பயணத்திற்கு தயாரா? எளிமையாக உங்கள் சூட்கேஸை பேக்கிங் செய்வதற்கான டிப்ஸ்கள்!

பயணத்திற்கு தயாரா? எளிமையாக உங்கள் சூட்கேஸை பேக்கிங் செய்வதற்கான டிப்ஸ்கள்!

சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் பயணம் செய்வது நமது பயணத்தையே சீர் குழைத்து விடும். குறிப்பாக பயணத்திற்கு பேக்கிங் செய்வதற்கு முன்னர் நன்கு திட்டமிட்டு கொள்ள வேண்டும். தேவையற்ற சுமைகளை தவிர்த்து, தேவையானவற்றை குறைவான அளவின் பேக்கிங் (pack) செய்தால் மிகவும் எளிமையாக முடிந்து விடும். பயணத்திற்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து செலாவது சவாலான விஷயம் தான். தேவையான பொருட்களை மற்றும் பயன்படுத்தி எளிமையாகவும், சீக்கிரமாகவும் பேக்கிங் செய்வதற்கான சில பயனுள்ள தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

pixabay

 • சூட்கேசில் துணிகளை வைக்கும் போது சிறிதாக மடித்த வையுங்கள். இதனால் பெரும்பாலான இடம் சைவ் செய்யப்படும். மேலும் இவற்றை வாக்குவம் கவர்களில் வைத்தால் பெரும்பாலான இடம் மிச்சமாகும்.  
 • நீங்கள் விரும்பும் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து சென்றால், உங்களால் கையாள முடியாது. தேவையான அளவில் பாதி அளவை மற்றும் எடுத்து செல்லுங்கள். அதே நேரத்தில் உங்களுக்கு தேவையானவற்றை வாங்கும் வகையில் பணம் கொண்டு செல்லுங்கள். 
 • சாக்ஸ், உள்ளாடைகள் மற்றும் ஆக்சஸரிகளை ஷூக்களுக்குள் கூட வைக்கலாம். அல்லது சிறிய உறைகளில் போட்டு வைக்கலாம். 
 • குறிப்பாக வெளிநாடு பயணமாக இருந்தால்,  உங்களுடைய பாஸ்போர்ட், விசா மற்றும் டிராவல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள். இந்த ஆவணங்களை எல்லாம் உங்களது ஸ்மார்ட்போனில் சாப்ட் காப்பி வடிவில் இருந்தால் கூட அவற்றை தேவைப்படும் போது பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். 
 • உங்களது பராமரிப்பு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் (pack) ஆகியவற்றை தனித்தனி பைகளில் போட்டு வைக்கலாம். சிறிய சிப் வைத்த பைகள், சீல் கவர்கள் ஆகியவற்றை இதற்கு பயன்படுத்தலாம்.
pixabay

 • பயணத்திற்கு தேவையான பொருட்களை ஓரிரு வாரங்களில் முன்பு இருந்து  எடுத்து வையுங்கள். அப்போதுதான் ஏதேனும் இல்லாத பொருட்களை வாங்க நேரம் கிடைக்கும். தேவையான  பொருட்களை பட்டியலிட்டு அதன்படி எடுத்து வைத்தால் பேக்கிங் செய்ய அதிக நேரம் தேவைப்படாது. கடைசி நேரத்தில் எந்த பொருட்களையும் மறந்து விட்டு செல்லாமல் இருக்க பட்டியலிடுதல் முக்கிய பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 • பல்வேறு இடங்களுக்கு பயணிக்கிறீர்கள் என்றால் அதற்கேற்ப பேக்கிங் செய்து கொள்ளுங்கள். அவற்றை முன்னதாவே திட்டமிட்ட  தனித்தனியாக எடுத்து வைத்து கொண்டு பின்னர் பேக்கிங் செய்தால் எளிதாக இருக்கும். 
 • குடும்பத்தினருடனான பயணத்தில் அனைவரது பொருட்களையும் ஒன்றாக வைக்காமல் தனித்தகனியாக வைக்க வேண்டும். அப்போது தான் நேரம் மிச்சமாகும். அவரவருக்கு தேவைவற்றை தனித்தனியாக வைப்பதால் குழப்பத்தை தவிர்க்க முடியும். 
 • நீங்கள் செல்லும் இடம் குறித்த குறைந்தபட்ச தகவலாவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.அதனால் நீங்கள் செல்லும் இடம் பற்றி முன்கூட்டியே சற்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது குறித்த தெளிவு உங்களுக்கு கிடைக்கும். இது பேக்கிங் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். 
 • பயணத்தின்போது (pack) அதிகமான லக்கேஜ் எடுத்துச் செல்ல கூடாது. அதனால் குழந்தைகளை கூட்டி செல்லும் போது, பல்வேறு பொருட்களை செடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் குழந்தைக்கு என தனி பேக் வைத்து கொள்வது நல்லது. 
 • அதேபோல் அவசரத்தின் போது குழந்தையின் தேவைக்கு மட்டும் ஒரு ஸ்லிங் பேக் எப்போதும் உடன் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். அதில் உணவு, டயப்பர், ஆடைகள் என வைக்குமாறு நல்ல தாராளமான ஸ்லிங் பேக்காக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் தேவைக்கு உடனே எடுத்து தர ஏதுவாக இருக்கும்.  கைக்குழந்தையாக இருந்தால் டோட்லர் கட்டாயம் எடுத்துச் செல்லுங்கள்.
pixabay

 • பயணம் செல்லும்போது அடிப்படைத் தேவைகளுக்கான மருந்து பொருட்களை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம். பயணம் செல்லும் இடத்தில் திடீரென குழந்தைக்கு ஜுரம், சளி என ஏற்பட்டால் மருந்துகள் கொடுக்க ஏற்கனவே டாக்டர் அறிவுறித்திய மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள். அல்லது வீட்டிலேயே செய்யப்படும் மருத்துவக் குறிப்புகளையும் பின்பற்றலாம். அதற்கும் வீட்டுக் குறிப்புகளை எடுத்துச் செல்லலாம்.
 • வெளியிடங்களுக்கு செல்லும் டூரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தவற வேண்டாம். வருங்காலத்தில் அந்த பதிவுகள் உங்களுக்கு நீங்காத நினைவை ஏற்படுத்தும் என்பதால் புகைப்பட மற்றும் வீடியோ கருவிகளை தயாராக எடுத்துச் செல்லுங்கள்.
 • குழந்தைகான ஸ்னாக்ஸ் பொருட்கள், உணவுகள் மற்றும் பால், தண்ணீர் போன்றவற்றை சரியாக (pack) எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை தேவைப்படும் போது எடுக்கும் வகையில் மேலாக வைக்க வேண்டும். 
 • குறிப்பாக துணிகள் உள்ளிட்ட பொருட்களை சூட்கேஸிற்கு அடியிலும், ஆவணங்கள், அடிக்கடி தேவைப்படும் பொருட்களை மேலேயும் வைக்க வேண்டும். உதாரணமாக மொபைல் சார்ஜர்களை மேலே வைத்து கொள்ளுங்கள். நீங்கள் பயணிக்கும் இடத்தில் மின் வசதி இருந்தால் அவற்றை எளிதாக எடுத்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். 

இங்கே கொடுத்துள்ள டிப்ஸ்களை செயல்படுத்தி உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.