பெண்கள் எப்போதும் அடர்த்தியான மற்றும் அலைபாயும் கூந்தலை மிகவும் விரும்புவார்கள். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு அப்படி அடர்த்தியான கூந்தல் இருப்பதில்லை. முடி உதிர்வு, மிக மெல்லி தலைமுடி (hair), வறண்ட தலைமுடி என்று பல பிரச்சனைகளுடன் இருகின்றனர்.
இத்தகைய பிரச்சனைகளை சரி செய்ய பல முயற்சிகளை நீங்கள் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்றாலும், உடனடி தீர்வாக உங்கள் கூந்தலை அடர்த்தியாகவும், அழகாகவும் ஆக்க வேண்டும் என்றால், இங்கே உங்களுக்காக சில சுவாரசியமான குறிப்புகள்;
pixabay
1. அல்கஹோல் கலந்த பொருட்களை தவிருங்கள்: உங்கள் கூந்தலுக்கு (hair) அடர்த்தியான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக, நீங்கள் பல ரசாயனங்கள் மற்றும் அல்கஹோல் கலந்த பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த பொருட்கள் தற்சமயம் உங்களுக்கு பயன் தந்தாலும், அது சில மணி நேரங்களுக்கு மட்டுமே. மேலும் இதனை தொடர்ந்து பயன் படுத்தும் போது, உங்கள் கூந்தல் உதிர்வு அதிகரிக்கும். இதனால் மேலும் கூந்தல் மெல்லியதாக ஆகும்.
https://www.popxo.com/2019/07/how-to-prevent-pimples-due-to-dandruff-in-tamil/
2. முட்டை: ஒவ்வொரு முறையும் நீங்கள் தலைக்கு குளிக்க செல்லும் முன் முட்டையின் வெள்ளைகருவை நன்கு வேர் முதல் நுணி வரை தேய்த்து, குறைந்தது அரை மணி நேரம் விட்டு விட்டு பின் குளிக்க செல்ல வேண்டும். இப்படி முட்டையின் வெள்ளைக் கரு தேய்ப்பதால், தலைமுடி நல்ல அடர்த்தியான தோற்றத்தை பெறுகின்றது. மேலும் உங்கள் கூந்தலுக்கும் அது போஷாக்கை தருகின்றது. இந்த முட்டை வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து தேய்க்கலாம்.
pixabay
3. வெந்தயம்: உங்கள் தலைமுடி அடர்த்தியான தோற்றம் பெற வேண்டும் என்றால், நீங்கள் வெந்தயத்தை பயன்படுத்தலாம். சிறிதளவு வெந்தயத்தை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வேர் முதல் நுணி வரை தேக்க வேண்டும். பின், சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, தளிக்கு சியக்காய் அல்லது வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பூ தேய்த்து தலைமுடியை அலசவும். அதிக அளவு ஷாம்பூ தேய்ப்பதை தவிர்ப்பது நல்லது.
4. சுடுதநீரில் தலைமுடி அலசக் கூடாது: முடிந்த வரை குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் மட்டுமே தலைமுடியை அலச வேண்டும். அதிகம் சுடு தண்ணீர் பயன் படுத்தி தலைமுடியை அலசினால், அது அடர்த்தியான தன்மையை இழந்து, மிகவும் மெல்லியதாக ஆகி விடும். மேலும், முடி உதிரவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
5. கண்டிஷனர் பயன்படுத்தவும்: நீங்கள் ஒரு தரமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது. இப்படி ஷாம்பூ போட்ட பின்னர், கண்டிஷனர் தேய்த்து தலைக்கு குளிப்பதால், உங்கள் கூந்தல் நல்ல போஷாக்கை பெறுவதோடு அடர்த்தியான தோற்றத்தையும் பெரும்.
குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!
6. தலைக்கு மருதாணி பொடி தேய்த்து குளிக்கவும்: நீங்கள் தலைக்கு குளிக்கும் முன், சிறிதளவு மருதாணியை எடுத்து, அதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறு மற்றும் தேங்காய் எண்ணை சேர்த்து நன்கு கலந்து தலையில் வேர் முதல் நுணி வரை தைத்து அரைமணி நேரமாவது அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசும் போது உங்கள் கூந்தல் நல்ல நிறத்தை பெறுவதோடு, அடர்த்தியான தோற்றத்தையும் பெரும்.
pixabay
7. ட்ரையர்களை தவிர்ப்பது நல்லது: உங்கள் தலைமுடியை (hair) உணர்த்த சூடான காற்றை உண்டாக்கும் ட்ரையர்களை பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இந்த வெப்பம் உங்கள் கூந்தலின் உயிர் தன்மையை குறைத்து, சத்தற்றதாக ஆக்கி விடும். அதனால், இத்தகைய நவீன சாதனங்களை தவிர்த்து, இயற்கையாக தலைமுடியை காய வையுங்கள்.
8. சீப்பை தவிர்க்கவும்: நீங்கள் தலைக்கு குளித்தவுடன், ஈரமாக இருக்கும் தலைமுடியில் சீப்பு பயன் படுத்தி கோவுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது தலைமுடி உதிர்வை அதிகப்படுத்தும். இராமாக இருக்கும் தலைமுடி பலமின்றி இருக்கும். அதனால் எளிதாக கொட்டி விடும். மாறாக உங்கள் விரல்களால் மெதுவாக தலைமுடிகளை கோவி விடலாம். இதனால் தலைமுடிகளுக்கு இடையில் அதிக இடைவெளிகள் கிடைத்து எளிதாக காற்று சென்று, விரைவாக காய வைத்து விடும். மேலும் உங்கள் கூந்தலும் அடர்த்தியான தோற்றத்தை பெரும்.
9. வகுடு எடுத்து தலை கோவ வேண்டாம்: நீங்கள் நெற்றிக்கு நேர் வகுடு எடுத்து தலை சீவாமல், மேல் நோக்கியோ அல்லது எதிர் புறமாகவோ தலைமுடியை கோவும் போது, சற்று அடர்த்தியான தோற்றம் கிடைக்கும். இதனால் உங்களுக்கு அதிக தலைமுடி இருப்பது போன்று தெரியும். இப்படி தலை கோவும் போது உங்கள் முக அழகும் அதிகரிக்கலாம்.
10. இறுக்கமாக பின்னல் போடாதீர்கள்: தலைமுடியை கோவும் போது, அனைத்து முடிகளையும் இறுக்கி பிடித்து பின்னல் போடாதீர்கள். சற்று தளர்வாக, மெதுவாக, பின்னல்களை போடுங்கள். இப்படி செய்யும் போது உங்களுக்கு அதிக அடர்த்தியான கூந்தல் இருப்பது போலத் தெரியும். மேலும் இது உங்கள் அழகையும் அதிகரிக்கும்.
pixabay
11. ஊடகத்தில் வரும் பல பொருட்களை பயன்படுத்தாதீர்கள்: ஊடகத்தில் பல பொருட்கள் கவர்சிகரமாக விளம்பரம் செய்யப்படுகின்றது. அத்தகைய பொருட்களின் உண்மை தன்மையை பற்றித் தெரிந்து கொள்ளாமல், பிறர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பல பொருட்களை பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அத்தகைய பொருட்கள் தரமானதா, உண்மையில் உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முகத்தின் சுருக்கத்தை விரட்டும் முல்தானி மெட்டி!.. எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
12. தினமும் தலைக்கு குளிக்க வேண்டாம்: ஒரு சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். அப்படி தினமும் சரியான பராமரிப்பு இன்றி தலைக்கு குளித்தால், தலைமுடி பலவீனமாகி விடும். இதனால் முடி உதிர்வு அதிகரிக்கும். மேலும் உங்கள் தலைமுடி மெல்லிய தோற்றத்தை பெரும். அதனால் குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் இரண்டு முறை என்று தலைக்கு குளிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது, மேலே கொடுக்கப்பட்ட சில குறிப்புகளையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்க போதுமான நேரமும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் நாளடைவில் உங்கள் தலைமுடியும் நல்ல அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.