உண்மையை மறைக்க பிரச்சனையை சென்டிமெண்டாக திசை திருப்பிய சேரன் : மீரா அதிரடி பேட்டி!

உண்மையை மறைக்க பிரச்சனையை சென்டிமெண்டாக திசை திருப்பிய சேரன் : மீரா அதிரடி பேட்டி!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் (bigg boss) சீசன் 3 விறுவிறுப்பாக காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் கொடுக்கப்பட்ட கிராம வாழ்க்கை டாஸ்கின் போது சேரன், மீரா இடையே பிரச்னை ஏற்பட்டது. டாஸ்க் நடைபெற்ற போது சேரன், மீராவை இடுப்பில் கை வைத்து இழுத்து விட்டார். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இது குறித்த குறும்படம் வெளியாகி மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியான போதும் அசராத மீரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 
 
 
View this post on Instagram
 
 

Thank you To All ❤ Love you Support ❤ #meera #meeramithun

A post shared by Meera Mitun (@meeramitun) on

 

பிக் பாஸ் ஜூலிக்கும் வைஷ்ணவிக்கும் டஃப் ஃபைட் கொடுத்த மீரா மிதுன்.. ஒருவழியாக வெளியேறினார்

இந்நிலையில் பிக் பாஸ் (bigg boss) நிகழ்ச்சி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு மீரா மீதுன் பேட்டி அளித்துள்ளார். சேரன், மீராவை இழுத்து விட்ட பின்னர் மீரா சிரித்து கொண்டிருந்தார். குறும்படத்தில் வெளியான இந்த காட்சி தான் மீரா மீது மக்களின் வெறுப்புகள் வர முக்கிய காரணமாக இருந்தது. இதுகுறித்து பேசிய மீரா நாம் எப்போதும் முகத்தில் உணர்ச்சிகளை காட்ட மாட்டேன். அனைத்து விஷயங்களுக்கும் சிரித்து கொண்டு தான் இருப்பேன். டாஸ்கில் இருந்ததால் அதை சிறப்பாக செய்ய வேண்டும் இடையில் வெளியேற கூடாது என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. 

இதனிடையே  கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கிறேன், சாப்பாடு கொடுக்க கூடாது என மதுமிதா கூறி மதுமிதா நிறைய தொந்தரவு செய்து கொண்டிருந்தார். ஆனால் டாஸ்க் முடிந்து வந்தவுடனே கேப்டனான ரேஷ்மாவிடம் கூறிவிட்டேன். சேரன் செய்த விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அப்போது வரை வைத்திருந்த கோவத்தை கொட்டி விட்டேன் என மீரா விளக்கம் அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் மிகவும் சுறுசுறுப்பாக நான் அனைத்து வேலைகளையும் செய்வேன்.

twitter

ஆனால் சேரன் சார் அடிக்கடி நீ வேலை செய்ய சொன்னால் செய்ய மாட்டேன் என்கிராய், உனக்கு தாழ்வு மனப்பாண்மை உள்ளது என்று என்னை பற்றிய தவறான பின்பத்தை ஏற்படுத்தினார். தொடந்து இரண்டு வாரங்கள் நான் பொறுமையாக சென்றேன். அதன் பின்னர் சேரன் சார் என்னை எது சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள், தப்பு செய்கிறாள் என்றெல்லாம் கூறினார். மேலும் அந்த வீட்டின் ரவுடி, அடாவடி, சண்டை இழுக்கும் பெண் என்று விமர்சித்தார். அதனால் தான் எனக்கு மிகவும் கோவம் வந்தது.  

சேரன் சார் என்னை கோவமாக இழுத்து தள்ளியது தான் உண்மை. அந்த சமயத்தில் அவர் மீதான தவறை மறைக்க பிரச்சனையை வேறு விதமாக எடுத்து சென்றார். சென்டிமெண்டான விஷயத்தை எடுத்து அவர் பிரச்சனையை மாற்றி விட்டார். மேலும் அவர் ஆக்ரோஷமாக இழுத்து போட்டு விட்டு அது குறித்து பேசாமல் சென்டிமெண்டான விஷயத்தை எடுத்து அவரது கவனத்தையும் ஈர்த்து விட்டார் அவர் அந்த பிரச்சனையின் போது அழும் போது கூட அவரது கண்களில் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து கவின் கூட பேசியதை குறிப்பிட்டார்.

யார் இந்த மீரா மிதுன் : மிஸ் சவுத் இந்தியா பட்டம், பண மோசடி வழக்கு.. நடந்தது என்ன?

twitter

முன்னதாக எண்ணி வச்சுக்கோ இந்த வீட்டில் எனக்கு முன்னாடி உன்னை வெளியில் அனுப்பாமல் விடமாட்டேன் என டயலாக் கூறினார். அதனால் தான் நான் வெளியே வரும் போது சபதத்தை நிறைவேற்றி விட்டீர்கள் என கேட்டு விட்டு வந்தேன் என விளக்கம் அளித்துள்ளார். அபி, லாஸ்லியா டாஸ்கில் இல்லாமல் திருடியதால் தான் ஜெயிலுக்கு சென்றனர். அப்படி பார்த்தல்  சாக்ஷியம் ஜெயிலுக்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் சாக்ஷி என்னுடைய கம்மல், செருப்பு உள்ளிட்டவற்றை எடுத்து வைத்தார். 

நான் அதனை விளையாட்டாக எடுத்து கொண்டேன். பின்னர் என்னுடைய மேக்கப் கிட்டை எடுத்து மறைத்து வைத்தார். டாஸ்க் முடிந்த பின்னரும் அதனை அவர் திருப்பி தரவில்லை. அதனால் எனக்கு மிகவும் மன உளைச்சல் ஆனது என கூறினார். இதனை தொடர்ந்து மீராவின் நண்பர் என மீரா குறித்து அவதூறு பேசியவர குறித்து கேள்வி அழுப்பப்பட்டது. அவன் பணம் பறிக்க நினைக்கும் கிரிமினல் என்று மீரா விளக்கம் கொடுத்துள்ளார். நான் இனிமேல் மீரா குறித்து பேசமாட்டேன் என அவர் போலீஸ் ஸ்டேஷனில் கடிதம் எழுதி கொடுத்துள்ளார் என அவர் தகவல் அளித்துள்ளார். 

என்னுடன் செல்பி எடுக்கும் ஆண்கள் எல்லாம் எனது நண்பர்கள் அல்ல, நான் எங்கு சென்றாலும் என்னுடம் சேர்ந்து நூறு பேர் போட்டோ எடுத்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் என் நண்பர்கள் என கூறுவது தவறு என தெரிவித்தார். மீராவின் அழகிப் பட்டம் பறிக்கப்பட்டதாக வெளியான செய்தி பொய்யானது என்றும் இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.என் மீதான பொறாமை காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக என்றும், ஜோ என்பவர் மீது முதலில் நான் தான் கொலை முயற்சி புகார் கொடுத்தேன் என்றும் மீரா விளக்கம் அளித்துள்ளார். 

கிராமத்து மண் மனம் வீசும் பிக் பாஸ் இல்லம் : தர்ஷனுக்கு அம்மாவான மீரா!

மேலும் ஷனம் ஷெட்டி குறித்து எனக்கு எதுவும் தெரியாது அழகிப் போட்டியின் போது அவரை பார்த்தேன். பின்னர், இதுவரை அவரை பார்த்ததில்லை என கூறினார். தர்ஷனின் காதலி ஷனம் ஷெட்டி எனவும், ஷனம் ஷெட்டிக்கும், மீராவிற்கும் ஏற்கனவே பிரச்னை என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மீராவின் முன்னாள் கணவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நீங்களும், உங்களது முந்தைய கணவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது என கூறப்பட்டது. 

twitter

அந்த திருமணமானது சோசியல் திருமணம். புகைப்படங்கள் குறித்து எனக்கு தெரியாது. அவர் அவருடைய பப்ளிசிட்டிக்கு இதனை செய்யலாம். என் மீது தவறு இருந்திருந்தால் நான் ஜெயிலுக்கு சென்றிருப்பேன். ஆனால் இரண்டு முறை ஜெயிலுக்கு சென்று விட்டு வந்தது அவர் தான் என கூறியுள்ளார். மேலும் அந்த திருமணம் பதிவு கூட செய்யவில்லை. இந்திய சட்டப்படி எனக்கு இன்னும் முதல் திருமணம் நடக்கவில்லை. தற்போது நான் சிங்கள் என்று கூறியுள்ளார். வோட்டிங்ல நான்காவது இடத்தில் இருந்து ஒரே நாளில் ஓட்டுகள் குறைந்தது குறித்து கமல் சார் கூறிய விஷயத்தை நார்மலாக எடுத்துக்கொண்டதாக கூறினார்.

இதனையடுத்து டான்ஸர் ஒருவருடன் இணைத்து நிறைய மீம்ஸ்கள் வெளியானது குறித்து பேசிய மீரா, மீம்ஸ்கள் சிரிக்க வைக்கும் விதமாக இருந்ததாகவும், மீம்ஸ் கிரேட்டர்களுக்கு நன்றி என்றும் கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி தான் வின்னர் பண்ணுவார் என்றும், தர்ஷன் சிறந்த போட்டியாளர், ஆனால் அனைவரையும் நம்புகிறார் என்று கூறினார். மேலும் இந்த வாரம் மது அல்லது சாக்ஷி வெளியேற வாய்ப்புள்ளது. 2016 மிஸ் சவுத் இந்தியா பட்டம் நான் வென்றேன், எனக்கு பின்னர் ஜெயிக்கும் அனைவரும் தமிழ் பெண்களாக இருக்க வேண்டும் என நினைத்து அபிக்கு அனைத்து விஷயங்களும் செய்தேன். 

twitter

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னிடம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என தெரியவில்லை என தெரிவித்தார். பேருந்தில் நான் பெண்களை இடிக்க செல்வேன் என்று சரவணன் கூறியது அவரது உண்மை முகம். பிக் பாஸ் இல்லத்தில் மது மீதா நாடகம் ஆடுகிறார். சாண்டியுடன் பிரச்சனையில் மதுமிதா முதலில் அழும் போது நானும் வருத்தப்பட்டேன். பின்னர் அவர் தொடர்ந்து சிம்பதி உருவாக்க  முயற்சி செய்தார் என மீரா குற்றம் சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று ஓபன் நாமினேஷன் நடந்ததால் சில பிரச்சனைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள புரோமோவில், ஒவ்வொருவருக்கும் ஒரு பட கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல் ஒலிக்கும் போது அந்த பாடலின் நாயகன் கெட்டப் போட்டுக் கொண்டிருப்பவர் நடனம் ஆட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் கவினும் தல கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் லாஸ்லியாவிடம் சென்று இப்போது இந்த கெட்டப்பில் நான் கேலி செய்ய கூடாது என கூறும் நிகழ்வுகள் வெளியாகியுள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.