மூலிகை குணம் கொண்ட வெந்தயத்தின் (fenugreek) இலையும், விதையும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பல மருத்துவ குணங்களால் வெந்தயத்தை எல்லோரது வீட்டிலும் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். மனித உடலுக்கு தேவையான இரும்பு சத்தை வெந்தயம் நமக்கு அளிக்கிறது. இதனால் மனித உடலை இரும்பு போல் ஆக்க கூடிய தன்மை வெந்தயத்திற்கு உள்ளது. அதே போல் வெந்தயத்தின் கீரையும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.
ட்ரோயோனெல்லா ஓயனம் கிரிக்கம் என்ற தாவர பெயரை கொண்டிருக்கும் வெந்தயம், ட்ரைகோ நெல்லின் என்ற மருத்துவ பொருளை கொண்டுள்ளது. வெந்தயத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், இருப்பு சத்து உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலையில் , வெந்தயத்தின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து இங்கே விரிவாக காணலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை (fenugreek) தினமும் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படும். அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கலாம். மேலும் நீரிழிவு நோயாளிக்கு 24 வாரங்கள் தினமும் முளைக்கட்டிய வெந்தயம் கொடுக்கப்பட்டு வந்ததில்,அந்நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்ட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கிறது. வெந்தயத்தில் கேலக்டோகோக் என்னும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உட்பொருள் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெந்தயத்தை வெறும் வாயிலோ அல்லது இரவில் ஊறவைத்து பின்னர் அதனை காலையில் எழுந்தவுடன் சாப்பிடுவதாலோ பாலுட்டல் அதிகரிக்கிறது.
உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி !
40 வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் நெருங்கி கொண்டிருக்கும். இத்தகைய காலகட்டத்தில் அவர்கள் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதோடு, மனநிலையில் ஏற்ற இறக்கம், ஒருவித வெப்ப உணர்வு போன்றவற்றை சந்திப்பார்கள். ஆனால் வெந்தயத்தை தினமும் பெண்கள் உட்கொண்டு வந்தால் இப்பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம். மேலும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியும் குறையும்.
வெந்தயத்தில் (fenugreek) உள்ள காலக்டோமானன் என்னும் உட்பொருள் கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது. இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்பு சத்தான எல்.டி.எல். கொலஸ்ட்ரால் குறைந்து விடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் வெந்தயத்தில் ஹைபோ-லிபிடமிக் மூலப் பொருட்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை சீரான் அளவில் வைக்க உதவுகின்றன.
நம் முன்னோர்கள், தங்களுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவார்கள். செவ்வாழைப் பழத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகம் பொடித்திட்டு குடித்தாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெந்தயம் (fenugreek) குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும்.
வெந்தயம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க செய்கிறது. மேலும் வெந்தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உள்ளது. இது வயிற்றை வேகமாக நிரப்பி, எடையை குறைக்க நினைப்போருக்கு நல்ல தீர்வை தருகிறது. இதனால் பசி எடுக்கும் உணர்வு காட்டுக்குள் வைக்கப்படுவதால் உடல் எடை சீராக இருக்கும்.
வெந்தயம் சிறுநீரக கற்களைக் கரைக்க கூடியது. கற்கள் வராமல் தடுக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கிக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்
முளைக்கட்டிய வெந்தயத்தை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய பிரச்சனைகள் வரும் அபாயமும் குறையும்.ஜீரண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் வயிற்றில் கழிவுகள் சேராமல் சீராவதால், இரத்த ஓட்டம் விருத்தியடைகிறது. இதய நோய் இல்லாமல் போகிறது. இதய நோய் உள்ளவர்கள் வலி ஏற்படும் போது இந்த கஷாயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வலி குறைகிறது.
வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க வியர்வை நாற்றம் நீங்கும். சிறிது வெந்தயத்தை வெந்நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்து\வெறும் வயிற்றில் அருந்தலாம். இது குடலின் ஜீரணச் சுரப்புகளைச் சீராக்குவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும். வெந்தய கீரையை அரைத்து உடலில் பூசி குளித்து வந்தாலும் துர்நாற்றம் கட்டுக்குள் வைக்கப்படும்.
பெண்கள் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். வெந்தயம் சாப்பிடுவதால் கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மை பலப்படுகிறது. இதனால் பிரசவத்தின் பொது குழந்தை பிறப்பு துரிதப்படுகிறது. வெந்தயம், ட்ரைகோ நெல்லின் என்ற மருத்துவ பொருளை கொண்டுள்ளது. தினமும் கால் ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது.
வெந்தயத்தை தினசரி உபயோகிப்பது கடினமல்ல. இதை பயன்ப்டுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம். உங்களுக்கு முடி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம். அத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த குறிப்புகளை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
முடி கொட்டும் பிரச்னைக்கு வெந்தயம் மிகச்சிறந்த நிவாரணி ஆகும். முடி கொட்டுதல், தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் ஆகியவற்றுக்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இரவு வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் தண்ணீரை வடித்து ஊறிய வெந்தயத்தை அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். சிறிதளவு வெந்தயம் ஊறவைத்தாலே அது பொதும்பி அதிகமாக வந்துவிடும்.
வெந்தயம் இளநரையையும் போக்கக்கூடிய நன்மருந்தாகும். வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. கைப்பிடி அளவு வெந்தயத்தை 300 மி.லி தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை இரவு முழுதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில் குளிக்க வேண்டும்.
குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!
வெந்தயத்தை இரவு முழுதும் நீர் விட்டு ஊறவைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும் . சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு குளிக்க பொடுகுகள் நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வர பொடுகு தொல்லை நீங்குவதை கண்கூடாக காணலாம்.
தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஒரு உள்ளங்கை நிறைய வெந்தயத்தை எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உடன் கலந்து சூடாக்க வேண்டும். இந்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்கு பசை போன்று அரைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் முடி நன்றாக வளரும்.
வெந்தயக் கீரையைக் கொண்டு அவ்வப்போது தயாரிக்கும் பசையைக் கொண்டு தலைக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிப்பதால் தலைமுடி செழுமையாக வளரவும், தலைமுடி நல்ல வண்ணத்தைப் பெறவும், பொடுகுத் தொல்லை ஒழியவும் செய்கிறது. சிறிது வெந்தயத்தை எடுத்து அதை ஆப்பிள் சாறு வினிகரில் ஊற அரைத்து குளித்தாலும் முடி மிருதுவாகும்.
வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால் இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம் என இங்கு காணலாம்.
வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு தினம் இரண்டு முறை முகத்தைக் கழுவுவதற்கு உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையையும் பொன் வண்ணத்தையும் தரும்.
வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கொண்டு ஆவி பிடித்தால் சருமம் சுத்தமாகும். இந்த தண்ணீரை கொண்டு தினமும் முகம் கழுவி வர புத்துணர்ச்சி கிடைக்கும். வெந்தயத்தை ஊர வைத்து அந்த தண்ணீரை பஞ்சில் தொட்டு முகத்தில் அப்ளை செய்து காய்ந்தவுடன் கழுவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து முகத்துக்குத் தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும். வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி விட முகப்பருக்கள் குணமாகும்.
கருவளையம் இருக்கும்போது முகத்தின் அழகே கெடும். இதனை குறைக்க வெந்தயத்தை பேஸ்ட் செய்து கருவளையில் தடவி காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வெந்தயத்தை தூளாக்கி அதனுடன் வைட்டமின் இ கேப்ஸ்யூலை மிக்ஸ் செய்து கருவளையத்தில் இரவு தடவு மறுநாள் காலை கழுவி வர கருவளையம் குணமாகும்.
வெந்தய இலைகளை அரைத்து அந்த கலவையை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் காய்ந்தவுடன் கழுவி வர தோல் ஆரோக்கியம் மேம்படும். கரும்புழுக்கள், சுருக்கங்கள் ஆகியவற்றை குறைக்க வெந்தய பேஸ்டை பயன்படுத்தி வந்தால் தோலின் ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதால் தோல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
வெந்தயத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் தன்மைகள் நமது தோல் வயதான தோற்றத்தை அடைய விடாமல் பாதுகாக்கிறது. வெந்தயத்துடன், தயிர் கலந்து முகத்தில் போடலாம். தயிரில் உள்ள லேக்டிக் ஆசிட் நமது தோலை மென்மையானதாக மாற்றுகிறது. வெந்தய பேஸ்ட்டுடன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் தெரியும் முதுமை தோற்றத்திற்கான அறிகுறிகள் அனைத்தும் தடுக்கப்படும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெந்தயத்தை நமக்கு நலம் தரும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம்.
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான வெந்தயம், உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த்துள்ளது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடாமல். முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் ஊறிய வெந்தயத்தை அப்படியே சாப்பிடலாம். வெந்தயம் ஊறிய தண்ணீரை திணமும் குடித்து வர உடல் சூடு குறையும். முளைகட்டிய வெந்தயம் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது. முளைகட்டிய வெந்தயத்தில் அவ்வளவாக கசப்புத் தெரியாது. அதன் கசப்பு சுவை உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகை மேம்படுத்தவும் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது. வெந்தயத்தை பேஸ்ட் செய்து முடியில் தடவி வர முடி மிருதுவாகும். மேலும் பேன், பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். சரும ஆரோக்கியத்திற்கு குளிக்கும் முன்னர் வெந்தய தூளை தயிர் அல்லது ரோஸ் வாட்டர் போன்றவற்றுடன் மிக்ஸ் செய்து அப்ளை செய்து காய்ந்தவுடன் குளித்து வர சரும ஆரோக்கியம் மேம்படும்.
உடலில் பல பிரச்சனைகளுகு தீர்வு தருவது வெந்தயம். இதுவே இன்று அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப நாம் உணவில் சேர்த்து கொள்ளும் வெந்தயத்தை அதிக அளவு உண்டால் பலவிதமான தீமைகள் ஏற்படுத்தும். வெந்தயத்தை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இங்கே காணலாம்.
வெந்தயத்தில் பல்வேறு மருத்துவ குணங்களை நிறைந்திருந்தாலும் சிலருக்கு வெந்தயம் சாப்பிடுவதால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது. வெந்தயம் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உணர்திறனை அதிகரிக்கும் சக்தி கொண்டது. இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்தயம் சாப்பிடுவதால் எதிர்மனை விளைவை ஏற்படுத்தும்.
சைனஸ் பிரச்னைகளை உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. பொதுவாக ஏதாவது உடல்நலப் பிரச்சினையும் உள்ள ஒருவர் வெந்தயத்தைத் தவிர்க்க வேண்டும் அல்லது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். வெந்தயம் குளிர்ச்சி என்பதால் மூச்சுத்திணறல் அதிகமாக வாய்ப்புள்ளதால் மருத்துவரின் அறிவுறுத்தலின் படியே பயன்படுத்த வேண்டும்.
வெந்தயம் பல மருந்துகளுடன் எதிர்மறையாக தொடர்பு கொள்ளாது. ஆனால் மூலிகையின் சில சேர்மங்கள் மருந்துகளை போன்ற செயல்பாடுகளை செய்யலாம். இதனால் ஏதாவது நோய்க்கு இயற்கை மருத்துவம் எடுத்து வருபவர்கள் வெந்தயம் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இவர்கள் அதிகளவிலான வெந்தயத்தை எடுத்து கொள்ளும் போது தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெந்தயத்தை அதிகம் பயன்படுத்தினால் வாயு தொல்லை பிரச்சனை ஏற்படும். இதனால் கை, கால்கள் மற்றும் முதுகில் வலி ஏற்படும். வாயு தொல்லை இருபவர்கள் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடும் மேலும் உடலில் வாயு அதிகரிக்கும் என்பதால் உணவுக்கு பின்னர் அளவான வெந்தயம் சாப்பிடலாம்.
ஒவ்வொருவரின் தேவையை பொறுத்து அவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு மாறுபடும். அதிக கொழுப்பு உள்ளவர்கள் 10 முதல் 30 கிராம் வெந்தயத்தை தினமும் எடுத்து கொள்ளலாம். பாலூட்டலை அதிகரிக்க விரும்பும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 500 முதல் 1000 மி.கி வெந்தயம் சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தினமும் 2.5 முதல் 15 கிராம் சாப்பிடலாம்.
தினமும் வெந்தயத்தை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் ஒரு நச்சுக்களை வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. எனவே தினமும் அளவுடன் வெந்தயம் எடுத்து கொள்வது பாதுகாப்பானதேயாகும். ஆனால் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்கள் அளவாக எடுத்து கொள்வது நலம்.
வெந்தயத்தை அதிகமாக உட்கொண்டால் அது தோல் வறட்சியை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு, தலைவலி, வீக்கம், வாயு, மற்றும் சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவிலான வெந்தயத்தை எடுத்துக்கொண்டால் பாதிப்புகள் மேலும் அதிகமாகும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான வெந்தயம் சாப்பிடும் போது இருமல், மூச்சுத்திணறல், முக வீக்கம், கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் எப்போதும் என்பதால் கவனம் தேவை.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.