பொடுகு பிரச்சனையால் முகத்தில் தோன்றும் பருக்களை சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்!

பொடுகு பிரச்சனையால் முகத்தில் தோன்றும் பருக்களை சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்!

தலையில் பொடுகு பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் அதிகமான பருக்கள் (pimples) தோன்றும். குறிப்பாக நெற்றியில் காணப்படும். சிறுச் சிறு பொறிகளாக தோன்றும் இந்த பருக்கள் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி சருமத்தை வறட்சியாக்கும். குளிர்காலங்கலில் பொடுகு பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொடுகு தொல்லையால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவரை எவ்வாறு சரி செய்யலாம் என இங்கு காணலாம். 

pixabay

 • தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் முகத்தில் பருக்கள் (pimples) தோன்றுகிறது. இதனை தவிர்க்க முதலில் தலையில் இருக்கும் பொடுகை சரி செய்ய வேண்டும். 
 • வாரம் இரண்டு முறை பொடுகிற்காக போடும் ஷாம்புவினால் தலையை அலச வேண்டும். காதுகள், முடியின் வேர்பகுதி என அனைத்தையும் ஷாம்புவினால் சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். நேராக நின்று கொண்டு ஷாம்பு உபயோகித்தால் தலையில் உள்ள பொடுகு நெற்றியில் படிந்து பருக்களை உண்டாக்கிவிடும். எனவே குனிந்து கொண்டு தலையை அலச வேண்டும்.
 • தலைக்கு கண்டிஷனர் உபயோகப்படுத்துபவராக இருந்தால் முடிக்கு மட்டும் கண்டிஷனரை உபயோகப்படுத்த வேண்டும். முடியின் வேர்க்கால்களுக்கு கண்டிஷனரை உபயோகப்படுத்த கூடாது.  கண்டிஷனரை நீங்கள் சுத்தமாக அலசாமல் விட்டுவிட்டால் தலையில் பொடுகு அதிகரித்துவிடும்.

மழைக்கால சரும பராமரிப்பு : சில அடிப்படை டிப்ஸ்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகள்!

 • பொடுகை ஏற்படுத்தும் ஈஸ்ட்டை தடுக்கும் ஷாம்பூகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். பெரும்பாலும் சல்பர் இல்லாத ஆன்டிபயாடிக் ஷாம்பூகளை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
pixabay

 • தலைமுடியை மிதமான சூடுள்ள  தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய்  கொண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது நன்றாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் தலையில் உள்ள வறண்ட பொடுகுகள் நீங்கும்.
 • உங்களது தலையில் பொடுகு இருந்தால் தலை முடியை முகத்தில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தலைமுடி முகத்தில் பட்டால் முடியில் உள்ள பொடுகும் முகத்தில் படிந்து பருக்களை உண்டாக்கும்.
 • அதேபோல தூங்கும் தலையணையில் ஏதேனும் டவல் அல்லது துணியை விரித்து படுக்க வேண்டும். ஏனெனில் தலையணையில் பொடுகு செதில்கள் பட்டால் அவை உங்கள் முகத்தில் படும் போது பொடுகை உண்டாக்கும். மேலும் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. 

திரும்பிப் பார்க்க வைக்கும் பேரழகிற்கு சில அசத்தலான ஹேர்ஸ்டைல் ஐடியாக்கள் !

 • எலுமிச்சை சாற்றை தலைமுடியின் வேர்கால்களில் நன்றாக தேய்த்து 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள நீரில் நன்றாக கழுவ வேண்டும். இதனால் பொடுகும் போகும். முகத்தில் உள்ள பருக்களும் நீங்கி, முகம் அழகாக மாறும். எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மையானது உங்களது முடியின் வேர்கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. 
pixabay

 • உங்கள் முகங்களை கழுவும் போது பெரும்பாலும் சோப்புகளை பயன்படுத்தமால் ஃபேஷ்வாஷ் பயன்படுத்துங்கள். பூஞ்சைத் தொற்றுக்களை சரிசெய்கின்ற ஆன்டி-ஃபங்கல் க்ரீம்களை இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரையிலும் தினமும் ஒருமுறை பயன்படுத்துங்கள். 
 • மாதம் ஒரு முறையாவது மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் அளவைக் குறைத்து ஆரோக்கியமான உணவினை உண்ணப் பழகிக் கொள்ளுங்கள்.
 • வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு மறைந்து விடும். 
 • இதேபோல குப்பைமேனிக் கீரையுடன் பூசுமஞ்சளை அரைத்து முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வர பருக்கள் மறையும். 

இந்த மழைக்காலத்தில் உங்கள் வழக்கமான மேக்கப் கரையாமல் இருக்க சில ரகசிய டிப்ஸ் !

pixabay

 • வெள்ளிக் காய் துண்டு இரண்டு, தக்காளி ஒன்று, சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி15 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர முகத்தில் உள்ள பருக்கள் (pimples) மறைந்து முகம் பொலிவு பெறும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.