இன்று புதன் கிழமை ஸ்வாதி நட்சத்திரம் சப்தமி திதி ஆடி மாதம் 22ம் தேதி இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரி பாருங்கள்.
மேஷம்
இன்று நீங்கள் மிகவும் உயிர்ப்போடு இருக்க வேண்டிய நாள். உங்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும் நாள் என்றாலும் அதிக உணர்ச்சிவசப்படுதல் காரணமாக சரியானதைத் தேர்ந்தெடுக்கத் தவறி விடுவீர்கள். உடலுக்குத் தேவையான ஓய்வு அவசியமானது.
ரிஷபம்
தாமதமான பணவரவுகள் கிடைக்கப் பெரும் நாள். வேலை எப்பொழுதும் போல இருக்கும். குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் மற்றவர் மனம் புண்படாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்
உங்கள் மனதில் பல எண்ணங்கள் தோன்றும். நாளின் இறுதியில் எது முக்கியமானவையோ அவை முடிக்கப்படும். புதிய ப்ராஜெக்ட்ஜ்களில் உள்ள சிறிய குறைகளை நீக்க வேண்டி வரும். வாழ்க்கைத் துணையோடு உரசல் இருக்கும். புதிய நபர் அறிமுகம் இருக்கும்.
கடகம்
கொஞ்சம் நிதானம் தேவை. உடன் இருப்பவர்கள் உதவி இல்லாததால் தாழ்வாக உணர்வீர்கள். உங்கள் முடிவுகளை சந்தேகிக்க வேண்டாம். தேவையான பணவரவு இருக்கும். ஆனாலும் அதனை முறையாக ஒழுங்குபடுத்தி செலவழிக்க வேண்டியது அவசியம். தொண்டை, முதுகு, வயிறு பகுதிகளில் கவனம் வேண்டும்.
சிம்மம்
பணவரவு தொழில் வழக்கம்போல இருக்கும். எதிர்பார்த்தது நடக்காததால் ஏமாற்றம் ஏற்படலாம். வயதில் முதிர்ந்தவர்கள் உங்களுக்கு மன அழுத்தம் கொடுப்பார்கள். உங்கள் ஈகோ பிரச்னைகளை ஒதுக்கி இயல்பாக இருப்பதே நல்லது.மன அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்படும்.
கன்னி
நீங்கள் நினைத்த எல்லாம் உங்கள் விருப்பப்படியே நிறைவேறும் அதிர்ஷ்டகரமான நாள். உங்கள் பணியை முடிக்க சகபணியாளர்கள் உதவி செய்வார்கள். உங்கள் உறவுகள் நண்பர்களுடன் நேரம் செலவழியும். மனதுக்கு பிடித்தவருடன் இதயம் திறந்து உரையாடுவது உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
Youtube
துலாம்
பணியிடத்தில் சுமுகமாக இருந்தாலும் நிதி நிர்வாகங்களில் உங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதால் நீங்கள் நினைத்ததை செய்ய முடியாமல் போகலாம். ஆனால் இன்றோடு எல்லாம் முடிந்து போகப்போவதில்லையே. காத்திருங்கள். குடும்ப உறவுகளின் அறிவுரையை ஏற்கவும்.
விருச்சிகம்
கடைசி நேரத்தில் உயர் அதிகாரிகள் தரும் வேலைகளால் அழுத்தம் இருக்கும். ஆனாலும் ஒன்றை நினைவு கொள்ளுங்கள். எதுவும் கஷ்டமானது அல்ல இருப்பதை விட கொஞ்சம் வித்தியாசமானது அவ்வளவே. மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மனம் விரும்பாது ஆனாலும் நம்புங்கள் இறுதியில் நீங்கள் சிறப்பானவராக மாறுவீர்கள்.
தனுசு
இன்றைய நாளின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இன்று நடக்கும் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணங்களை யோசியுங்கள். பழைய கால தவறுகளின் அடிப்படையில் நிகழ்கால முடிவுகளை எடுக்காதீர்கள். கொஞ்சம் கடினமான இந்த நாளைக் கடந்து விடுங்கள்.பின்னர் சுகம்தான்.
மகரம்
இன்று ஒரு புதிய ஆரம்பமாக இருக்கலாம். புது சிந்தனைகள், புது ப்ராஜெக்ட்கள், புது வேலை கூட உங்களுக்கு கிடைக்கலாம். எல்லோருடனும் ஒத்துப் போவது நல்லது. மற்ற மனிதர்களை அவர்களின் சூழ்நிலைகளை எடை போடுவதை நிறுத்தி விடுங்கள். சுவாரஸ்யமான நபரை சந்திப்பீர்கள்.
கும்பம்
இன்று வேலை பிரதானமாக இருப்பதால் குடும்ப உறவுகளுடன் நேரம் செலுத்த முடியாமல் போகலாம். அதனால் அவர்களின் தேவைகள் கவனிக்கப்படாமல் போவதால் ஒரு குடும்ப நாடகம் இன்று அரங்கேறலாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். எதையும் முன்கூட்டி திட்டமிடாதீர்கள். வீணாகும்.
மீனம்
உங்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும் பணியில் ஏற்படும் தாமதங்களால் தடுமாறுவீர்கள். அதிக தன்னம்பிக்கை உங்களை சிதைக்கலாம். கவனம். எவ்வளவுக்கெவ்வளவு மனிதர்களுடன் ஒத்துப் போகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நேர்மறைத் தன்மை அதிகரிக்கும். தடைபட்ட பணவரவு சீராகும்.
predicted by astro asha shah
தமிழகமே கொண்டாடும் இந்த அத்தி வரதர் யார்? இவரின் சிறப்புகள் என்ன?பலன்கள் என்ன?பார்க்கலாமா!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன