உள்ளத்தை குளிர வைக்கும் மதுரை ஜிகர்தண்டா : வீட்டிலேயே சிம்பிளாக தயார் செய்வது எப்படி ?

உள்ளத்தை குளிர வைக்கும் மதுரை ஜிகர்தண்டா : வீட்டிலேயே சிம்பிளாக தயார் செய்வது எப்படி ?

கோயில் நகரமான மதுரையின் பெருமைக்கு பல காரணம் உள்ளது.  மதுரை இட்லி, மதுரை மல்லி, மதுரை மீனாட்சி அம்மன், மதுரை அழகர், என இவையெல்லாம் மதுரைகுள் பிரபலம். ஆனால் மதுரையில் பிரபலம் அடைத்து இன்று உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் பானம் என்றால் அது மதுரை ஜிகர்தண்டா தான் .

'ஜிகர்தண்டா' என்றால் என்ன?

ஜிகர்தண்டா என்னும் வார்த்தை தமிழ் மொழி கிடையாது.இது ஒரு ஹிந்தி வார்த்தை. அதாவது ஜிகர் என்றால் இதயம்,  நெஞ்சு என பொருள் படும். தண்டா என்றால் குளிர்ச்சி என்று பொருள். இதயத்தை குளுமை படுத்தும் பொருள் என்பதால் அதற்கு ஜிகர்தண்டா(jigarthanda) என்று பெயர் வந்தது.இப்பானம் இளநீர்க்கு சமம்மாக மக்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப் படும் பொருட்கள் தான்.

ஜிகர்தண்டாவை தயார் செய்வது எப்படி?

Pinterest

தேவையான பொருட்கள் 

 • பால் 1 கப் 
 • நன்னாரி சிரப் - 3-4 டேபிள்  ஸ்பூன் 
 • பாதாம் பிசின் - 1-2 டேபிள் ஸ்பூன் 
 • சக்கரை - 1/2 கப் 
 • ஐஸ் கிரீம் - 1 கப் 
 • பால்கோவா - 2 டேப்ளேஸ்பூன் 

ஜிகர்தண்டா செய்முறை

பாதாம் பிசின் - எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக   பாதாம் பிசினை ஊற வைக்கணும் . முந்தையநாள் இரவே இதை ஊற வைத்தால் மறுநாள் சேய்ய சரியாக இருக்கும்.  ஊறவைத்ததில் இரண்டு கல்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் இதில் உங்களுக்கு ஒரு கிண்ணம் நிறைய ஜெல்லியை போன்ற பாதாம் பிசின் கிடைக்கும். இதுவே இந்த குளிர்பானத்திற்கு முக்கியமான பொருளாகும். இது இல்லாமல் ஜிகர்தண்டா இல்லை என்றே கூறலாம்! 

ஐஸ் கிரீம் - ஜிகர்தண்டா அதற்கேற்ற சில ஐஸ்கிரீம் வகைகள் உள்ளன அதே உபயோகியுங்கள் இல்லாவிட்டால் ஏதேனும் உங்களுக்கு பிடித்த வெனிலா சாக்லேட் ஐஸ்க்ரீம்களை உபயோகிக்கலாம். 

பால் -   ஒரு லிட்டர் பாலை சிம்மில் (அடுப்பை) வைத்து நன்றாக பாலின் அளவு குறையும் அளவிற்கு மெதுவாக காய்ச்சுக்கொளுங்க. இன்னொரு கிண்ணத்தில் இன்னும் நன்றாக காய்ச்ச ஆடையுடன் இருக்கும் பால் அதாவது பாஸந்தியை போல் உள்ள பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பதிலாக பால்கோவாவையும்  சேர்த்துக்கொள்ளலாம் . 

இப்போது தேவையான பொருட்கள் அனைத்தும் தயாராகிவிட்டது. இதை மேற்கொண்டு ஒரு கிளாஸில் எவ்வாறு சேர்ப்பது என்பதை பார்க்கலாம்.

 •  முதலில் பாதாம் பிசினை இரண்டு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். அதற்கு மேல் நன்னாரி சர்பத்தை ஊற்றிக் கொள்ளுங்கள். 
 • அதற்கு மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் மற்றும் பாஸந்தியை போல் ஆடையுடன் இருக்கும் பாலை ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். 
 • இதற்கு மேல் நன்றாக காய்ச்சிய பாலை சிறிதளவு ஊற்றி  இதை ஒரு ஸ்பூனால் நன்றாக கிளறிவிட்டு மீண்டும் ஒரு பெரிய ஸ்கூப் ஐஸ் கிரீமை எடுத்து இதற்கு மேல் வைத்துவிடுங்கள். 
 • அதன் மேல் நன்னாரி சர்பத்தை சிறிதளவு ஊற்றி விட்டாள் உங்களுக்குத் தேவையான ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்!
Pinterest

சாதா ஐஸ் கிரீமிற்கு பதிலாக குலஃபீ ஐஸ்கிரீம்மை சேர்த்துக்கொள்ளலாம் . அதேபோல் பால் ஆடைகள் சேர்ப்பதற்கு பதிலாக சிலர் வெண்ணை சேர்க்கிறார்கள்.

ஜிகர்தண்டா பானத்தின் பலன்கள்

ஆம்..இதில் உள்ள பொருட்கள் அனைத்துமே உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

 • நன்னாரி என்னும் வேர், இதயத்துக்கு நல்லது. 
 • பாதாம் பிசின் உடல் சூட்டுக்கு மற்றும் வயிறு சம்மந்தமான வேக்காலாம் புண்னுக்கும் நல்ல மருந்து.
 • உடல் சூடு உள்ள பெண்களுக்கு, இது ஒரு நல்ல மருந்து. 

எளிமையான முறையில் வீட்டுல செய்ய (prepare) முடியும்.ஆரோக்கியம் சுவை என குழந்தைகள் கவர்வது இதுக்கு கூடுதல் பிளஸ். ஒரே பானம் (ஜூஸ்) குடித்து அலுத்து போன நமக்கு, இது ஒரு சூப்பர் குட் ரெசிபி.

மதுரை ஜிகர்தண்டா கடை இன்று மதுரையில் மட்டும் இல்லாமல் பல கிளைகள் கொண்டு தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் உள்ளது.திருச்சி, திண்டுக்கல், சென்னை, கோயம்பத்தூர்,சேலம்,  போன்ற 16 மாவட்டத்தில் உள்ளது.சிறிய தள்ளுவண்டியில் தொடங்கிய இந்த குளிர் பான கடை இன்று இவ்வளவு வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் சுவை தரம் ஆரோக்கியம்.

ஜிகர்தண்டா : மதுரையில் எங்கு கிடைக்கும் ?

Pinterest

இதை மதுரைக்கே சென்று ருசித்து பார்க்க ஆசையாக இருந்தால், மதுரை விளக்கு தூண் பேமஸ் ஜிகர்தண்டா கிழக்கு மார்க் வீதியில் கிடைக்கும்.

முகவரி : 272, கிழக்கு மாசி தெரு, ரோஷென் கடைக்கு அருகில், கிழக்கு மாசி தெரு, மதுரை, 625001

தொலைபேசி : 098421 16684

நேரம் : 9 am - 10 pm

இதை ருசித்து விட்டு ஜிகர்தண்டாவை இனி வீட்டில் செய்ய ரெடிதானே?!

 

மேலும் படிக்க - உங்கள் லேட் நைட் பசியை போக்க சென்னையில் 6 சிறந்த உணவகங்கள்

பட ஆதாரம் - பின்டெரெஸ்ட்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.