வீட்டிலிருந்தே குடிநீரை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி?

வீட்டிலிருந்தே குடிநீரை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி?

இன்று பல நீர்(water) சுத்திகரிப்பு சாதனங்கள் வந்து விட்டது. அதிலும் குறிப்பாக யு வி மற்றும் ஆர் ஒ சுத்திகரிப்பு சாதனங்கள் பிரபலமாகிக் கொண்டே இருகின்றது. இதற்கிடையே, மக்களுக்கு இன்று பெரும் அளவு இத்தகைய சாதனங்களை பற்றின விழிப்புணர்வும் பெருகிக் கொண்டே இருகின்றது. குறிப்பாக இப்படி ஆர் ஒ சுத்திகரிக்கப் பட்ட நீர், மற்றும் மினரல் சேர்க்கப்பட்ட தண்ணீர், என்பதெல்லாம், நம் உடலுக்குத் தேவையான சத்து நிறைந்த நீரை தரும் முறை அல்ல, அவை உண்மையில், சத்துக்கள் நீக்கப் பட்ட, மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட, செயற்கையான சுவை சேர்க்கப்பட்ட நீர் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். மேலும் இது வெறும் லாபத்திற்கு மக்களை கவர நிறுவனங்கள் செய்யும் தொழில் என்பதையும் மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.

இப்படி செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்(water), பல உடல் உபாதைகளை உண்டாக்குகின்றது என்பதை, மக்கள் இன்று உணரத் தொடங்கி விட்டனர். அதிலும், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த செயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்துவதால், வயிற்று வலி, உடல் சோர்வு, மூளை மந்தம், ஜீரண பிரச்சனை என்று பல உண்டாகின்றது.

இத்தகைய அச்சுறுத்தும் குடி தண்ணீரை ஒதுக்கி விட்டு, நீங்கள் எளிதாக வீட்டில் இருந்தபடியே உங்கள் வீட்டிற்குள் வரும் தண்ணீரை எப்படி இயற்கையாக சுத்தம் செய்து, இயற்கையாக அதில் உள்ள சத்துக்களை தக்க வைத்து, அருந்துவது என்பதை பற்றி இங்கே காணலாம்!

 

 

pixabay

1. தேத்தான் கொட்டை: இன்று பெரும்பாலானவர்களுக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த கொட்டை எளிதாக நாடு மருந்து கடைகளில் மலிவான விலைக்கு கிடைக்கும்.  நம் முன்னோர்கள், ஏன் இன்றும் கிராம புறங்களில் இந்த தேத்தான் கொட்டையை பயன் படுத்தியே தண்ணீரை சுத்தம் செய்து அருந்துகின்றனர். இது தண்ணீரை சுத்தம் செய்வது மட்டுமல்லாது, அந்த தண்ணீரில் PH அளவையில் அதிகரித்து கொடுக்கின்றது. இது தண்ணீரில் இருக்கும் கிருமிகளை நீக்கி, சுத்தம் செய்கிறது. இந்த தேத்தான் கொட்டையை நன்கு பொடி செய்து குடத்தில் இருக்கும் குடிக்கும் தண்ணீரில் கலந்து விடலாம்.

மற்றுமொரு சிறந்த முறை என்னவென்றால், மண் பானையில், இந்த தேத்தான் கொட்டையை ஒன்றை எடுத்து நன்கு உரசி விட்டும் அதன் பின் தண்ணீரை பானையில் ஊற்றி பின் குடிக்க பயன்படுத்தலாம். இந்த முறை மேலும் நல்ல பலனைத் தரும். இந்த முறையில், நீங்கள் தண்ணீரை கொதிக்க வைத்து, பானையில் ஊற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படியே நேரடியாக பானையில் ஊற்றி பயன் படுத்தலாம்.

உங்கள் வீட்டில் கிணறு இருந்தால், அதில் சிறிதளவு இந்த தேத்தான் கொட்டையை போட்டு விடலாம். இதனால், கிணற்று நீர் சுத்தமாகவும். குடிக்க தகுதியானதுமாக மாறும்.

2. மூலிகை கலந்த நீர்: ஒரு மண் பானையில் தண்ணீர் ஊற்றி, அதனுடன் சில மூலிகைகளை கலந்து பயன்படுத்துவதால், அந்த நீர்(water) குடிக்க தகுதியானதாக மட்டும் அல்லாமல், நல்ல சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். குறிப்பாக, ஒரு சிறிய வெள்ளைத் துணியில், சிறிது சீரகம், கரும் சீரகம், மிளகு, திப்பிலி, நன்னாரி, வெட்டிவேர், மற்றும் துளசி போன்ற மூளிகளிகளை கட்டி, பானைக்குள் போட்டு விட வேண்டும். அப்படியே இரவு முழுவதும் விட்டுவிட்டால், அந்த நீரில் இந்த மூலிகைகளின் சத்துகள் இறங்கி விடும். இப்படி சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் சேர்க்கப்பட்ட நீர், மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கும்.

 

pixabay

3.   அடுப்பு கரி மற்றும் மண் சுத்திகரிப்பு: இந்த முறையில், நீங்கள் மூன்று மண் பானைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலே முதலில் இருக்கும் பானையில் ஆற்று மணலை நன்கு சுத்தம் செய்து பாதி பானை வரை நிரப்ப வேண்டும். நடுவில் இருக்கும் பானையில், அடுப்பு கரி போட்டு நிரப்ப வேண்டும். இந்த இரண்டு பானைகளுக்கும் அடியில் சிறு துளை போட்டு, நீர் சிறிது சிறிதாக சொட்டும் வகையில் வைக்க வேண்டும்.. மூன்றாவதாக கீழே இருக்கும் பானையின் வாயில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணி அல்லது வடிகட்டி வைத்து, அதன் மேலே இவ்விரண்டு பானைகளையும் வைக்க வேண்டும். இப்போது, மேலே முதலில் இருக்கும் பானையில் நீரை ஊற்ற வேண்டும். மெதுவாக சிறிது நேரத்தில், நீர் நன்கு வடி கட்டி, அடியில் இருக்கும் பானையில் சேர்ந்து விடும். இந்த நீர் இப்போது அருந்த பாதுகாப்பானதாகவும், ஏற்றதாகவும் இருக்கும். மேலும் இது குளிர்ந்து, ருசியாகவும் இருக்கும். இதனை அனைவரும் தங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

4. கூலாங்கற்கள் மற்றும் புற்கள்: மற்றொரு முறையில், நீங்கள் கூடுதலாக ஒரு பானை மேலே வைத்து அதில் கூலாங்கற்களை போடலாம். மேலும், அடுப்புகரி இருக்கும் பானைக்கு அடுத்தபடியாக, கீழே ஒரு பானையில் அருகம்புற்களை போட்டு வைக்கலாம். இதற்கு கீழே நீங்கள் அருந்தும் நீர்(water) சேகரிக்கப் படும். இந்த முறை மேலும் சிறப்பானது. எனினும், இதற்கு நீங்கள் 5 பானைகளை வைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் முன்பு இருந்தது போல, மேலே இருக்கும் இரண்டு பானைகளில், பாதி பாதியாக இந்த நான்கு பொருட்களையும் அடுக்காக வைத்து நீரை விடவேண்டும்.

5. கொதிக்க வைத்து குடிப்பது: பெரும்பாலும் நகரப் புறங்களில் இருப்பவர்கள், இந்த முறையை பின்பற்றுவார்கள். இப்படி கொதிக்க வைத்த தண்ணீரில் கிருமிகள் மடிந்து, குடிக்க தகுதியான நீராக ஆகும். எனினும்  பெரும்பாலனவர்கள் இதை செய்வதில்லை. எனினும், இதுவும் ஒரு நல்ல முறையே.

இந்த சுத்திகரிப்பு முறைகள் மட்டுமல்லாமல், நீங்கள் மேலும் எளிதாக ஒரு மண் பானையில் தண்ணீர் வைத்து, அதில் ஒன்று அல்லது இரண்டு தேத்தான் கொட்டையை சேர்த்து, அதனுடன் ஒரு சிறிய செம்பு பாத்திரம், அல்லது ஏதாவது ஒரு சுத்தமாக இருக்கும் செம்பு பொருளை இதனுடன் சேர்க்கலாம். அல்லது செம்பு பானையில் நேரடியாக தண்ணீர் வைத்து குடிக்கலாம். இது மேலும் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். தண்ணீரும் பல மடங்கு சத்து நிறைந்ததாக இருக்கும். இன்று கடைகளிலும், தெருவோர கடைகளிலும், பல வகைகளில், மற்றும் அளவுகளில் மண் பானைகள் மற்றும் செம்பு பானைகள் கிடைகின்றன. இவற்றில் உங்களுக்கு எளிமையான ஒரு முறையை பின் பற்றி, சுத்தமான, சத்து நிறைந்த மற்றும் ஆரோக்கியமான தண்ணீரை அருந்துங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.