logo
ADVERTISEMENT
home / அழகு
அக்ரிலிக் நகங்களை எப்படி அகற்றுவது? வீட்டு குறிப்புகள்! (How To Remove Acrylic Nails)

அக்ரிலிக் நகங்களை எப்படி அகற்றுவது? வீட்டு குறிப்புகள்! (How To Remove Acrylic Nails)

அக்ரிலிக் நகங்கள்(acrylic nails) பொதுவாக விரல்களில் இயற்கையாக இருக்கும் நகங்களுக்கு மேலும் அழகூட்ட செய்யப்படுகின்றது. இவை இன்று ஒப்பனை உலகில் பிரபலமாகி வருகின்றது. அது மட்டுமல்லாமல், இளம் பெண்கள் இத்தகைய செயற்கை அக்ரிலிக் நகங்களை அதிகம் விரும்புகின்றனர். இதனால் இந்த நகங்களுக்கு அதிக வரவேற்ப்பு இன்று ஒப்பனை சந்தையில் பெருகி உள்ளது. 

நகங்களுக்கான அக்ரிலிக் திரவம் மற்றும் பொடி வடிவங்களில் கிடைகின்றது. இதனை நகத்தின் ஆளவிற்கு ஏற்ப எளிதாக பயன்படுத்தலாம். இதை நகத்தில் போட்டதும், திடமாக மாறிவிடும். மேலும் பல நாட்களுக்கு நிரந்தரமாக அப்படியே இருக்கும். எனினும், ஒரு தருணத்தில், உங்களுக்கு இந்த நகங்களை அகற்றி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். அப்படி தோன்றும் போது உங்களுக்கு அந்த நகத்தை அகற்றுவதில் சில சவால்கள் எல்லாம். அதனால், நீங்கள் ஒரு நிபுணரைத் தேடிச் செல்ல வேண்டிய சூழல் வரலாம். 

உங்கள் வேலையை சுலபமாக்க, நீங்கள் வீட்டிலேயே எளிதாக இந்த அக்ரிலிக் நகங்களாய் அகற்றி விடலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ள, மேலும் படியுங்கள்!

ADVERTISEMENT

அக்ரிலிக் நகங்கள் என்றால் என்ன? (What Is Acrylic Nails)

அக்ரிலிக் நகம் என்றால், அது அக்ரிலிக் திரவம் மற்றும் பொடி ஆகிய இரண்டையும் ஒரு மாவு போல கலந்து உங்கள் நகத்தின் அளவுக்கு ஏற்றவர் ஒரு தூரிகை பயன்படுத்தி நகத்தில் போடுவது. பின் அதை நன்கு காற்றில் காய வைக்க வேண்டும். இதை நீங்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதை பொதுவாக தங்களின் நகத்தின் அளவை மாற்ற அல்லது நீளமான நகம் வேண்டும் என்பவர்களே அதிகம் விரும்புபார்கள். 

இந்த அக்ரிலிக் நகங்கள்(acrylic nails) இயற்கையான தோற்றத்தை தரும். இது நீங்கள் விரும்பிய தோற்றத்தையும், அழகையும் தந்தாலும், ஒரு நல்ல தேர்ச்சி பெற்ற நிபுணரின் உதவியால் மட்டுமே போட்டுக்கொள்ள வேண்டும்.

Pixabay

ADVERTISEMENT

அக்ரிலிக் நகங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் (Things To Know About Acrylic Nails)

இந்த அக்ரிலிக் நகங்கள் உங்களுக்கு நல்ல அழகான தோற்றத்தை தந்தாலும், இதை நீங்கள் செய்து கொள்வதற்கு முன், சில விடயங்களை தெரிந்து கொள்வது நல்லது. இதனால், நீங்கள் ஒரு சரியான தேர்வை செய்யலாம். உங்களுக்காக, இங்கே சில தகவல்கள்

1. அக்ரிலிக் நகங்கள் உங்களது இயற்கையான நகங்களை பாதிக்குமா? (Do Acrylic Nails Affect Your Natural Nail)

பெரும்பாலான சமயங்களில் அப்படி பாதிக்காது. நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக பராமரிகின்றீர்களோ, அதற்கு ஏற்றவாறு உங்களது இயற்கையான நகங்களை இது பாதிக்காமல் இருக்கும். 

2. அக்ரிலிக் நகங்கள் எப்படி போடப்படுகின்றது? (How Are Acrylic Nails Wrapped)

உங்களுக்கு பிடித்த ஒரு வடிவம், நிறம் மற்றும் நீளத்தை நீங்கள் தேர்வு செய்த பின், நிபுணர் உங்கள் நகங்களை சுத்தம் செய்து, நன்கு ஊற வைத்து பின் அக்ரிலிக்கை இயற்கையான நகத்தில் நிரப்புவர். உங்களுக்கு கூடுதல் நீளம் வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு செய்வார். அதன் பின் அக்ரிலிக் நகங்களை ஓட்டும் முன் நகத்தின் அனைத்து இடத்திலும் பிசினை தடவுவார். அதன் பின், ஓட்டியதும், அக்ரிலிக் நகங்களை சரியான வடிவம் மற்றும் நீளத்திற்கு சரி செய்வார். இதனுடன் உங்களுக்கு தேவை பட்டால் சில அழகூட்டும் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். 

3. அக்ரிலிக் நகங்களுக்கு அதிக பராமரிப்புத் தேவைப்படுமா? (Do Acrylic Nails Need More Maintenance)

இந்த நகங்கள் அதிக நாட்கள் நீடித்து இருக்க வேண்டும் என்றால், நீங்கள் நிச்சயம் பராமரிக்கத் தான் வேண்டும். அதனால், இதற்கென்று நீங்கள் அதிகம் மெனகெட வேண்டியதிருக்கும். 

ADVERTISEMENT

4. அக்ரிலிக் நகங்களுக்கு எவ்வளவு செலவாகும்? (How Much Does Acrylic Nails Cost)

நீங்கள் மிகவும் தரமான, அழகான மற்றும் அதிக வேலைபாடுகள் உள்ள அக்ரிலிக் நகங்கள் வேண்டும் என்று எதிர் பார்த்தால், நிச்சயம் அதற்கு ஆகும் செலவுகள் அதிகமே, ஆனால், குறைந்த செலவிலும் நீங்கள் இந்த நகங்களை வைத்துக் கொள்ளலாம். எனினும், அதன் தரத்தின் மீதும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இதன் விலை நீங்கள் அணுகும் நிபுணரை பொருத்தும் உள்ளது.

5. அக்ரிலிக் நகங்கள் எத்தனை நாட்கள் நீடித்து இருக்கும்? (How Long Do Acrylic Nails Last)

 இது பெரும்பாலும் ஒருவருக்கொருவர் வேறுபாடும். நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்தி பராமரிகின்றீர்கள் என்பதை பொறுத்து இதன் நாட்கள் தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால் பொதுவாக, நிபுணர்களின் கருத்துப் படி, இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை இதை புதுபிக்க இந்த நகங்களை வைத்துக் கொள்பவர்கள் வருவதாக கூறப்படுகின்றது. ஆனால், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரைக் கூட இதை உங்களால் நல்ல நிலையில் பராமரிக்க முடியும் என்றால், அது உங்களது திறமை தான்!

6. அக்ரிலிக் நகங்கள் பாதுகாப்பானதா? (Acrylic Nails Are Safe)

நிபுணர்களின் கூற்றுப் படி, இத்தகைய செயற்கை நகங்கள் (acrylic nails) எந்த விதத்திலும் உங்களது இயற்கையான நகங்களை பாதிப்பதில்லை. அவை ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர், எனினும், நீங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றால், அது நிச்சயம் சில பாதிப்புகளை உண்டாக்கக்கூடும்.  

ADVERTISEMENT

Pixabay

7. அக்ரிலிக் நகங்கள் ஏன் முதல் நாள் வலியை உண்டாக்குகின்றது? (Why Do Acrylic Nails Cause Pain On The First Day)

இதற்கு சில காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதாவது, இதனை செய்த உடன் சிறிது வலி ஏற்படும், அதற்கு காரணம் அக்ரிலிக்கை நகத்தில் போடும் போது அது உங்கள் நகங்களை சற்று தாக்கும் படி இருந்திருக்கும். அல்லது அதிக அளவு போடபட்டிருக்கலாம். ஆனால், இது விரைவில் சரியாகி விடும். அதனால், நீங்கள் பயப்பட ஒன்றும் இல்லை.

8. அக்ரிலிக் நகங்கள் சைவமா? (Acrylic Nails Are Vegan)

நீங்கள் சைவம் என்றால், இது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. இதற்கு அவர்கள் கூறும் காரணம், அக்ரிலிக் நகங்கள் போட பயன் படுத்தப்படும் தூரிகை மிருகங்களின் ரோமங்களால்  செய்யப்பட்டவை. இவை அசல் ரோமங்கள். இதற்கு முக்கிய காரணம் அவை அடர்த்தியாக இருப்பது தான். இதனால் அவை அக்ரிலிக் திரவத்தை இறுக்கமாக பிடித்துக் கொள்ளும். இதனால் எளிதாக அக்ரிலிக் கலவையை நகங்களில் பூசி விடலாம். மேலும் பயன் படுத்தவும் எளிதாக இருக்கும்.

9. எந்த விதமான நக பாலிசுகளை அக்ரிலிக் நகங்களுக்கு பயன் படுத்தலாம்? (Any Type Of Nail Polish Can Benefit Acrylics)

உங்களுக்கு விருப்பமான எந்த விதமான நக பாலிசுகளையும் நீங்கள் பயன் படுத்தலாம். இதற்கு எந்த கட்டுபாடுகளும் இல்லை.

ADVERTISEMENT

10. அக்ரிலிக் நகங்கள் எப்படி போடப்படுகின்றது? (How To Put Acrylic Nails)

இதற்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அக்ரிலிக் கலவைகள் பயன் படுத்தப்படுகின்றது. குறிப்பாக, உங்கள் நகங்களுக்கு ஏற்றவாறு, அல்லது உங்கள் விருபதிற்கு ஏற்றவாறு கலவைகள் தயார் செய்யப்பட்டு போடப்படுகின்றது. 

அக்ரிலிக் நகங்களை வீட்டில் அகற்ற சில எளிமையாக குறிப்புகள் (Easy Ways To Remove Acrylic Nails At Home)

அக்ரிலிக் நகங்களை நீங்கள் எளிதாக அகற்றி விட உங்களுக்காக சில படிப்படியான குறிப்புகள். தொடர்ந்து படியுங்கள்
தேவைப்படும் பொருட்கள்:
• அசிட்டோன்
• மனிக்யூர் செட்
• பெட்ரோலியம் ஜெல்லி
• பருத்தி
• தகடு
• கை கிரீம்

1. உங்கள் நகங்களை முதலில் கிளிப் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் நகங்களை நீளமாகவே வைத்துக் கொள்ள உதவும்
2. பின் நகங்களை மிருதுவாக அக்ரிலிக்கை மெல்லியதாக ஆக்க தேய்த்து விடவும்
3. நகத்தை சுற்றி இருக்கும் சருமத்தை பாதுகாக்க, பெட்ரோலியம் ஜெல்லியை தடவவும்.
4. இது அக்ரிலிக் நகத்தை அகற்ற நீங்கள் பயன் படுத்தும் திரவத்தை காய விடாமல் பாதுகாக்கும்
5. அசிடோனை தடவ வேண்டும். இதனை நீங்கள் அப்படியே நகங்களின் மீது தடவி 3௦ நிமிடங்கள் வரை விட்டு விடலாம் அல்லது ஒரு பருத்தி பஞ்சை எடுத்து அதில் நனைத்து உங்கள் நகங்கள் மீது தடவலாம்
6. பின் நகங்களை நன்றாக தகடு (foil) கொண்டு மூடி விடவும்
7. சிறுது நேரம் அமைதியாக காத்திருக்கவும். இந்த நேரத்தில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்
8. இந்த நேரத்தில் நீங்கள் பூசிய அசிடோன் தனது வேலையை செய்யும்
9. இப்போது அகதி அகற்றி விட்டு பாருங்கள். அக்ரிலிக் அகன்று இருந்தால் நீங்கள் இப்போது நகத்தை சுத்தம் செய்ய தொடங்கலாம்
10. இப்போது உங்கள் கைகள் எப்போதும் போல தோற்றம் தரும்.

ADVERTISEMENT

Pixabay

அக்ரிலிக் நகங்களை அகற்ற பல முறைகள் (Different Methods To Remove Acrylic Nails)

மேலே குறிப்பிடப்பட்ட முறை மட்டுமன்றி மேலும் பல முறைகளில் நீங்கள் அக்ரிலிக் நகங்களை அகற்றலாம். உங்களுக்காக, அவை பின் வருமாறு

ADVERTISEMENT

1. அசிடோன் இல்லாமல் சுடு தண்ணீரில் அக்ரிலிக் நகங்களை அகற்றுவது எப்படி? (How To Remove Acrylic Nails In Hot Water Without Acetone)

• இது ஒரு எளிமையான முறை. இது கடினமான அக்ரிலிக் நகங்களையும் அகற்ற உதவும்
• நகங்களை தேவைப்படும் அளவிற்கும் ட்ரிம் செய்து கொள்ளுங்கள்
• ஒரு கிண்ணத்தில் சுடு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரின் வெப்பம் உங்களுக்கு கையை உள்ளே வைக்க எதுவாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்
• உங்கள் நகங்களை 3௦ நிமிடங்கள் வரை அப்படியே தண்ணீரில் விட்டு ஊற வையுங்கள்
• முக்கியமாக சூடு அதிகமாக இருக்கும் தண்ணீரில் வைப்பது நல்ல பலனைத் தரும்
• தண்ணீரின் சூடு குறைந்தால், உடனே வேறு சூடாக இருக்கும் தண்ணீருக்கு கைகளை மாற்றி வையுங்கள்

2. லாமினேட் செய்யப்பட்ட சிறிய அட்டை கொண்டு எப்படி அகற்றுவது எப்படி? (How To Remove With Laminated Small Card)

• உங்களுக்கு உடனடியாக அக்ரிலிக்கை அகற்ற வேண்டும் என்றால், இது ஒரு நல்ல வழியாக இருக்கும்
• நகங்களின் ஓரங்களில் சிறிது ஒரு ஊசி போன்ற குச்சியால் குத்தி விடவும்
• இதனால் ஒரு சிறய துளை ஏற்படும் அல்லது அக்ரிலிக் படிவம் சற்று நகத்தை விட்டு அகலும்
• இப்பது லாமினேட் செய்யப்பட்ட அட்டையைக் கொண்டு நன்கு அழுத்தம் தந்து தேய்க்கவும்
• இப்படி செய்தால் அக்ரிலிக் படிவம் கொஞ்சம் கொஞ்சமாக அகலும்

3. அசிடோன் மற்றும் அலுமினியம் தகடு கொண்டு அக்ரிலிக் நகங்களை அகற்றுவது எப்படி (How To Remove Acrylic Nails With Acetone And Aluminum Foil)

• அக்ரிலிக் நகங்களை கிளிப் செய்து கொள்ளவும்
• மேல் பூசை மெதுவாக தேய்த்து விடவும்
• இப்போது பெட்ரோலியம் ஜெல்லியை நகத்தை சுற்றி இருக்கும் தோலில் தேய்த்துக் கொளவும்
• சிறு பருத்தி பஞ்சில் அசிடோன் சிறிது எடுத்து நகங்கள் மீது பூசி நன்கு ஊற வைக்கவும்
• சிறிது அலுமினியம் தகவு எடுத்து நகங்களை சுற்றி விடவும்
• 3௦ நிமிடம் வரை காத்திருக்கவும்
• இப்போது அலுமினியம் தகடை அகற்றி விட்டு மெதுவாக அக்ரிலிக் நகங்களை அகற்ற முயற்சிக்கலாம்

4. அசிடோன் மற்றும் சுடு தண்ணீர் பயன் படுத்தி அக்ரிலிக் நகத்தை அகற்றுவது எப்படி (How To Remove Acrylic Nail With Acetone And Hot Water)

• முடிந்த வரை குறுகிய அளவு வைத்து உங்கள் நகங்களை கிளிப் செய்து கொள்ளுங்கள்
• ஒரு கிண்ணத்தில் அசிடோன் எடுத்துக் கொள்ளவும். மற்றுமொரு கிண்ணத்தில் சுடு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
• இப்போது சுடு தண்ணீர் இருக்கும் கிண்ணத்தில் அசிடோன் இருக்கும் கிண்ணத்தை வைக்கவும்
• இப்போது பெட்ரோலியம் ஜெல்லியை கைகளில் நகத்தை சுற்றி தடவிக் கொள்ளவும்
• இப்போது உங்கள் விரல் நகங்களை அசிடோன் இருக்கும் கின்னத்தினுள் வைக்கவும்
• முழு நகங்களும் அதனுள் இருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்
• அப்படியே 3௦ நிமிடங்கள் வரை விட்டு விடவும்
• இப்போது அக்ரிலிக் நகங்கள் அகன்று விடும்

ADVERTISEMENT

5. அசிடோன் இல்லாத நக பாலிஸ் அகற்றி பயன் படுத்தி அக்ரிலிக் நகத்தை எப்படி அகற்றுவது எப்ப?டி (How To Remove Acrylic Nail Polish By Using Acetone-Free Nail Polish)

• முடிந்த வரை குறுகிய அளவு அக்ரிலிக் நகங்களை கிளிப் செய்யவும்
• முனைகளை சற்று கூர்மையான குச்சியை கொண்டு குத்தி விடவும்
• இப்போது அசிடோன் இல்லாத நக பாலிஸ் அகற்றியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்
• உங்கள் நகங்களை 3௦ நிமிடங்கள் வரை அதில் வைத்து ஊற விடவும்
• நகங்கள் தளர்வாக ஆவதை நீங்கள் உணர்ந்தால், மெதுவாக அதனை அகற்றி விடலாம்

6. பல் மிதவை பயன் படுத்தி எப்படி அக்ரிலிக் நகங்களாய் அகற்றுவது எப்படி? (How To Use A Tooth Float And Remove Acrylic Nails)

• ஒரு சிறிய குச்சியை கொண்டு நகங்களை சற்று அகற்றி விடுங்கள்
• அக்ரிலிக் நகங்கள் தளர்ந்து விடுபடும் வரை மெதுவாக குத்தி விடவும்
• அதன் பின் பல் மிதவையை பயன்படுத்தி மெதுவாக அக்ரிலிக் நகங்களை அகற்ற முயற்சிக்கலாம்

7. நக நிரப்பி பயன் படுத்தி அக்ரிலிக் நகங்களை அகற்றுவது எப்படி? (How To Remove Acrylic Nails Using Nail Polish)

• அக்ரிலிக் நகத்தில் இருக்கும் அனைத்து அலங்கார நிறங்கள் மற்றும் வடிவங்களை அகற்றவும்
• அதன் பின் நகங்களை கிளிப் செய்யவும்
• இப்போது நீளமாக நக நிரப்பியை பூசவும்
• ஆனால் சரியான இடத்தில் நிறுத்தி விடவும்
• ஏதாவது அக்ரிலிக் நகங்கள் மீதம் இருந்தால். ஒரு சிறிய கூர்மையான பொருளை எடுத்து சற்று தேய்த்து விடவும்

அக்ரிலிக் நகங்களை அகற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions To Take When Removing Acrylic Nails)

• எந்த சூழலிலும் கடுமையாக நகத்தை அகற்ற முயற்சி செய்யாதீர்கள். இதனால் உங்களது இயற்கையான நகங்கள் பாதிக்கப் படலாம். மேலும் சிறு காயங்களும் ஏற்படலாம்
• அசிடோன் பயன் படுத்த எண்ணினால், உங்களை சுற்றி நெருப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால், சில சமயம் இதனால் உங்களுக்கு எரிச்சலூட்டும் உணர்வு ஏற்படும்
• மேலும் விரல்கள் சிவந்தால் அல்லது அதிகம் எரிச்சல் ஏற்பட்டால், உடனடியாக நிபுணரை அணுகவும்
• நகங்களை அகற்றிய பின் விரல்களில், நகங்களிலும் எண்ணை தடவி விடுங்கள். இதனால் சருமம் பாதிக்காமல் இருக்கும்
• இந்த முறை அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்
• அக்ரிலிக் நகத்தை அகற்றிய பின் ஒரு வாரத்திற்காவது நீங்கள் உங்களது இயற்கையான நகங்கள் வளர காத்திருக்க வேண்டும்

ADVERTISEMENT

Pixabay

கேள்வி பதில்கள் (FAQ’s)

1. அக்ரிலிக் நகங்களை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?

பொதுவாக 3௦ நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். தேவைப்பட்டால், சற்று அதிக நேரம் ஊற வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

2. அசிடோன் இல்லாத நக பாலிஸ் அகற்றிக் கொண்டு அக்ரிலிக் நகங்களை அகற்ற முடியுமா?

செய்யலாம். அதற்க்கு நீங்கள் ஒரு கிண்ணத்தில் இந்த கலவையை ஊற்றி, அக்ரிலிக் நகங்கள் அகலும் வரை நன்கு ஊற வைக்க வேண்டும். இடையில் கைகளை எடுத்து விடக் கூடாது.

3. தண்ணீர் கொண்டு அக்ரிலிக் நகங்களை அகற்ற முடியுமா?

முடியும். ஆனால் அதற்கு நன்கு சூடாக இருக்கும் தண்ணீர் தேவை. சுடு தண்ணீரில் விரல்களை நன்கு மூழ்கும் படி செய்து, நகங்களை நன்கு ஊற வைக்க வேண்டும். அப்படி சித்தாள், அக்ரிலிக் நகங்கள் மெதுவாக பிரிந்து வருவதை பார்க்கலாம்.

4. அக்ரிலிக் நகங்கள் வலியை உண்டாக்குமா?

ஒரு சிலருக்கு இதை வைக்கும் போது ஏதாவது பிழை ஏற்பட்டால், சிறிது வலி ஏற்படக் கூடும். ஆனால், அது சிறிது நேரத்தில் சரியாகி விடும்.

5. வினிகர் பயன் படுத்தி அக்ரிலிக் நகத்தை அகற்ற முடியுமா?

செய்யலாம். அதற்க்கு நீங்கள் சிறிது சுடு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் சிறிது எலுமிச்சை பழச்சாறை சேர்த்து, அதனுடன் சிறிது வினிகரை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். அதன் பின் உங்கள் நகங்களை இந்த கலவையில் விட்டு 3௦ நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின் அக்ரிலிக் நகங்கள் அகன்று வருவதை காணலாம்.இது மற்றுமொரு எளிமையான மற்றும் செலவு இல்லாத அக்ரிலிக் நகங்களை அகற்றும் முறையாகும். இதை அனைவரும் எளிதாக வீட்டில் செய்து விடலாம்.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில்  வெளிவருகிறது!  

ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

19 Jul 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT