குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழும் ராசிக்காரர்கள் யார்? : சரி பாருங்கள்!

குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழும் ராசிக்காரர்கள் யார்? : சரி பாருங்கள்!

இன்று பௌர்ணமி திதி திருவோணம் நட்சத்திரம். ஆடி மாதம் 30ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள். 

மேஷம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.  உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. முயற்சிகள் பலிதமாகும் நாள். 

ரிஷபம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.  உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 

மிதுனம்

இன்றைக்கு எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆனால், அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.  

கடகம்

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் உங்களுக்கு கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.  சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். உற்சாகமாக காணப்படுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விற்பனை


சிம்மம்

தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். 


கன்னி

இன்று சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள்.

youtube

துலாம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.    

விருச்சிகம்

வெற்றிக்கு வித்திடும் நாள். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். 

தனுசு

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.   

மகரம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.  

கும்பம்

மகிழ்ச்சியும், உற்சாகமுமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்குத் தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். ஆனால் உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 

மீனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிறப்பான நாள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.