இன்று புதன் கிழமை உத்திராட நட்சத்திரம் ஆடி மாதம் 29ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.
மேஷம்
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களை பாதுகாக்க கொஞ்சம் பணத்தை ஒதுக்குங்கள்.உங்களை சிறப்பாக கவனியுங்கள். நீங்கள் யாருக்காக சம்பாதிக்கிறீர்கள் உங்களுக்காகவும்தானே.இப்போது உங்கள் சந்தோஷம்தான் உங்களுக்கு முக்கியம். இது உங்களை மேலும் சாதிக்கத் தூண்டும்.
ரிஷபம்
உங்கள் தாத்தா பாட்டி அப்பா அம்மா அனைவரும் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கும் உங்கள் எல்லைகளை தகர்த்தெறியுங்கள். பரம்பரையாக கடைபிடித்த வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது. பழைய நம்பிக்கைகளையும் பயங்களையும் தகர்த்தெறியுங்கள்.
மிதுனம்
எது புரியவில்லை எது உங்களை கோவப்படுத்துகிறது என்றும், உறவு எப்படி இருக்கவேண்டும் என்றும் தெளிவாக இருக்கிறீர்கள். அதிர்ஷ்டவசமாக நட்சத்திரங்கள் உணர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது அதனால் உங்கள் துணையை விருப்பங்களையும் தேவைகளையும் எதிர்கொள்ளலாம்.
கடகம்
மற்ற மனிதர்களின் வார்த்தைகளை விட்டு விட்டு அவர்களது உடல் மொழியை கவனியுங்கள். சில சமயம் சொல்வது ஒன்றாகவும் நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பிவிட வேண்டாம். நன்கு ஆராய்ந்த பிறகு முடிவெடுங்கள். உண்மைகளைக் கண்டறியுங்கள்.
சிம்மம்
உங்கள் பொருளாதாரம் அதிகரித்துள்ளது. நீங்கள் வளர்வதை இது காட்டுகிறது. நீங்கள் உங்கள் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு எதை செய்தாலும் உங்கள் பொருளாதார வளர்ச்சி மேம்படும். உங்களுக்கு பணம் கிடைக்கும்.
கன்னி
உங்களுக்கு யாரோ ஒருவர் நல்ல செய்தியை கொண்டு வரலாம். நல்ல எதிர்காலத்திற்கான மாற்றங்கள் வருகின்றன. இந்த மாற்றங்களை உங்கள் மீது உண்மையான அன்பு கொண்ட ஒருவர் கொண்டு வருவார். உங்கள் வாழ்க்கை மாறும். திறந்த மனதோடு இருங்கள்.
துலாம்
உங்களில் ஒரு சிலருக்கு நிம்மதியற்ற உறக்கம் ஏற்படலாம். அல்லது மோசமான கனவுகள் வரலாம். உங்கள் மனதில் ஆழமாக வேரூன்றப்பட்ட சில பயங்கள் மற்றும் பாதுகாப்பின்மைகள் வெளியே வரலாம். உதவியை தேடுங்கள். இறையை நாடுங்கள்.
விருச்சிகம்
உங்களது உள்ளுணர்வு மற்றும் உளவியல் திறன்கள் உங்களை சரியான திசையில் செலுத்துகின்றது ஆகவே நீங்கள் எடுக்கும் முடிவுகளும் சரியாகவே இருக்கும். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்
தனுசு
எதற்கெல்லாம் முக்கியத்தும் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களோ அதையெல்லாம் தள்ளி வையுங்கள். உங்கள் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அது உங்களை மென்மேலும் உயர்த்தும்.
மகரம்
நீங்கள் இதற்கு முன் சந்தித்த நபரிடம் இருந்து காதல் கடிதம், பரிசு பொருட்கள், செய்திகள் வரலாம். வாழ்க்கையை சந்தோஷமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
கும்பம்
உங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பொருளாதார ரீதியாக நீங்கள் தடுமாறிக் கொண்டிருக்கலாம். அதற்காக ஏழ்மையை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களிடம் உள்ளவர்களுக்காக நன்றி செலுத்துங்கள்.உங்கள் செலவுகளை நன்றியோடு செய்யுங்கள். பணத்தை ஆகர்ஷியுங்கள்.
மீனம்
முன்னே நகர்ந்து கொண்டே இருங்கள். இந்த பிரபஞ்சம் உங்கள் வளர்ச்சிக்கு உதவ காத்திருக்கிறது. நீங்கள் சுயமாகவும் தொழிலும் முன்னேற பல விஷயங்கள் காத்து கொண்டிருக்கிறது. அவற்றை கையில் எடுங்கள். வெற்றி உங்கள் கையில்.
predicted by astro asha shah
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.