எனக்கான டேட்டிங் பார்ட்னரைத் தேடிய என் கணவர்! சோனம் கபூரின் காதல் கதை!

எனக்கான டேட்டிங் பார்ட்னரைத் தேடிய என் கணவர்! சோனம் கபூரின் காதல் கதை!

பாலிவுட்டின் ஹாட் இளம் தம்பதிகளில் முக்கியமானவர்கள் சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜா (sonam kapoor anandh ahuja). சோனம் எங்கு சென்றாலும் உடன் செல்லும் ஆனந்த் அஹுஜா , சமயங்களில் பொது இடத்தில் மனைவி சோனம் கபூரின் ஷூ லேஸைக் கூட கட்டி விடத் தயங்காத காதல் கணவர்.

இவர்களின் காதல் கதை எப்படி ஆரம்பித்தது என்று சமீபத்தில் சோனம் கபூர் மனம் திறந்து பேசி இருக்கிறார். சோனம் கபூர் வெகு நாட்களாக சிங்கிள் ஸ்டேட்டஸில் இருக்க அவரது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சோனம் கபூருக்கு டேட் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

அவரது கணவரான ஆனந்த் அஹுஜாவின் நண்பர்தான் சோனம் கபூரின் டேட் என நண்பர்கள் நிச்சயம் செய்தனர். கடந்த 2015ல் விளம்பர படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது சோனம் கபூரை நண்பர்கள் பார்ட்டி ஒன்றிற்காக அழைத்தனர்.

Youtube

அங்கே சென்ற சோனம் கபூருக்கு சில ஆண் நண்பர்களை அந்த நண்பர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதனால் கோபமான சோனம் கபூர் எனக்கு டேட்டிங் பிடிக்காது திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று நண்பர்களிடம் கோபமாக கூறி இருக்கிறார். அதன் பின்னர் ஆனந்த் மற்றும் அவரது நண்பரை சந்தித்தும் பேசியிருக்கிறார்.

சோனமின் நண்பர்கள் அவருடன் சேர்த்து வைக்க நினைத்த ஆனந்தின் நண்பர் நல்ல குணாதிசியங்களுடன் இருந்தாலும் அவர் பார்ப்பதற்கு சோனம் கபூரின் தம்பி சாயலில் இருப்பதால் சோனம் கபூர் அவரை நிராகரித்திருக்கிறார்.

ஆகவே அதற்கு பதிலாக ஆனந்த் உடன் அதிகமாக பேசியிருக்கிறார். ஆனந்திற்கு சோனம் கபூரின் அப்பா அனில் கபூர் என்பது தெரியாமலேயே சோனம் உடன் பேசியிருக்கிறார். ஆனந்தோ சோனம் கபூரை தனது நண்பருடன் பேச வைக்க முயற்சி செய்யும்போதெல்லாம் சோனம் கபூர் ஆனந்துடன் அதிகமாக பேசியிருக்கிறார்.

Instagram

இது எதுவும் புரியாத ஆனந்த் அஹுஜா முகநூலில் சோனம் கபூருக்கு நட்பு விண்ணப்பம் கொடுத்து இன்னும் சிங்கிளாக இருக்கிறீர்களே எனது நண்பன் லண்டனில் இருக்கிறான். அவனும் சிங்கிள்தான். அவனோடு பேசுங்கள் என்று கூறினாராம்.

அப்போது ஆனந்த் அஹுஜாவை கண்டபடி திட்டிய சோனம் கபூர் அதன் தொடர்ச்சியாக ஆனந்த் அஹுஜாவுடன் பேசியிருக்கிறார். அதனை அடுத்து இருவரும் சந்தித்திருக்கின்றனர். அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து இன்னும் உங்கள் நண்பருடன்தான் நான் பேச வேண்டுமா என்று சோனம் கபூர் கேட்டிருக்கிறார்.

உடனடியாக ஆனந்த் அஹுஜா நீ எனக்குதான் வேறு யாரிடமும் நீ பேச வேண்டாம் என்று தனது காதலைக் கூறியிருக்கிறார். தங்கள் காதல் இப்படித்தான் ஆரம்பித்தது என்று சோனம் கபூர் கூறியிருக்கிறார். சினிமாவில் இருப்பவர்களின் காதலும் சில சமயம் சினிமாவைப் போலவே ஆகி விடுகிறது!

Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                               

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.