தாம்பத்யத்தில் சிக்கலா! வீட்டில் உள்ள இந்தப் பொருள் ஆண்மையை அதிகரிக்கும் என்பது தெரியுமா!

தாம்பத்யத்தில் சிக்கலா! வீட்டில் உள்ள இந்தப் பொருள் ஆண்மையை அதிகரிக்கும் என்பது தெரியுமா!

தாம்பத்யம் என்பது இரண்டு உடல்கள் மட்டும் இணைவதல்ல. இரண்டு மனங்களும் கவலைகள் இல்லாமல் கலவியில் ஈடுபடும்போதுதான் அதன் சுகம் முழுமையாக உணர முடியும்.

ஆனால் பெரும்பாலான தம்பதிகள் கொஞ்சம் கவலையோடுதான் கலவி கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் நமது மனைவியைத் திருப்தி செய்கிறோமா என்கிற கவலை ஆண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

இதனை சரி செய்ய ஆண்மை குறைவு (impotency) சிக்கலைப் போக்க நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் விஷயம் இருக்கிறது என்றால் பெண்களாகிய நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இது உண்மைதான்.

பெண்ணின் உடலில் இத்தனை ஜி ஸ்பாட்களா ! இனி உங்கள் தாம்பத்யம் உச்சத்தில் பறக்கட்டும் !

 

 

pinterest

உளவியல் ரீதியான மன அழுத்தங்கள், உண்ணும் உணவில் ஏற்படும் மாற்றங்கள், உடல் உழைப்பு இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்னை ஏற்படுகிறது.

சந்தோஷமான தாம்பத்யம் என்பது கேள்விக்குறியாகப் போவதால் பெண்களும் மனரீதியாகப் பாதிப்படைகின்றனர். இதற்கு சிறந்த மருந்தாக வந்திருக்கிறது நம் அஞ்சறை பெட்டியில் இருக்கும் மஞ்சள்.

ஆண்களின் விறைப்புத் தன்மை பிரச்னைக்கு மஞ்சள் நல்ல தீர்வாக இருப்பதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இருந்து எல்லாவிதமான ஆண்மை குறைவு பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது மஞ்சள்.

மஞ்சளில் இருக்கும் சிறப்பு வேதிப்பொருளான கர்குமின் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்மை குறைவுக்கான மருந்துகளை விட அதிகமான அளவில் ஆற்றல் மிகுந்ததாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மஞ்சளை அடிப்படை பொருளாகக் கொண்டு ஆயின்மென்ட் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் தயாரிக்க இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

 விமானத்தில் உடலுறவு .. வித்தியாச ஆசையால் நடந்த விபரீதம் !

Youtube

ஆண்கள் இந்த ஆயின்மென்டை அவர்களின் அடிவயிற்றுப் பகுதியில் தேய்த்து வர வேண்டும். அப்படி தேய்க்கும் சமயம் ரத்த ஓட்டம் ஆணுறுப்புக்கு சமமாக செல்வதால் விறைப்புத் தன்மை அதிக நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஆகவே மஞ்சள் என்பது இனி பெண்களுக்கானது என்று ஒதுக்காமல் ஆண்களும் தங்களுக்கு குறைகள் இருப்பதாக உணரும் பட்சத்தில் சிறிது மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த கலவையைத் தங்கள் அடிவயிற்றில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தாம்பத்யம் இனிக்கும். மனைவியை முன்பைப் போலவே திருப்தி பட வைக்க முடியும் என்பதால் வீட்டுப் பெண்கள் தங்கள் கணவர்களுக்கு இந்த முறையை சொல்லிக் கொடுக்கலாம்.

உண்ணும் உணவில் மஞ்சள் பொடியின் தாக்கம் எப்போதுமே இருக்கிறது. ஆகவே இயன்ற பொழுதுகளில் அளவான முறையில் மருத்துவரின் ஆலோசனையுடன் மஞ்சள் எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் நுரையீரல் பிரச்னைகள் சரியாகிறது. அல்லது வெறும் நீரில் போட்டு தேநீர் போலவும் அருந்தலாம்.

 கூடலுக்கு பின்னர் ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன ? தெரிந்து கொள்ளுங்கள் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                      

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.