logo
ADVERTISEMENT
home / Astrology
இவ்வளவு நாள் நாம் வணங்கி வந்த தெய்வங்கள் ஏலியன்ஸ்சா? புராணங்களை ஆய்வு செய்யும் நாசா!

இவ்வளவு நாள் நாம் வணங்கி வந்த தெய்வங்கள் ஏலியன்ஸ்சா? புராணங்களை ஆய்வு செய்யும் நாசா!

வெளிநாட்டு திரைப்படங்களில் காட்டப்பட்ட மனித சக்திக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் (aliens) தற்போது இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என வெளிநாட்டு மீடியாக்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் பெருமைப்படுவதை விடவும் அதிர்ச்சியான விஷயம் என்ன என்றால் அவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களைத் தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். இதனை நிரூபிப்பதற்கான ஆதாரமாக அவர்கள் கையில் எடுத்திருப்பது நமது இந்திய புராணங்களைத்தான்.

இந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் மற்றும் இல்லாமல் பல்வேறு சமயத்தை சேர்ந்த நாட்டை சேர்ந்த கடவுள்களையும் (god) இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் என்பது கூடுதல் அதிர்ச்சி.

ADVERTISEMENT

pixabay

எதன் அடிப்படையில் அவர்கள் இதை வரையறுக்கிறார்கள் என்றால் இந்து கடவுள்களுக்கு வித்யாசமான உருவ அமைப்புகள் இருக்கின்றன. 8 கைகள் 4 முகங்கள் உடலின் நிறம் நீலம் என பல்வேறு அறிகுறிக்குள் ஒவ்வொரு கடவுளுக்கும் இருக்கிறது. சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் வில்லை அசைக்க வானில் மின்னல்கள் தெறித்தன.

இன்றைய விமானம் என்கிற சொல்லுக்கு நாம் பழக்கப்படும் முன்பாகவே அவர்களிடம் புஷ்பக விமானம் இருந்தது. அவர்கள் மழையை வரவைத்தார்கள், மலையை தூக்கினார்கள், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடப்பதை ஞான திருஷ்ட்டி மூலம் அறிந்தார்கள். இவையெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை.

புராணகதைப்படி ராவணன் புஷ்பக விமானம் மூலம் சீதையை கவர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. ராவணனின் வாழ்ந்ததாக கூறப்படும் இலங்கை மாகாணத்தில் சிகிரியா எனும் இடத்தை அந்த நாடு சுற்றுலா தளமாகவே அறிவித்து விட்டு அதனை காபந்து பண்ணுகிறது. இதில் உள்ள ஓவியங்கள் ஒரு காலத்தில் பெண்கள் மேகங்களிடையே பறந்ததை கூறும் வகையில் இருக்கின்றன. இந்த இடமே ராவணன் விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் வந்து போகும் துறைமுகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

youtube

தமிழ்நாட்டில் உள்ள பல ஆயிரம் கோயில்களில் கூறப்படும் கதைகளின் அடித்தளம் மிக முக்கியமான ஒரு உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. பெரும்பான்மையான கோயில்கள் இறைவன் அரசன் கனவில் அல்லது முக்கியமான பக்தர்களின் கனவில் வந்துதான் அக்கோயிலை எழுப்பியதாக கூறப்படுகிறது. எந்தவித தொழிநுட்பங்களும் இல்லாத அந்தக் காலத்தில் அத்தனை உறுதியான தரமான உயர்ந்த கோயில்களை வெறும் மனிதர்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கியிருக்க முடியாது எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் பழங்கால அரசர்களுடன் இறைவன் நேரடி தொடர்பில் இருந்ததாகவே அறியப்படுகிறது.

இந்த புராணக்கதைகள் மூலம் இந்து கடவுள்கள் மட்டும் அல்லாமல் இயேசு, புத்தர், டாவின்சி மற்றும் போப் என சகலரையும் ஏலியன்கள் என்கிற ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறது நாசா. இயேசுவை சித்தரிக்கும் பல ஓவியங்களின் பின்னணியில் பறக்கும் தட்டு இருக்கிறது. வாடிகன் நகரத்தில் ஏலியன்கள் பிணங்கள் இருக்கின்றன. புத்தர் ஆற்றின் மேல் நடந்தது ஏலியன்ஸுடன் இருந்த தொடர்பு மூலமாகத்தான் டாவின்சியின் ஓவியங்கள் இன்று நாம் பயன்படுத்தும் ஆயுதங்களை பறைசாற்றுகின்றன.

ADVERTISEMENT

pixabay

2001ம் வருடம் அரபிக்கடலோர இந்தியாவின் குஜராத் எல்லை பகுதியில் கல்ப் ஆப் காம்பாட் (Gulf of Khambhat) எனும் இடத்தை அகழ்வாராய்ந்த சமயத்தில் கடலுக்குள்ளேயே ஒரு பெரிய நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த நகரத்தின் வடிவமைப்பை வைத்து பார்த்த போது அது மிகப்பெரிய துறைமுகமாக செயல்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

சிதைந்து கிடக்கும் அந்த நகரம் டெக்னாலஜியில் மனிதர்களை விட மேம்பட்டவர்கள் மூலம் கட்டப்பட்டது என அறியப்படுகிறது.அந்த நகரத்தில் வான்வழி தாக்குதல் பல இடங்களில் நடத்தப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இந்த டெக்னலாஜியை மனிதன் கண்டுபிடிக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகாலம் ஆகலாம் என அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

உலகப்போரின் போதுதான் முதல் வான்வழி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகின்றன. ஆனால் அதற்கு பல கோடி வருடங்கள் முன்பாகவே இப்படி ஒரு தாக்குதல் நடந்திருக்கிறது என்றால் அது ஏலியன்கள் மூலம்தான் என்கிறது ஆராய்ச்சி.

youtube

இப்படி மற்றவர்களை மற்ற எல்லாம் ஏலியன்ஸுடன் தொடர்பு வைத்தவர்கள் என்கிற நாசா (nasa) இந்தக் கடவுள்களை ஏலியன்ஸ்தான் என்கிறது. இதனால் இந்தியர்கள் கடும் அதிருப்தியுடன் இருக்கின்றனர். வேதங்களை நாசா ரகசிய ஆராய்ச்சி செய்வது பற்றி இணையத்தளங்களில் எதிர்ப்புக்குரல் எழுந்து வருகிறது.

ADVERTISEMENT

என்வரைக்கும் நான் யோசிப்பது என்னவென்றால் ஒரு ஆராய்ச்சி தொடங்கப்படும்போது அதற்கான காரணங்கள் வேறாக இருக்கலாம். இந்து தெய்வங்கள் ஏலியன்ஸ் என்கிற கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த ஆராய்ச்சி தனது பயணத்தின் முடிவில் நமக்கு முற்றிலும் வேறான ஒரு உண்மையை எடுத்துரைக்கலாம். காத்திருப்போம் அதுவரை.

reference 1

reference 2

reference 3

ADVERTISEMENT

reference 4 

 

Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

02 Jul 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT