காசோலை மோசடியில் கைதாகும் ராதிகா மற்றும் சரத்குமார் ..சிறைக்கு போகிறார் ராணி வாணி ராதிகா ?

காசோலை மோசடியில் கைதாகும் ராதிகா மற்றும் சரத்குமார் ..சிறைக்கு போகிறார் ராணி வாணி ராதிகா ?

ராடான் நிறுவனரும் நடிகையுமான ராதிகா மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இவர்கள் இருவரும் மீதும் பிடி வாரண்ட் பிறப்பித்து பரபரப்பு உண்டாகியிருக்கிறது சைதாப்பேட்டை கோர்ட்.                                           

நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஆகிய இருவரும் மேஜிக் பிரேம் மற்றும் ராடான் மீடியா ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் பங்குதாரராக இருந்து வருகின்றனர். இவர்கள் ரேடியன்ஸ் மீடியா எனும் நிறுவனத்திடம் இருந்து 2014ம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடனாக பெற்றிருக்கின்றனர்.                                              

 

இதற்காக பணயமாக 7 காசோலைகளை (cheque ) கொடுத்திருக்கிறார்கள் ராதிகா மற்றும் சரத்குமார். கொடுத்த கடனும் வராத நிலையில் வங்கியில் போட்ட காசோலைகள் திரும்பி வந்திருக்கின்றன. இதனால் ரேடியன்ஸ் நிறுவனம் இவர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது                      

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் உயர் நீதி மன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. அது மட்டும் இல்லாமல் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என உத்தரவும் இடவே ராதிகா சரத்குமார் தம்பதிக்கு நெருக்கடி அதிகரித்தது.                                       

 

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் வாதத்திற்கு வந்தது. அந்த சமயம் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கின்றனர்.

இது சம்பந்தமாக ராதிகா சரத்குமார் தரப்பில் கூறப்பட்ட தகவல் என்ன என்றால் முழு பணமும் தராமல் இல்லை. ஒரு சில காசோலைகள் மட்டுமே திரும்ப வந்துள்ளன. பாதிப் பணத்தை கொடுத்து விட்டதாக இவர்கள் பக்கம் தகவல்கள் கூறுகின்றனர்.

ராதிகா மற்றும் சரத்குமார் இருவருக்குமான பிடிவாரண்ட் என்பது ஜாமினில் வெளி வரக் கூடிய வகையில் கொடுத்திருப்பதால் இவர்கள் சிறை செல்ல அவசியம் இருக்காது என நம்பப்படுகிறது.

சின்னத்திரையில் வக்கீல் வாணியாக நியாயங்களை தட்டி கேட்க போராடிய ராதிகா இப்போது நிஜ வாழ்வில் நீதிமன்றத்தின் பிடியில் இருப்பது நிஜத்திற்கும் நிழலிற்குமான வித்தியாசங்களை நமக்கு எடுத்துரைக்கிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.