logo
ADVERTISEMENT
home / அழகு
குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!

குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!

குளிர்காலம் என்றாலே குளிர்ந்த காற்றும் மிதமான பனிபொழிவும் நிலவும். இந்த காலங்களில் நமது உடல்நல மற்றும் சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலங்களில் வீசும் குளிர்ந்த காற்று ரசிக்கும் வகையில் இருந்தாலும், அது உங்கள் தலைமுடியை பாதிக்கக்கூடும் என்பதால் கூந்தல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலத்தில் தட்பவெட்ப நிலைகளில் வேறுபாடு ஏற்படுவது தலை முடி வறண்டு போவதற்கான காரணமாகும். உங்கள் தலைமுடிக்கான(hair)குளிர்கால பராமரிப்பு டிப்ஸ் இதோ உங்களுக்காக. இதனை பின்பற்றினால் அழகான தலைமுடியை(hair) எளிதாக பெறலாம்.

மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

pixabay

ADVERTISEMENT
  • குளிர்காலங்களில் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால் சிறந்த பலனை அடையலாம். இது தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.
  • வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம்.
  • வாசனைத்  திரவியங்கள் கலக்காத பாதாம் எண்ணெய், அவகோடா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து முடியில் தடவி மஜாஜ் செய்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.
  • குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படுவதால் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும். எனவே டீ – ட்ரீ ஆயில் 5 சொட்டுகள் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து ஷாம்பூ பயன்பாட்டுக்குப் பின் அதைக் கொண்டு தலையை அலச வறட்சியால் ஏற்படும் பொடுகுத் தொல்லை நீங்கும்.  

pixabay

  • குளிர்காலங்கள் தலைமுடி நுனியில் வெடிப்பை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தலைமுடியை சிறிது வெட்டி விடுவதே சிறந்த தீர்வாகும். இது உங்கள் தலைமுடியை(hair) அழகாக காட்டுவதோடு ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.
  •  தினமும் ஷாம்பு உபயோகிப்பவராக இருந்தால் குளிர்காலங்களில் ஷாம்புவை தவிர்ப்பது நல்லது. குளிர்காலங்களில் உங்கள் தலை முடிக்கு ஷாம்பு உபயோகித்தால் அது உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்யும். ஷாம்புக்களை அடிக்கடி உபயோகிக்காமல் குறைவாக உபயோகிப்பதே குளிர்காலங்களில் தலைமுடியை பராமரிக்க சிறந்த வழியாகும்.

முகத்தின் சுருக்கத்தை விரட்டும் முல்தானி மெட்டி!.. எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

  •  தலைமுடியை வாரம் ஒரு முறையேனும் கண்டிஷனிங் செய்ய வேண்டும். இது குளிர்காலங்களில் தலைமுடி(hair) பராமரிப்பு வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஒவ்வொரு முறையும் தலைக்கு குளிக்கும் போது உங்கள் தலை முடியை கண்டிஷன் செய்ய மறந்து விடாதீர்கள். இயற்கை கண்டிஷனரான தேங்காய் பால், முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.
  • குளிர்கால தட்பவெட்ப நிலை உங்கள் தலைமுடியை சுருண்டு போகச்செய்யும். வறண்ட தலைமுடியே இதற்கு காரணம். சுருண்ட தலைமுடியை சரிசெய்வதற்கு நல்ல தலைமுடி பிரஷை உபயோகியுங்கள். இந்த டிப்ஸ்களை கொண்டு குளிர்கால தலைமுடியை சிறந்த முறையில் பராமரியுங்கள்.

ADVERTISEMENT

pixabay

  • தலைக்கு வாரம் ஒரு முறை கற்றாழை தேய்த்து குளிக்கலாம். கற்றாழை தேய்த்து குளிப்பதால் குளிர்ச்சி கிடைக்கும். மேலும் கூந்தல் மிருதுவாக இருப்பதை கண்கூடாக காணலாம். குளிர்கால காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பிரச்சனைகள் இருப்பவர்கள் மட்டும் இதனை தவிர்ப்பது நல்லது.
  •  பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் அதிகமானோர் ஷாம்பு பயன்படுத்தி வருகின்றனர். ஷாம்பில் பாராஃபைன் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அது கூந்தலில் உள்ள மெலனின் அளவைக் குறைத்து கூந்தலை நரைக்கச் செய்யும். எனவே ரசாயனம் இல்லாத ஷாம்பைத் தேர்வுசெய்து பயன்படுத்துவது ஆரோக்கியமானது. மூலிகைகளை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கும் எண்ணெய்யை பயன்படுத்தினால் தலை முடி தொடர்பான அனைத்து பிரச்சினைக்ளையும் சரி செய்யலாம்.

மூலிகை எண்ணெய் தயாரிப்பு

1. தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 100 கிராம்
கீழாநெல்லி இலை – 100 கிராம்
கறிவேப்பிலை – 100 கிராம்
செம்பருத்தி பூ – 100 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
கரிசலாங்கண்ணி இலை – 50 கிராம்
தேங்காய் எண்ணெய் – 2 லிட்டர்

செய்முறை :

ADVERTISEMENT

அனைத்து பொருட்களையும் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து, மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும். மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத்தொடங்கிய உடன், அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். மூன்று நாள்கள் கழித்து எண்ணெய்யை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும்.

 

pixabay

ADVERTISEMENT

2. தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர், 
மருதாணி – 10 கிராம்,
செம்பருத்தி – 10 கிராம்,
கறிவேப்பிலை – 10 கிராம்,
ஆவாரம் பூ – 10 கிராம்,
கரிசலாங்கண்ணி – 10 கிராம்,
வெட்டிவேர் – 5 கிராம்,
சோற்றுக் கற்றாழை – 50 கிராம்.

செய்முறை :

மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிஎண்ணெய் சிறிது சூடேறியதும் அரைத்து வைத்த மூலிகைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு வெட்டிவேர் சேர்த்து எண்ணெய் பொன்னிறமாக மாறும்வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து பிறகு வடிகட்டி 2 நட்களுக்கு பிறகு பயன்படுத்தவும். இந்த எண்ணெயை வாரம் 3 நாள்கள் பயன்படுத்தி வர கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.

ADVERTISEMENT

வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பாதாம் எண்ணெய் மற்றும் பேஷ் பேக்குகள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

ADVERTISEMENT
16 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT