விலை மதிப்பற்ற நகைகளை பெண்கள் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!

விலை மதிப்பற்ற நகைகளை பெண்கள் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!

விலை மதிப்புமிக்க நகைகளை (jewellery) நாம் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். வாங்கும்போது அதிக கவனத்துடன் பார்த்து வாங்கும் நாம் நகைகளை வாங்கிய பின் அதனை பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் தவற விடுகிறோம். இதன் காரணமாய் நகைகள் மிக விரைவாக சேதம் அடைவது, நகையின் பொலிவு குறைவு ஏற்படுதல், வாங்கிய கொஞ்ச நாளில் பழைய நகை போன்று தோற்றமளிப்பது போன்றவை ஏற்படுகிறது. எனவே தங்க நகைகளை வாங்குவதில் இருக்கும் ஆர்வம் அந்த பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்.

pixabay

தங்க நகைகள்

 • தங்க நகைகள் அதிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை. அவற்றின் இடுக்குகள், விளிம்பு பகுதிகளில் அழுக்குகள் சேர்ந்து விடும். நமது உடலில் வெளிவரும் வியர்வை, தூசி உள்ளிட்ட அழுக்குகள் நாம் அணியும் நகைகளில் சேர்ந்து விடும். மேலும் நகையை அதற்குரிய பெட்டிகளில் வைத்திடாமல் திறந்தவாறு வைப்பதும் அதில் அழுக்குகள் படிய காரணமாகிறது. இதனை தவிர்க்க, 
 • தங்க நகைகளை தனித்தனிப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்போது தான் அதில் கல் மற்றும் முத்து  போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க - லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள ! அசத்தலான செல்ஃபி க்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்!

 • நகைகளை அணிந்து சென்று வந்த பிறகு மறுபடியும் பெட்டியில் வைக்கும் முன் நன்றாக வெள்ளை துணியில் துடைத்து வைக்கவும். அழுக்குடன் வைத்தால் அதன் பளபளப்பு மாறி விடும். 
pixabay

 • தங்க நகைகளுடன் (jewellery) பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு  அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும் என்பதால் கவனம் தேவை. 
 • தங்க நகைகளை சுத்தம் செய்ய விரும்பினால், பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால் அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும். 
 • இரண்டு  மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பூ அல்லது சோப்பு தூள் கலந்த நீரில் நகைகளை போட்டு ஐந்து நிமிடம் சூடாக்கி விட்டு கழுவினால் நகைகள் அழுக்குகள் நீங்கும்.
 • நகைகளை அம்மோனியா கலந்த நீரில் ஊற வைத்து நகைகளை கழுவலாம். ஆனால் சில நகைகளை அம்மோனியா நீரில் கழுவுதல் கூடாது என அறிவுறுத்தப்படும். அவற்றை மென்மையான பாத்திர டிடர்ஜென்ட்டை தண்ணீரில் கலந்து அதில் நகைகளை ஊற வைக்க வேண்டும்.

கற்கள் பதித்த நகைகள்

 • கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால் ஒளி மங்கி விடும். இதற்கு சிறிது நீல நிற‌ பற்பசையை கற்கள் மீது பூசி,  மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால் அவற்றிலுள்ள எண்ணெய் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும். 
 • கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர்  அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.
pixabay

 • கல் பதித்த நகைகளை (jewellery) சுடுநீரில்  போட்டு விடக் கூடாது. இவ்வாறு செய்தால், கற்களுக்கு சேதம் ஏற்பட்டு, அதன் கவர்ச்சி தன்மை நீங்கி விடும். காஸ்டிங் சோடா அல்லது உயர்ந்த வகை ஷாம்புவை பயன்படுத்தி முத்து, பவளம், கற்கள் பதித்த நகைகளை சுத்தப்படுத்தலாம்.
 • கல் நகைகளை அதற்குரிய பெட்டிகளில் தனித்தனியாக அடுக்கி வைக்கவும்.

வெள்ளி நகைகள்

 • வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல் மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் அதன் தன்மை மாறாமல் இருக்கும். 
 • அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து  எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும். 
 • மிதமாக சுட வைத்த தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து, அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால் நகைகள் பளபளக்கும். 

மேலும் படிக்க - அழகிய தோற்றத்திற்கு: ஆடைகளை உங்கள் தோல் தொனிக்கு ஏற்ப எவ்வாறு தேர்வு செய்வது ?

pixabay

 • வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு  மங்கி விட்டால் வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் புதியது போல ஆகி விடும்.
 • வெள்ளி கொலுசுகள் விரைவில் கறுத்துவிடும். கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருட்களில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் கறுப்பாகாமல் இருக்கும்.

முத்து நகைகள்

 • முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்களில் கீறல் விழுவதற்கான வாய்ப்புகள்  உள்ளன. எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது. முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் கழுவக்கூடாது. 
 • அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும். மேலும் முத்து நகைகள் மீது  வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே ஒப்பனைகள் முடிந்த பின்  முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும். 
 • முத்து நகைகளை பயன்படுத்தாத போது அவற்றை தூய்மையான வெள்ளை நிற பருத்தித் துணியினுள் வைக்க வேண்டும். முத்து,  வைடூரிய நகைகள் மென்மையானவை. அவற்றை பிளாஸ்டிக் பையில் வைக்கக் கூடாது. வெல்வெட் அல்லது மிருதுவான துணியில் பொதிந்து வைக்க வேண்டும்.
 • முத்துக்கள் வெண்மையாய் அல்லது அதன் இயல்பான நிறத்துடன் எப்போதுமே பளிச்சிட, முத்து நகைகளை தண்ணீர் படாமல் பாதுகாக்க வேண்டும். வெண்பூசணி சாறு முத்துக்களை சுத்தம் செய்ய மிக நல்லது.
pixabay

 • முத்து நகைகளை அணிந்து கொள்ளும்போது ஸ்ப்ரே, பெர்ஃப்யூம் ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது. இவை முத்து நகைகளை ஒளி இழக்கச் செய்யும்
 • பட்டு நூலில் கோத்த முத்து மாலைகளை ஓராண்டுக்கு ஒருமுறை பட்டு நூலை மாற்ற வேண்டும். உள்ளே உள்ள பட்டு நூல் நைந்து அறுந்து போவது நமக்குத் தெரியாது. இதனால் விலை உயர்ந்த முத்துக்களை இழக்க வேண்டிவரும்.
 • முத்துக்களை அதன் அளவு, வடிவம், வண்ணம் தரம் கொண்டு நிர்ணயிக்க வேண்டும். பெரியதாகவும் உருண்டையாகவும், ஆழமான வண்ணமும் சுத்தமான வடிவமும் இருக்கிறதா எனப் பார்த்து வாங்கவேண்டும்.
 • பிங்க் கலந்த வெண்மை முத்துக்கள் சிறந்தவை. நீலம் அல்லது க்ரீம் வண்ணம் கலந்தவை அடுத்தபடியானதுதான். முத்துக்களை வாங்குவதற்குமுன் இயற்கை வெளிச்சத்தில் வைத்துப்பார்த்து வாங்க வேண்டும். முத்துக்களை மற்ற அணிகலன்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது.  துடைக்கும்போது முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உராயாமல் பார்த்துக் கொள்ளவும். 

மேலும் படிக்க - வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பாதாம் எண்ணெய் மற்றும் பேஷ் பேக்குகள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.