logo
ADVERTISEMENT
home / Health
மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி : அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்!

மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி : அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்!

மழைக்காலம் ஆரம்பம் ஆனாலே சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்கள் (diseases) வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். மழைக்காலத்தில் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலை நிலவுவதால் நோய்க்கிருமிகள் அதிகமாக பரவ தொடங்கும். மேலும் ஆங்காங்கே தேங்கி கிடைக்கும் மழை நீரில் கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலம் பாதிப்புகள் மேலும் அதிகமாகும். ஒவ்வொரு வருடமும் மழைக்கால பாதிப்பில் இருந்து தப்புவதே பெரிய சவாலாக இருந்து வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால், இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்களில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்து இங்கே காணலாம். 

வைரஸ் காய்ச்சல் :

ஃபுளு எனப்படும் வைரஸ் காய்ச்சல்தான் மழைக் காலத்தில் ஏற்படும் முக்கியமான காய்ச்சல். இந்த காய்ச்சல் வந்தால் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கைகால்வலி கடுமையாக இருக்கும். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படும். 

தடுக்கும் முறைகள் : இந்த வைரஸ் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால் ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்கும். பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருபவர்களையே இந்த நோய் தாக்கும்.

மேலும் படிக்க – குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!

ADVERTISEMENT

pixabay

காலரா, வயிற்றுப்போக்கு :

மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் நோய்களில் (diseases) வயிற்றுப்போக்கும் ஒன்று. காலரா ஏற்பட்டாலும் அதிகமான  வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடலில் உள்ள நீர் சத்துக்கள் அதிகளவு வெளியேறும். வயிற்றுப்போக்கு பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். 

இதனால் பல்வேறு கிருமிகள் வேகமாக பரவும். சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்கள், ஈ மொய்த்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் சோர்வடைந்து நடக்க முடியாத நிலை ஏற்படும். இரண்டு முறைக்கு மேல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது. 

ADVERTISEMENT

இதையும் படியுங்கள்: டெங்கு நோய்க்கான காரணங்கள்

ஆஸ்துமா :

ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு  மழை மற்றும் குளிர் காலங்களில் அதிக மூச்சுத் திணறல், இருமல், சளி ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சுவாசக் குழாய் சுருங்கி இருக்கும். 

தடுக்கும் முறைகள்: குளிர்ந்த நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத நிலையில் செல்ல நேரிட்டால் காதுகளில் பஞ்சு வைத்து அடைத்து கொள்ள வேண்டும். குளிர்பானம், ஐஸ்கிரீம், பழைய உணவு வகைகளை தவிர்க்கவும். குடிநீர் மற்றும் உணவு வகைகளை மிதமான சூட்டில் உட்கொள்ள வேண்டும்.

எலிக் காய்ச்சல் :

மழை காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கி கிடைக்கும். எலி, பெருச்சாளி போன்றவை அந்த தண்ணீரில் சென்று வரும். அப்போது அவற்றின் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா’ எனும் கிருமிகள் பரவும். இதன் மூலம் எலிக் காய்ச்சல் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். 

ADVERTISEMENT

மேலும் படிக்க – முகத்தின் சுருக்கத்தை விரட்டும் முல்தானி மெட்டி!.. எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

தடுக்கும் முறைகள் : வெளியே செல்லும் போது கணுக்கால் மூடும்படி கால்களில் செருப்பு அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்ததும் சுடுநீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும். இதைவிட முக்கியம் குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் மழைக்காலங்களில் குளிப்பதைத் தவிர்ப்பது. 

pixabay

ADVERTISEMENT

மழைக்காலங்களில் ‘அடினோ வைரஸ்’ கிருமிகளின் தாக்குதலால் கண்களில் தொற்று நோய் (diseases) ஏற்படும். கண் சிவந்து கண்ணீர்வடிதல், எரிச்சல், வலி, வீக்கம் இதன் அறிகுறிகள். இதுவே மெட்ராஸ் ஐ என்றழைக்கப்படுகிறது. இதனை குணப்படுத்த சுத்தமான துணியினால் தண்ணிரை தொட்டு அடிக்கடி கண்களை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்தவர்களுக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது என்பதால் கவனம் தேவை.

தடுக்கும் முறைகள் : கண்நோய் வந்தவர் கண்ணைக் கசக்கக் கூடாது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். நோயுள்ளவர் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, சோப்பு, தலையணை, பற்பசை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் அறிவுறுத்தலின் படி சொட்டு மருந்து பயன்படுத்தலாம்.

நுரையீரல் தொந்தரவுகள் :

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும்போது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதன் அறிகுறிகளாக காலையில் படுக்கையில் இருந்து  எழும்போது பயங்கரமாக தும்மல் வரும். கன்னங்களில் வலி இருக்கும். 

தடுக்கும் முறைகள் : சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தினமும் உப்பு கலந்த வெந்நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும். குளிர்ந்த காற்று முகத்தில் படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். 

ADVERTISEMENT

டைபாய்டு காய்ச்சல் :

சால்மோனெல்லா டைபை எனும் பாக்டீரியாவால் டைபாய்டு காய்ச்சல் வருகிறது. இந்த கிருமிகளும் அசுத்தமான குடிநீர், உணவு மூலம்தான் பரவுகின்றன. இந்த நோய் முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை தொல்லை தரும். இதை காய்ச்சலுக்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் குடலில் ரத்தக்கசிவு, குடலில் துளை விழுதல், பித்தப்பை அழற்சி போன்ற கடுமையான விளைவுகள் உண்டாகும். 

தடுக்கும் முறைகள் : டைபாய்டு காய்ச்சல் வரமால் தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். ஒருமுறை இந்த ஊசியை போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு டைபாய்டு காய்ச்சல் வராது உணவு சுத்தம், குடிநீர் சுத்தம் இந்தக் காய்ச்சலை தடுக்க உதவும்.

pixabay

ADVERTISEMENT

சிக்குன் குனியா :

சிக்குன் குனியா காய்ச்சல் காற்று மூலம் பரவுகிறது. காய்ச்சல், ஜலதோஷத்துடன் தொடங்கும் இந்த காய்ச்சல் குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகளை அதிகம் பாதிக்கிறது. காய்ச்சல், மூட்டுகளில் வலி, நீர்க்கட்டு, சிவந்த தடிப்புகள் தோன்றுதல் போன்றவை இதன் அறிகுறி. நோய் தீர்ந்தாலும் மாத கணக்கில் வலி பாடாய்படுத்தி கொண்டிருக்கும்.

மேலும் படிக்க – மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

தடுக்கும் முறைகள் : வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது. குடிநீர் சேகரித்து வைக்கும் தொட்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும். கொசு கடிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சேற்றுப்புண் :

மழைக்காலத்தில் பெரும்பாலானவர்கள் இதனால் அவதிப்படுவார்கள். சிலவகை பூஞ்சை கிருமிகள் விரல் இடுக்குகளை தாக்குவதால் இந்த பாதிப்பு ஏற்படும். முதலில் சிறு சிறு கொப்புளங்கள் தோன்றும். பின்பு வலி, அரிப்பு உருவாகும். 

ADVERTISEMENT

pixabay

தடுக்கும் முறைகள் : கால்களை நன்றாக கழுவி துடைத்து ஈரப்பதம் இல்லாமல் செய்து அதற்குரிய கிரீமை பூசவேண்டும். வெளியே செல்லும் போது கட்டாயம் செருப்பு அணிந்து செல்ல வேண்டும். கால்களில் மண் சேராமல் அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

17 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT