logo
ADVERTISEMENT
home / Dad
“ஹெலிகாப்டர் பெற்றோர்” – உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?

“ஹெலிகாப்டர் பெற்றோர்” – உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?

ஹெலிகாப்டர் பெற்றோர் (helicopter parenting). பெயரே புதுவிதமாக இருக்கிறதே என்று யோசிக்கலாம். உங்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கும் பெற்றோர் நீங்கள் என்றால் இது உங்களுக்குத்தான்.

உங்கள் குழந்தை மீது அளவுக்கு அதிகமான கவனம் செலுத்துவதால் குழந்தைகள் எவ்வாறெல்லாம் பாதிப்படைகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பிள்ளைகள் மீது அளவுக்கதிகமான கவனம் இருக்கும் பெற்றோர் அவர்களையும் அறியாமல் குழந்தைகளை பலவீனப்படுத்துகிறார்கள். இவ்வகை பெற்றோருக்கு இந்தப் பெயரை வைத்ததே ஒரு குழந்தைதான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?

1969ம் வருடம் வெளியான புத்தகம் பிட்வீன் பேரண்ட் அன்ட் டீனேஜர்(between parent and teenager)  இதனை எழுதியவர் டாக்டர் ஹாம் கினாட். ஒரு பதின்பருவ மகள் எப்போதும் தன்னைக் கண்காணிக்கும் அம்மாவைப் பற்றிக் கூறிய வார்த்தை ” தலைக்கு மேலே வட்டமிடும் ஹெலிகாப்டர் போல எப்போதும் என்னை ஆதிக்கம் செய்தபடியே இருக்கிறார்கள்” என்பதுதான்.

ADVERTISEMENT

பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்படி இருந்தால் சிறந்தது? ஓர் உளவியல் பார்வை.

Pixabay , Youtube

அதில் இருந்துதான் இந்த வார்த்தை பிறந்ததது. பெற்றோர் பிள்ளைகளின் மேல் அதீத கவனம் செலுத்தும்போது குழந்தைகளின் சுதந்திரம் பறிபோகிறது. அதுமட்டும் இல்லாமல் பெற்றோர் குழந்தை இருவர் இடையேயும் மனரீதியான பாதிப்புகள் நிகழ்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள்.

ADVERTISEMENT

ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் முல்லேண்டோர் கூறுகையில் செல்போன்களின் வரவு இந்த ஹெலிகாப்டர் பெற்றோர்களுக்கு வரப்ரசாதமாகிவிட்டது. அவர்களை பொறுத்த வரை உலகின் மிக நீண்ட தொப்புள்கொடியாக செல்போன்கள் இருப்பதாக இவர் குறிப்பிட்டிருக்கிறார். ஏனெனில் செல்போன் வந்த பிறகுதான் பிள்ளைகள் எங்கிருந்தாலும் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

இப்படி தொடர் கண்காணிப்பில் இருக்கும் குழந்தைகளால் தனித்து இயங்க முடிவதில்லை என்பது பெரும்பான்மை உளவியாளர்களின் தீர்வாக இருக்கிறது. அவர்களால் தங்களது அடிப்படை உணர்வுகளைக் கூட வெளிப்படுத்த முடியாத தன்மை இருக்கிறது என்கின்றது ஆய்வு முடிவுகள்.

இதனால் வீட்டிற்கு வெளியே பள்ளி கல்லூரிகளில் தங்களால் தனித்து இயங்க முடியாமல் யாருடனும் பழகாமல் வகுப்பறைகளில் ஒதுங்கி நிற்கின்றனர் குழந்தைகள். இந்த ஆய்வுக்கென இரண்டு,எட்டு ,பத்து வயதுள்ள 422 குழந்தைகளை எட்டு வருடங்கள் தொடர்ந்து கண்காணித்தபோது கண்டறியப்பட்டவைதான் மேற்கண்டவை.

பள்ளிக் குழந்தைகளுக்கான சில சுவையான லன்ச் ரெசிப்பீஸ் !

ADVERTISEMENT

Pixabay , Youtube

ஓவர் கன்ட்ரோல் செய்யப்படும் குழந்தைகள் ஒரு காலத்திற்குப் பிறகு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதில் பெற்றோரும் விதிவிலக்கல்ல. தனது குழந்தைக்குத் தவறாக எதுவும் நடந்து விடக் கூடாது என்பதன் காரணமாகவே இவர்கள் குழந்தைகளை கவனமாக பார்க்கின்றனர். இதுவே பின்னாளில் மனோ வியாதிக்கு அடிப்படை ஆகிறது.

குழந்தையின் தோல்விகள் இவர்களையும் பாதிக்கின்றன. இவர்களால் குழந்தையை சமநிலையோடு வளர்த்த முடியாமல் குழந்தைகளையும் தோல்வி எனும் வார்த்தைக்கு பயப்படும் வண்ணம் ஆக்குகின்றனர். அறிஞர்கள் குழந்தை என்பது தோல்வி என்பதையும் அறிந்தே வளர வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ளும் போது சுலபமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ADVERTISEMENT

உதாரணமாக குழந்தையின் ஹோம் ஒர்க் மற்றும் ப்ராஜெக்ட்களை அவர்களை செய்ய விடாமல் தானே செய்வது கூட ஹெலிகாப்டர் பேரன்டிங் வகையில்தான் வருகிறது. இப்படி செய்வதால் குழந்தையின் தனித்தன்மை அவர்கள் எதில் திறமைசாலிகள் என்பனவற்றை அறிய முடியாமலே போகிறது.

இப்படிப்பட்ட பொத்தி வளர்க்கப்படும் தன்மையால் பெற்றோரும் பாதிப்படைகின்றனர். அவர்களின் தன்னம்பிக்கை கேள்விக்குறியாகிறது. தங்கள் பிள்ளைகள் ஜெயிப்பார்களா இல்லையா என்கிற கவலை அவர்களை வாட்டுகிறது. அதுவே சில நாள்களில் பதட்டமாக மாறுகிறது.

குழந்தைகளுக்கு எது நல்லது? ஹோம் ஸ்கூலிங்கா ட்ரெடிஷனல் ஸ்கூலிங்கா !

ADVERTISEMENT

Pixabay , Youtube

இதனை எப்படி சரி செய்யலாம் என்றால் உங்கள் அக்கறையின் நீளத்தை அதிகப்படுத்துவதன் மூலம் சரி செய்யலாம். உதாரணமாக உங்கள் பிள்ளை மற்றும் அவர்களின் நண்பர்களோடு பிக்னிக் செல்லுங்கள். வகுப்பறை நண்பர்களோ அல்லது அடுத்த வீட்டு நண்பர்களோ அவர்களோடு நேரம் செலுத்துங்கள். உங்கள் பிள்ளை மீதான அக்கறையை சற்றே நீட்டித்து அனைவரையும் அதே அக்கறையோடு பாருங்கள். இதனால் உங்கள் குழந்தைகள் பெருமிதம் அடைவார்கள்.

உங்கள் குழந்தையின் பிரச்னைகளை அவர்களே பார்த்துக் கொள்ள செய்யுங்கள். உங்கள் நேரடித் தலையீடு இல்லாமல் அவர்கள் அந்த பிரச்னையை உங்களிடம் முதலில் சொல்ல விடுங்கள். அதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர்களையே கேளுங்கள். அதில் பிழை இருப்பின் பக்குவமாக சொல்லுங்கள். தவறில்லை. மற்றபடி அவர்களுக்கு பதிலாக நீங்கள் முடிவுகளை எடுக்காதீர்கள்.

அவர்கள் பள்ளியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதில் எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் தன்னிடம் உள்ள திறமையைப் பயன்படுத்தி தனக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ்வதற்கு பழக்கப்படுத்துவதுதான் பேரெண்டிங் என்பதால் அதனை சரிவரக் கையாளுங்கள். குழந்தைகளுக்கு தலைவலி தரும் பெற்றோராக இல்லாமல் அவர்கள் தலைமை தாங்கும் தகுதி உடையவராக வளர்த்துங்கள். எதிர்கால உலகம் உங்கள் பெயர் சொல்லி புகழட்டும்.

ADVERTISEMENT

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

24 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT