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியவைகள்

விருச்சிகம்

மனஉறுதியுடன் நேர்மை வழியில் நடை போடுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குலதெய்வ தரிசனம் நன்மை பயக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.  

தனுசு


முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவியாக இருப்பாரகள். உங்களது சொந்த பிரச்சனை குறித்து எவரிடமும் சச்சரவு பேச வேண்டாம். நண்பர்கள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்

திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். இஷ்ட தெய்வத்தை வழிபட வாய்ப்பு கிடைக்கும். இன்றும் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் கவனம் தேவை. 

கும்பம்

இன்று நீங்கள் யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்யோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். சிலர் உங்களிடம் பொறாமை கொள்வர். குடும்பத்தில் சில சலசலப்புகள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. 

மீனம்

அலுவலகத்தில் உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும் படி இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரினருடன் மாலை நேர திட்டங்கள் வகுத்திருப்பீர்கள். திடீரென்று அறிமுகமாகும் நபரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.