சமையல் என்று வந்து விட்டாலே, அனைவரும், உடனடியாக நினைப்பது, அடுப்பை பற்றித் தான். அனைவருக்கும், அடுப்பில்லாமல் எப்படி சமைப்பது(recipes)? அப்படி சமைக்க ஒரு வழி இருக்கும் என்றால், அதை விட ஒரு சிறந்த விடயம் என்னவாக இருக்க முடியும்? என்கின்ற ஆச்சரியம் இருக்கும்.
நிச்சயம் எளிதாகவும், விரைவாகவும், சுவையாகவும் உங்களால் அடுப்பின் உதவி இன்றி சமைக்க(recipes) முடியும். மேலும் அந்த சமையலை உங்கள் குடும்பத்தினர்களும், குறிப்பாக குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.
உங்களுக்காக உதவ, இங்கே ஒரு சில சமையல்(recipes) குறிப்புகள். முயற்சி செய்து பாருங்கள்!
1. அவள் காலை உணவு
இதை நீங்கள் 1௦ நிமிடத்தில் செய்து விடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்;
தேவையான பொருட்கள்:
· அரிசி அல்லது கேழ்வரகு அவல் ஒரு கப்
· துருவிய காரட் அரை கப்
· ஒரு பாதி எலுமிச்சை பழச்சாறு
· உப்பு தேவைக்கேற்ப
· இரண்டு சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய்
· சிறிது மெல்லியதாக துருவிய முட்டைகோஸ்
· சிறிது துருவிய தேங்காய் (தேவைப்பட்டால்)
· ஒரு சிறிய வெங்காயம் – சிறியதாக நறுக்க வேண்டும்
· தக்காளி தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்
· சிறிது மஞ்சள் தூள்
· கொத்தமல்லித்தளை / கருவேப்பிள்ளை
செய்முறை:
· அவலில் சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைத்துக் கொள்ளவும்
· இதனுடன் இப்போது துருவிய கேரட், முட்டைகோஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சைசாறு போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
· இறுதியில், தேங்காய் துருவல் மற்றும் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிள்ளை தூவி விட்டு பரிமாறவும்.
2. அவல் காலை உணவு இனிப்பு
இது சத்தும், சுவையும் நிறைந்த ஒரு காலை உணவு. இதை நிச்சயம் உங்கள் குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
· அவல் ஒரு கப்
· நாட்டு சர்க்கரை கால் கப்
· பேரிச்சம்பழம் 3 – 5
· முந்திரி பருப்பு 5
· உலர்ந்த திராட்சை 1௦
· ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை
· நெய் 2 தேக்கரண்டி
· தேங்காய் துருவல் சிறிதளவு
செய்முறை
· சிறிது தண்ணீர் தெளித்து அவலை ஊற வைத்துக் கொள்ளவும். இதனுடன் இப்போது, தேவையான நாட்டு சர்க்கரை, சிறு துண்டுகளாக வெட்டியா பேரிச்சம்பழம், உடைத்த முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, ஏலக்காய் பொடி, நெய் மற்றும் தேங்காய் துருவல், ஆகிய அனைத்தையும் சேர்த்து கிளறவும். இப்போது அனைவருக்கும் பரிமாறலாம்.
3. வாழைத்தண்டு பச்சடி: இதை மிக எளிதாக செய்து விடலாம். இதில் அதிக நார் சத்து நிறைந்துள்ளது. மேலும் வழக்கமாக செய்யும் வெங்காயப் பச்சடிக்கு மாறாக இதனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
· வாழைத்தண்டு 1௦௦ கிராம்
· இஞ்சி சிறிய துண்டு
· தில் கால் கப்
· உப்பு தேவைகேற்ப
· ஒரு பச்சை மிளகாய்
· கொத்தமல்லி மற்றும் கருவேப்பிள்ளை
செய்முறை
· வாழைத்தண்டை நார் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
· ஒரு கப்பில் கெட்டியாக தயிர் எடுத்துக் கொண்டு, அதில் வாழைத்தண்டை சேர்க்கவும்
· இதனுடன், சிறிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை சேர்க்கவும்
· இப்போது, தேவைகேற்ப உப்பு சேர்க்கவும்
· இறுதியாக சிறிதாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும்
· தேவைப்பட்டால் கருவேப்பிள்ளை சேர்க்கலாம்
4. புதினா எழுமிச்சைபலசாறு
இந்த சாரில் அதிகம் பொட்டசியம், கால்சியம் மற்றும் பிற தாது சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
· புதினா சிறிதளவு
· 2 எலுமிச்சைபழம்
· நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப
செய்முறை
· புதினா தலையை அம்மியிலோ அல்லது மிக்சரிலோ போட்டு அரைத்துக்கொள்ளவும்
· எலுமிச்சை பலன்களை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்
· இரண்டையும் கலந்து, தேவைகேற்ப தண்ணீர் விட்டு, மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்
· குறிப்பு: புதினா தலைகளுடன், ஒரு எழுமிச்சைபழத்தின் தொலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
· குளிர்சாத பெட்டியிலோ, அல்லது மண் குவளையிலோ சிறிது நேரம் வைத்து, சிறிது குளிர்ந்த பின் அருந்தலாம்
5. பச்சைபயிறு சாலட்
உங்களத காலை அவல் உணவிற்கு ஏற்ற ஒரு பக்க உணவாக இது இருக்கும். மேலும் இதில் அதிக சத்துகளும் உள்ளது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
· ஒரு இரவு முழுவதும் ஊற வைத்த பச்சை பயிர் ஒரு கப்
· துருவிய காரட் கால் கப்
· அரை எழுமிச்சைபழ சாறு
· உப்பு தேவைகேற்ப
· பச்சை மிளகாய் அல்லது சிறிது மிளகு பொடி, காரத்திற்கு
· கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
· பச்சைபயிரை நன்கு ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
· இதனுடன் துருவிய காரட், மற்றும் மிளகுத் தூள், உப்பு தேவைக்கேற்ப, கொத்தமல்லி, எழுமிச்சைபழ சாறு ஆகியவற்றை சேர்த்து, நன்கு கிளறி பரிமாறலாம்.
6. பீட்ரூட் வேர்கடலை பொரியல்
இது மற்றுமொரு சுவையான மற்றும் சத்து நிறைந்த உணவு. எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
· மெல்லியதாக துருவிய பீட்ரூட் ஒன்று
· குறைந்தது 4 மணி நேரம் ஊற வித்த வேர்கடலை
· பாதி எழுமிச்சைபழ சாறு
· சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாய்
· சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிள்ளை
· உப்பு தேவைகேற்ப
செய்முறை
· பீட்ரூட்டை மெல்லியதாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள்
· இதனுடன் நன்கு ஊற வைத்த பச்சை வேர்கடலையை சேர்த்துக்கொள்ளுங்கள்
· இதில் சிறிது எழுமிச்சைபழ சாற்றை சேர்க்கவும்
· தேவைகேற்ப உப்பை சேர்த்து, பின் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிள்ளை சேர்க்கவும்
· தேவைப்பட்டால் தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம்.
· அனைத்தையும் நன்கு கிளறி, பரிமாறவும்
இந்த அடுபிள்ள உணவுகள் ருசியாக மட்டும் இல்லாமல், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இதை நீங்கள் நிச்சயம் ஒரு முறையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், காலையில் எளிதாக செய்து கொடுக்க இது ஒரு நல்ல உணவாக இருக்கும். இனி நீங்கள் அடுப்பை மறந்து விடலாம். எங்கு இருந்தாலும், இதை எளிதாக செய்து விடலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.