பட்டுப்போன்ற மென்மையான உதடுகளுக்கு : வீட்டிலேயே லிப் ஆயிலை தயார் செய்வது எப்படி?

பட்டுப்போன்ற மென்மையான உதடுகளுக்கு :  வீட்டிலேயே லிப் ஆயிலை தயார் செய்வது எப்படி?

லிப் பாமில் உள்ள பிசுபிசுப்பு தன்மையும் பலவகையான உதட்டுச் சாயங்களில் உள்ள விடாப்பிடியான நிறமிகளையும் நீங்கள் விரும்பவில்லை என்றால் ட்ரெண்டில் உள்ள லிப் ஆயில்களை (lip oil)  பயன்படுத்தி பாருங்கள். இதில் இருக்கும் நர்குணங்கள் உங்கள் உதட்டிற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதை உலர்ந்து போகாமல் மென்மையாக மாற்ற உதவும் . 

லிப் ஆயில் என்றால் என்ன?

பெரும்பாலும் கூந்தலுக்கும் சருமத்திற்கும் தேவையான ஊட்டச்சத்தை எண்ணைகள் அளிப்பது போல் உங்கள் உதட்டிற்கும் தேவையான பராமரிப்பை  இது போன்ற லிப் ஆயில்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். 

இதன்  அமைப்பு முற்றிலும் எண்ணையாக  இருப்பதால் உங்கள் உதட்டில் இது போதுமான ஈரத் தன்மையை அளித்து  பல மணி நேரங்களுக்கு வறண்டு போகாமல் பாதுகாக்கும்.

லிப் ஆயில் தயாரிப்பது எப்படி?

இதை இப்போது வீட்டுலயே எளிதில் தயார் செய்து பயனடையலாம்!

 

Shutterstock

தேவையான பொருட்கள்

 • ஒரு சிறிய ரோல் ஆண் பாட்டில்  அல்லது ஏதேனும் பழைய காலியான லிப் க்ளோஸ் பாட்டில் 
 • மல்லிகை / லாவெண்டர் எண்ணெய் 
 • ஜோஜோபா ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் 
 • ஆர்கன் ஆயில் 
 • கேரட் விதை எண்ணெய் 
 • பெப்பெர்மிண்ட் எண்ணெய்
 • லிப்ஸ்டிக் ( நீங்கள் விரும்பும் நிறத்தில் ) 

தயாரிக்க படிகள் -

 1. முதலில் 5-7 சொட்டு ஆர்கன் எண்ணையை ஒரு  பாட்டிலில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆர்கன் எண்ணெய் சீரற்ற வெடிப்புற்ற உதடுகளை எளிதில் சேரி செய்ய உதவுகிறது. மேலும் இது சூரிய ஒளியினால் சேதமடையும் சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும். 
 2. அடுத்து, 5-7 சொட்டு ஜோஜோபா அல்லது தேங்காய் எண்ணையை இதில் கலந்து கொள்ளவும்.  இதில் இருக்கும் ஈரப்பதம் உங்கள் உலர்ந்த உதட்டை லாக் செய்து விரைவில் மென்மையாக்கி  நீண்ட நேரம் நீடிக்க உதவும். 
 3. 3-4 சொட்டு மல்லிகை எண்ணையை சேர்த்து    இங்கு ஒரு வாசனை திரவியமாக பயன்படுத்தலாம். மேலும், இதில் இருக்கும்   கிருமி நாசினிகள் உங்கள் உதட்டை பாதுகாத்து பட்டு போன்று மென்மையாக மாற்ற உதவும். இதற்க்கு பதிலாக லாவெண்டர் எண்ணையும் இதற்க்கு பொருத்தமானது. 
 4. இது போதாவிட்டால் , 5-7 சொட்டு கேரட் எண்ணையை  சேர்க்கவும். கேரட் விதை எண்ணெய் ( ஸஃப் 30-40)  உங்கள் உதடுகளை சூரிய ஒளியினால் ஏற்படும் சேதம் மற்றும்  நிறம் மாற்றத்தை அக்கற்ற உதவும்! மேலும் பெப்பெர்மிண்ட் எண்ணெய் உங்கள் வறண்ட எரிச்சலூட்டும் உதட்டை குளிர்ச்சி ஆக்கி பாதுகாக்க உதவும்.  உங்கள் தேவைக்கேற்ப்ப நீங்கள் இங்கு கூறியிருக்கும் எண்ணெய்களை சேர்த்துக்கொள்ளலாம். 
 5. இதை நிறமின்றி உதட்டில் தினமும்  பூசிக்கொள்ளலாம். அல்லது உங்களுக்கு ஒரு நிறம் கொண்ட லிப் ஆயில் தேவைப்பட்டால், உங்கள் பழைய லிப்ஸ்டிக்கை சிறிதளவு எடுத்து, அதை சூடாக்கி உருக்கி அதை மேல் கூறியிருக்கும் எண்ணையுடன் கலந்துகொள்ளுங்கள். 

உங்களுக்கு தேவையான அற்புதமான லிப் ஆயில் தயார்! 

குறிப்பு - மெட் லிப்ஸ்டிக்கில் சிறிது லிப் ஆயிலை கலந்து ஒரு க்ளோஸி தோற்றத்தை அடையலாம் .லிப் ஆயில் பலன்கள்

Pexels

 • இதை நீங்கள் தினமும் பூசிக்கொள்ளலாம். 
 • இதில் வெறும் எண்ணெய் வகைகள் மட்டுமே இருப்பதால், உங்கள் உதடு விரைவில் பட்டு போன்ற மிருதுவான தோற்றத்தை அடைந்து விடும். 
 • லிப் பாம் அல்லது லிப்ஸ்டிக்கை விட இது நீண்ட நேரம் நீடிக்கும் 
 • பிசுபிசுப்பு தன்மை இல்லை 
 • விலை குறைவு 
 • பக்க விளைவுகள் இல்லை
 • இது ஒன்றே லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாமாகவும் செயல் படும்

உங்களிடம் ஏற்கனவே போதுமான அளவிற்கு ஏராளமான லிப்ஸ்டிக் வகைகள் உள்ளது என்றால், இதுபோல் ஒரு லிப்  ஆயிலை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற நிறத்தில் இனி வீட்டிலேயே அதிக செலவின்றி தயாரித்து பயனடையலாம்! 

பட ஆதாரம்  - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.