தூரத்தில் நீ வந்தாலே.. என் மனசில் மழையடிக்கும்.. உங்கள் க்ரஷ்'சை ஈர்க்க சில வழிமுறைகள் !

தூரத்தில் நீ வந்தாலே.. என் மனசில் மழையடிக்கும்.. உங்கள் க்ரஷ்'சை ஈர்க்க சில வழிமுறைகள் !

ஈர்ப்புவிசை என்பது பூமியின் சிறப்பம்சம். அதனால்தானோ என்னவோ பூமியில் வாழும் மனிதர்களுக்கிடையேயும் அதே ஈர்ப்பு விசைதான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.எல்லா உயிரினங்களுக்கு இடையேயும் இந்த ஈர்ப்பு (impress) என்பது பொதுவானதாகவே வைத்திருக்கிறது.

உயிர்கள் இனப்பெருக்கம் மூலமாகவே பெருகுகிறது. இந்த விளையாட்டை கொஞ்சம் சுவாரஸ்யமாக விளையாடிப் பார்க்க நினைத்த இயற்கை இந்த இனப்பெருக்கத்திற்காக கூடுதல் விதிகளை விதித்தது. 

பல உயிர் இனங்களில் பல சுவாரஸ்ய விதிகள் இருக்கின்றன. ஒருவரை ஈர்க்க வேண்டும் (impress) என்றால் அதற்கான சில மெனக்கெடல்கள் அவசியமானதுதான். தான் நேசிக்க தகுதி உடையவனாக ஒரு ஆண் மாறுகையில் அவனை ஈர்க்க நினைப்பதில் எந்த தவறும் இல்லை. 

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள ! அசத்தலான செல்ஃபி க்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்!

Table of Contents

  Pixabay

  மனதுக்கு பிடித்த ஆணை எப்படி ஈர்க்க வேண்டும்

  உங்களுக்குள் பொங்கும் நேசத்திற்கு தகுதியான ஒரு ஆணை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றாலே நீங்கள் பாதி வெற்றி அடைந்ததாகவே அர்த்தம். ஆகவே அதே சந்தோஷத்தோடு அந்த ஆணை எப்படி அணுகினால் உங்கள் மீதி வெற்றி நிர்ணயிக்கப்படும் என்பதை அறிந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

  அவர் மீது சுவாரஸ்யம் காட்டுங்கள்

  உங்கள் நேசத்துக்குரிய ஆண் உங்கள் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்று நினைத்தால் உங்கள் கவனத்தை அவர்மீது வைக்க வேண்டும். அவர் செய்யும் வேலைகள் , கலைகள் தனிப்பட்ட விருப்பங்கள் ஆகியவற்றின் மீது உங்கள் சுவாரஸ்யத்தை காட்டுங்கள்.

  பொதுவான இடமே உங்கள் சந்திப்புக் களமாக இருக்கட்டும்

  உங்கள் ஆசைக்குரிய ஆண் நண்பருடன் நீங்கள் சந்திக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான இடமாக இருட்டான திரையரங்குகள் , யாருமற்ற வீடு, தனிமையான இடங்களை எப்போதும் தேர்ந்தெடுக்காதீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் தகவல் தவறாக பரிமாறப்படலாம். எப்போதுமே பொது மனிதர்கள் வெளிச்சம் நிறைந்த இடங்களில் உங்கள் சந்திப்புகளை நிகழ்த்துங்கள். இதன் மூலம் உங்கள் மீதான மரியாதை அவருக்கு பலப்படும். அதுதான் உங்களை அவர் நேசிக்க அடித்தளமாக இருக்க வேண்டும்.

  டீனேஜ் பெண்களுக்கான வித்தியாச ஹேர்ஸ்டைல்கள் ! திரும்பி பார்க்க வைக்கும் அழகை பெறுங்கள் !

  pixabay

  உடல் மொழி மிக முக்கியம்

  உங்கள் மனத்துக்குப் பிடித்த ஆணுடன் நீங்கள் பேசும்போது உங்கள் உடல்மொழி மிக முக்கியமானது. அவரது கண்களை பார்த்தே நீங்கள் பேச வேண்டும். அதுதான் உடல்மொழியில் முதன்மையானது. அவரோடு பேச உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்பதை முதலில் அவர் உணர வேண்டும். அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு ஆணை மிகவும் ஆழமாக தொடும் ஒரு செயல் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நேருக்கு நேராக பேசுவதும் உங்கள் தோள்களை குறுக்காமல் நிமிர்ந்த தன்மையோடு அமர்வதும் இங்கே முக்கியமானது. 

  அவரை நீங்கள் கவர்வதும் அவசியமானதுதான்

  உங்களுடைய முக்கியமான நோக்கமே அவரைக் கவர்வதுதான் என்பதால் அதனை நீங்கள் கீழ்கண்ட முறைகளில் செய்யலாம். அடிக்கடி சிரிப்பது, அடித்து பேசுவது, தொடுவது போன்ற விஷயங்கள் அவர்களை அதிகமாக கவரும். அதுவே முதன்மை ஆனது. அவருக்கும் உங்களுக்கும் பொதுவாக உள்ள விஷயங்களை அவருக்கு பிடித்த நிறம் உங்களுக்கும் பிடித்திருக்கலாம் இப்படியான விஷயங்களை முதலில் தொடங்குங்கள். இது ஆணை உங்கள் வசம் இழுக்கும் முக்கிய கயிறு.

  செலவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

  ஒரு ஆண் தனக்கான பெண்ணைத் தேடும்போது அவன் தனது பின்தொடர்பாளரையோ அல்லது தன்னை அண்டி வாழ்பவரையோ விரும்புவதில்லை. மாறாக தனக்கு சமமாக இருக்கும் பெண்ணைத்தான் அவன் அதிகம் நேசிக்கிறான். அவளுடன்தான் தன்னுடைய வாழ்வைப் பகிர நினைக்கிறான்.அதனால் உங்கள் விஷயத்திற்கு நீங்களே பணம் செலுத்தும்பட்சத்தில் உங்கள் மீதான அவனது அபிப்ராயம் உயர்கிறது. அதன் பின்பும் அவரே உங்கள் பில்லைக் கட்ட விரும்பினால் செய்யட்டும். ஆனால் நீங்கள் உங்கள் செலவைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதை வெளிக்காட்டியதன் மூலம் அவரை இம்ப்ரெஸ் செய்து விட்டீர்கள் அது போதும்!

  நிதானமான வெற்றிதான் நிலையானது

  கடின உழைப்பின் மூலம் பெறப்பட்ட விஷயம் என்பது எல்லோருடைய வாழ்விலும் பொக்கிஷமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. உங்கள் ஆணை ஈர்ப்பதில் இதே பார்முலாவைப் பயன்படுத்துங்கள். உங்களை வெகு சுலபமாக அவர்களுக்குத் தூக்கிக் கொடுத்து விடாதீர்கள். மலிவாகக் கிடைப்பவை எல்லாம் மதிப்பற்றவை என்கிற கணக்கிலேயே ஆண்கள் பார்ப்பார்கள். உடனடியாக உங்கள் விருப்பத்தை பேசி விடாதீர்கள். உடனடியாக அவர்களின் குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பாதீர்கள். காலதாமதம் செய்து அனுப்புங்கள். கஷ்டப்பட்டு பெறக்கூடிய காதலின் அருமை என்பது உங்கள் மீதான ப்ரியத்தை ஆணுக்கு அதிகப்படுத்தும். உங்களை இழக்க அவர்களுக்கு மனம் வராது. 

  உங்களை மதியுங்கள்

  உங்களை மற்றவர் மதிக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் உங்களை மதிக்க வேண்டும். இது சிம்பிள் பார்முலாதான். உங்களை முழுமையாக ஒரு ஆணிடம் ஒப்படைக்கும் முன்பு உங்களுக்கான மரியாதையைப் பெற்றுக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் என்றாவது ஒரு சமயம் உங்கள் மதிப்பை நீங்கள் இழக்க வேண்டி வரலாம். 

  உங்கள் சிறப்பம்சம்களை கவனிக்க வையுங்கள்

  உங்கள் சிறப்பம்சம் என்பது நீங்கள் ஒரு எழுத்தாளராக இருக்கலாம், கவிஞராக இருக்கலாம். உங்களது தனித்திறமைகளை பற்றி நீங்களே சொல்லாமல் மறைமுகமாக பேசுவது அவரை உங்கள் பக்கம் ஈர்க்கும். உதாரணமாக உங்களுக்கு யாருடைய எழுத்துக்கள் பிடிக்கும், எழுத்தை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது போன்ற பல விஷயங்களை பேச்சுவாக்கில் சொல்லுங்கள். உங்கள் தனித்திறமையை கண்டு அவர் நிச்சயம் ஈர்க்கப்படுவார்.

  நீங்களாகவே இருங்கள்

  ஒரு ஆணை உங்கள் பக்கம் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் நீங்கள் நீங்களாகவே செயல்பட வேண்டியது அவசியம். அப்போது உங்கள் இயல்பை நேசிக்க ஆண்களும் விரும்புவார்கள். அதனைப் பற்றி இப்போது பார்க்கலாம்

  உங்கள் சொந்த விருப்பங்களை பகிருங்கள்

  ஒரு ஆணை நீங்கள் கவர வேண்டும் என்று விரும்பினால் உங்கள் விருப்ப செயல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். யோகா , பாடல் , டிசைனிங் என எதுவேண்டுமானாலும் இருக்கலாம், அதனை சிறந்த முறையில் கற்று தேர்ந்து உங்கள் மனதுக்கு பிடித்தவரோடு அதனைப் பற்றி பகிருங்கள்.

  நண்பர்களோடு இருங்கள்

  நீங்கள் எப்போதும் உங்கள் விருப்பத்திற்குரிய ஆணின் அருகாமையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது அவருக்கு உங்களை பற்றிய எதிர்மறை எண்ணங்களை விதைக்கலாம். அவர் பார்க்கும்படி உங்கள் நண்பர்களோடு சிரித்து பேசி அரட்டை அடியுங்கள். அந்த மாதிரி தன்னை சாராத பெண்களை ஆண்கள் நிறையவே நேசிப்பார்கள்.

  உங்கள் தனித்தன்மையை கொண்டாடுங்கள்

  ஒரு தனி மனிதியாக உங்களது திறமைகளை கொண்டாடுங்கள். ஒரு திரைப்படம் பார்ப்பதையோ புத்தகம் படிப்பதையோ கோயிலுக்கு செல்வதையோ எதுவாக இருந்தாலும் அதனை உங்கள் தனித்தன்மையாக கொண்டாடுங்கள். இதனைப் பற்றி அவரிடம் கூற பயப்படாதீர்கள். உங்களை சந்தோஷப்படுத்தும் விஷயங்களை பகிர்வதை ஆண்கள் எப்போதும் விரும்புவார்கள். 

  டேக் இட் ஈஸி பேபி

  உங்களை நீங்கள் சீரியஸான பெண்ணாக காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமான பெண்ணாக காட்டிக் கொள்வது ஒரு ஆணை மிகவும் கவர்ந்திழுக்க கூடிய செயலாகும். மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்வதை ஆண்கள் ரொம்பவே விரும்புவார்கள். உங்களை பார்த்து நீங்களே நகைத்துக் கொள்வது என்பது ஒரு கலை. அது உங்கள் ஆயுளுக்கும் உதவி செய்யும்.

  அடுத்தவர்களை பற்றி கவலைப்படாதீர்கள்

  நம்மைப் பற்றி அடுத்தவர்கள் என்ன விமர்சிப்பார்களோ என்கிற கவலையை விட்டு விடுங்கள். உங்கள் மனத்துக்குப்பிடித்த நபரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் நீங்களாகவே இருங்கள். எல்லா நேரங்களிலும் யாரிடமாவது தயவு பண்ணி கொண்டே இருக்காதீர்கள். அது உங்கள் இயல்பை மாற்றி விடும். அதைப்போலவே எப்போது பார்த்தாலும் கண்ணாடி பார்த்து உங்கள் முகத்தை சரிபார்க்காதீர்கள். அடிக்கடி மேக்கப் டச் செய்யாதீர்கள். இது உங்கள் மீதான அபிப்ராயங்களை மாற்றி விடும் பழக்கமாகும். 

  Pixabay

  ஈர்ப்பு விசையை எப்படி பயன்படுத்தலாம்

  ஒரு ஆணை உங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்றால் அதற்கு பல்வேறு மாயமந்திரங்களை எல்லாம் செய்யத் தேவையே இல்லை, உங்கள் விருப்பம் ஆழ்மனதில் இருந்து வந்திருக்கிறது என்றால் அவர் சரியான நபராக இருக்கும்பட்சத்தில் இயற்கையே அதற்கான வழிமுறைகளை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.

  உங்கள் குணங்களைக் கொண்டாடுங்கள்

  உங்களிடம் உள்ள குணங்களை நீங்கள் மேம்படுத்துவது ஒரு ஆணை மேலும் வசப்படுத்தக்கூடிய செயலாகும். ஒரு அறையில் 10 நபர்கள் இருந்தாலும் நீங்கள் அங்கே இருக்கும்போது அனைவர் கவனமும் உங்கள் மீது விழ வேண்டும். அதற்காக போலித்தனமாக எதையும் செய்ய வேண்டாம். உங்கள் இயல்பில் இருந்தே அந்த தன்மை இருப்பதை போல காட்டிக் கொள்ள வேண்டும்.

  நகைச்சுவையோடு இருங்கள்

  ஆண்கள் எப்போதும் விளையாட்டுத்தனமாக இருக்கும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். அவர்கள் டிசைன் அப்படி. உதாரணமாக மௌனராகம் திவ்யா கதாபாத்திரம் போல நீங்கள் இருப்பீர்கள் ஆனால் அது ஆண்களால் கவரப்படும். அதற்காக சந்தோஷ் சுப்ரமண்யம் ஜெனிலியா போல இருப்பீர்கள் என்றால் சில ஆண்களால் அதனை சகித்துக் கொள்ள முடியாது. கவனம். 

  Youtube

  மிக தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் இருங்கள்

  நீங்கள் உங்களைத் தன்னம்பிக்கை உடைய பெண்ணாக காட்டிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையான பெண்கள் தங்களுடன் நேர்மறை சக்தியை வைத்திருப்பார்கள். அவர்களது தைரியத்தை பார்க்கையில் ஆண்களுக்கும் ஒரு நம்பிக்கை எழும். ஆகவே உங்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை ஆகிய குணங்கள் அவர்களுக்கு உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். 

  உங்களுக்கு உண்மையாக இருங்கள்

  எப்போதும் உண்மைத்தன்மையோடு இருப்பதை ஆண்கள் மட்டுமல்ல மனித இனமே விரும்புகிறது. உங்களை பற்றிய உண்மைத்தன்மையை நீங்களே கொண்டாடுவது சிறப்பானது. மற்றவர்களை பார்த்து நாம் போலியாக நடந்தோம் என்றால் நமக்குத்தான் நாம் நாடகம் போடுகிறோம் என்பது தெரியும் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் அனைவருக்குமே அது வெட்டவெளிச்சமாக தெரிய வந்து விடும் என்பதால் உங்கள் நிஜ நிறங்களை நீங்கள் ஒளிர விடுவதுதான் நல்லது.

  சுதந்திரமாக இருங்கள்

  நீங்கள் சுதந்திரமான பெண்ணாக இருந்தால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். யாரையும் சாராமல் உங்களுக்கான முடிவுகளை நீங்களே எடுக்கும் சுதந்திரம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருக்கும்போது ஆண் மிக நம்பிக்கையோடு உங்கள் வசம் வரத் தொடங்குகிறான்.

  Pixabay

  உங்கள் க்ரஷ் உங்களை அதிகமாக நெருங்க சில குறிப்புகள்

  உங்கள் க்ரஷ் உங்களுடன் அதிகமாக நெருங்கி வர வேண்டும் என்று நீங்கள் உள்ளுக்குள் விரும்புகிறீர்கள் என்றால் கீழ்கண்ட முறைகளை முயன்று பாருங்கள்

  புன்னகையோடு ஆரம்பியுங்கள்

  ஒரு அட்டகாசமான புன்னகை எந்த துயரத்தையும் மறந்து விடச்செய்யும். அப்படி ஒரு புன்னகையோடு உங்கள் ஆணை நீங்கள் பாருங்கள். எந்த ஒரு மேக்கப் சாதனத்தை விடவும் உங்களுக்கு அழகை தருவது உங்கள் புன்னகை மட்டுமே. உங்கள் புன்னகையால் உங்கள் ப்ரியத்துக்குரியவரை மயக்குங்கள்.

  செல்ஃபிக்கள் செக்சியானவை

  எப்போதும் செல்ஃபிக்கள் என்பது கவர்ச்சியான அணுகுமுறையைத் தருகிறது. பலருடன் உங்கள் ஆண் இருக்கும்போது அவருடன் சென்று அளவளாவி சில நிமிடங்களில் அவரோடு ஒரு செல்ஃபி எடுங்கள். இது அந்த ஆணை உங்களை நேசிக்க வைக்கும் தூண்டிலாக மாறும்.

  திரைப்பட டேட்டிங் கூப்பிடுங்கள்

  எப்போதும் வலிமையான பெண்களை ஆண்கள் நேசிப்பார்கள். உங்கள் விருப்பத்துக்குரிய ஆணை மூவி செல்ல கூட அழையுங்கள். யார் முதலில் என்பதில்தான் பல விஷயங்கள் அப்படியே இருக்கின்றன. முதலில் நீங்கள் அழைத்தால் அதன் பின்னர் அவரும் தயக்கங்களைத் தவிர்த்து உங்களுடன் நெருங்கி வர நினைப்பார்.

  இன்ஸ்டாகிராம் லைக் செய்யுங்கள்

  உங்கள் விருப்பத்துக்குரிய ஆணின் இன்ஸ்ட்டா பக்கத்தை எப்போதும் கண்ணில் படும்படி வைத்திருங்கள். உடனுக்குடன் லைக் செய்யுங்கள். அது அவரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்கும்.

  அவரை டேக் (tag) செய்யுங்கள்

  நீங்கள் இன்ஸ்ட்டாவில் ஏதாவது பதிவு போடுகிறீர்கள் என்றால் அதில் அவரை டேக் செய்யுங்கள். இதன் மூலம் அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள் என்பதால் அவர் உங்கள் வசம் வரத் தொடங்குவார்.

  மாலை நேரம் மழை தூறும் காலம்

  எப்போதும் மாலை வேளைகளை உங்கள் ஆணிற்காக ஒதுக்கி வையுங்கள். இரவின் ஆரம்பத்தில் உங்கள் விருப்பத்துக்குரியவருடன் பேச ஆரம்பிப்பது என்பது உங்கள் வசம் அவரை ஈர்க்க செய்யும். இரவு நேர உரையாடல்கள் எப்போதும் உண்மையாகவும் ஆழமாகவும் இருக்கும். அதே நேரம் இரவு வேளைகளில் அந்த ஆணும் உங்களுடன் நேரம் செலவிட விரும்புகிறார் என்றால் நிச்சயம் நீங்கள் அவரின் விருப்பத்துக்குரியவள் ஆகி விட்டீர்கள் என்பதுதான் பொருள்.

  பேசும் போது உங்கள் கூந்தலை சரி செய்தபடி பேசுங்கள்

  ஒரு ஆணைக் கவர கூடியது எப்போதுமே கூந்தல்தான். அவருடன் பேசும் போது கூந்தலை அளைந்தபடி பேசுங்கள். முன்னே இழுத்துப் போடுங்கள். பின்னே ஸ்டைலாகத் தள்ளுங்கள். உங்கள் கூந்தலை நீங்கள் தொட்டு பேசும்போதெல்லாம் ஆண் உங்கள் வசம் ஈர்க்கப்படுவான். 

  சீண்டி விளையாடுங்கள்

  உங்கள் ஆண் உங்களிடம் முத்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில் அவன் காதருகில் கிசுகிசுத்து விட்டு நகர்ந்து விடுங்கள். இது போன்ற சீண்டல்கள் அவனுக்கு மிகப்பிடிக்கும். மேலும் அவனது போன் கால்களை உடனே எடுக்காமல் தாமதித்து எடுங்கள். அதன் மூலம் அன்பும் பிரியமும் ஏக்கமும் அதிகமாகும்.

  குறும்புத்தனம் அவசியமானது

  உங்களுக்கான ஆணுடன் பேசும்போது யாரும் பாராத சமயங்களில் கண்களை சிமிட்டுங்கள். நாக்கை துருத்தி அழகு காண்பியுங்கள். இப்படியான சில உடல்மொழிகள் மூலம் நீங்கள் குறும்புத்தனம் செய்வதை ஒரு ஆண் மிகவும் ரசிப்பான். வெகு சீக்கிரமே அவனும் உங்கள் மீது க்ரஷ் ஆகி விடுவான்.     

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                    

  அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.