logo
ADVERTISEMENT
home / Bigg Boss
யார் இந்த மீரா மிதுன் : மிஸ் சவுத் இந்தியா பட்டம், பண மோசடி வழக்கு.. நடந்தது என்ன?

யார் இந்த மீரா மிதுன் : மிஸ் சவுத் இந்தியா பட்டம், பண மோசடி வழக்கு.. நடந்தது என்ன?

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடல் அழகியான மீரா மிதுன் (meera) பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவர் எல்லாரிடமும் சண்டை போட்டு வருகிறார். இதனால் பார்வையாளர்கள் இவர் மீது அவ்வப்போது எரிச்சல் அடைவது உண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் மீரா மிதுனுக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்தது. 

twitter

மிஸ் சவுத் இந்தியா “மீரா”

ஃபெமினா மிஸ் இந்தியா சார்பாக கடந்த 2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தைப் பெற்றவர் தமிழ் செல்வி என்கிற மீரா மிதுன் (meera). சென்னையை சேர்ந்த மாடல் அழகியான இவர், இதற்கு முன்னதாக மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட 6 அழகி பட்டத்தை தட்டிச் சென்றவர். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். 

ADVERTISEMENT

மீராவை இழுத்து அருகே அமர்த்திய சரவணன்.. கொதிக்கும் சேரன்.. இன்றைய Bigg Boss !

இதற்கிடையில் இவர் சுயமாக தமிழ்நாடு டைவா என்ற பெயரில் அழகிப் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்காக அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பல மாடல்களை தேர்வு செய்து வந்தார். தான் நடத்தவிருந்த அழகிப் போட்டி நிகழ்ச்சியை நடத்த விடாமல் ஜோ மைக்கேல் மற்றும் அஜித் ரவி என்பவர் தடுத்து நிறுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து அவர்கள் தங்களை தொடர்ந்து மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார். 

twitter

ADVERTISEMENT

மீரா மீதான முறைகேடு புகார்கள்

மேலும் மாடல் அழகியான நிருபா என்ற பெண் அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நுழைவு கட்டணமாக 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பல்வேறு நபர்களிடம் வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்திவரும் மிஸ் தமிழ்நாடு அமைப்பின் லோகோவை கூட இவர் தவறுதலாக பயன்படுத்தி மாடல்களை தேர்வு செய்து வந்ததாகவும் அதன் மூலம் பல்லாயிரக் கணக்கில் பணம் பறித்ததாகவும்  மீரா மீது குற்றம் சாட்டினார். 

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் தன்னிடம் மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாகக் கூறி 50000 ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் மீரா (meera) மீது புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து தேனாம்பேட்டை காவல்துறையினர் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். மீராமிதுன் அழகிப் போட்டி நடத்த அனுமதியே பெறவில்லை என்றும், அவர் அழகிப்போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அழகிப் பட்டத்தை இழந்த மீரா

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா பங்கேற்றுள்ளதால் இந்த நிகழ்ச்சி முடித்ததும் விசாரணைக்கு அராஜராவதாக மீரா தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து மிஸ் சவுத் இந்தியா லோகோவை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக மீரா மிதுன் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் அவர் சிக்கி தவித்தார். இதனிடையே தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆனதை மறைத்து திருமணமாதவர் என கூறி ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டத்தை வென்றது தெரிய வந்தது. இதன் எதிரொலியாக மீரா மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் ‘மிஸ் சவுத் இந்தியா’ என்கிற அழகிப் பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு தெரிவித்தது.

கிராமத்து மண் மனம் வீசும் பிக் பாஸ் இல்லம் : தர்ஷனுக்கு அம்மாவான மீரா!

ADVERTISEMENT

சைக்கோ கணவனால் பாதிப்பு

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுனுக்கு அவரது கணவர் குறித்து சொல்லுங்கள் என்று டாஸ்க் வந்தது. அப்போது பேசிய மீரா மிதுன், என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அனால் திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து தான் அவன் ஒரு சைக்கோ என்று தெரிந்தது.

twitter

இப்படி ஒருவரை எனக்கு திருமணம் செய்துவிட்டோமே என்று அப்பா மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் நான் என் கணவருகாக காத்திருப்பதாக சொன்னேன். என் பிறந்தநாளன்று நானே அவரை பார்க்க சென்றேன். அப்போது பேசிகொண்டே இருக்கும் போது என்னை அவர் அறைந்துவிட்டார். அந்த சம்பவத்திற்கு பின்னர் யார் மீதும் எனக்கு எந்த எண்ணமும் வரவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். 

ADVERTISEMENT

நிஜத்திலும் நடிக்கும் பிரியங்கா சோப்ரா ? வைரலாகும் ‘புகை’ படம் !

தான் எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. எனக்கு வேண்டாதவர்கள் சிலர் நான் நடத்த இருந்த அழகிப் போட்டியை நடத்த விடாமல் தடுக்கின்றனர். எனக்கு கொலை மிரட்டல்களும் வருகிறது என அவர் கூறியுள்ளார். யார் மீது தவறு உள்ளது என தற்போது வரை தெரியாமல் உள்ளது. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்து வெளியில் வந்த பின்னர் தான் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
25 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT