முதன் முதலாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஃபாத்திமா பாபு : கண்கலங்கிய தர்ஷன்!

முதன் முதலாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஃபாத்திமா பாபு : கண்கலங்கிய தர்ஷன்!

பிக் பாஸ் (bigg boss) வீட்டில் இருந்து செய்தி வாசிப்பாளரான ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். விஜய் டிவியில் கடந்த 23ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 16 பிரபலங்கள் பங்கேற்றனர். போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என கூறப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். அபிராமி மீரா மிதுன் இடையே சண்டையுடம் தொடங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து கவினின் காதல் லீலைகள் என சுவாரஸ்யமாகவே சென்றது. கவினின் காதல் முதலில் அபிராமியிடம் தொடங்கி வரிசையாக லோஸ்லியா, சாக்‌ஷி என்று சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் டார்க்கெட் செய்யப்பட்டு வந்துள்ளனர்.

காத்திருந்து பழி வாங்கிய சரவணன்.. வச்சு செய்த தர்ஷன்.. காதலில் விழுந்த கவின்.. bigg boss

youtube

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் நாமினேஷன் புராசஸ் தொடங்கியது. அதில் ஹவுஸ் மேட்ஸால் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். அதன்படி கவின், மதுமிதா, மீரா, சேரன், சாக்ஷி, ஃபாத்திமா பாபு, சரவணன் ஆகியோர் எலுமினேஷன் பட்டியலில் இடம் பெற்றனர். அதில் மக்களின் குறைந்த வாக்குகளை பெறும் நபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து ஃபாத்திமா பாபு நேற்று வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் (bigg boss) வீட்டில் இடம்பெற்ற பிரபலங்களில் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டவர் ஃபாத்திமா பாபு. யாரிடமும் சண்டை போடாமல் வீட்டுக்குள் சண்டை நடப்பதையும் விரும்பாமல் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நடந்து கொண்டார். இதனால் ஃபாத்திமா பாபுவுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது.

youtube

ஆனால் இல்லாததை சொல்லி வீட்டிற்குள் பிரச்சனையை ஏற்படுத்தியவர் சாக்ஷி. இதனால் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் முதலில் வெளியேற்றப்படுவார் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரத விதமாக ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் (bigg boss) வீட்டுக்கு உள்ளே செல்லும் முன் கமலஹாசன் கொடுத்த வின்னர் கார்டை உடைத்துவிட்டு வெளியே வந்தார் ஃபாத்திமா. பின் கமலஹாசனை சந்தித்து பிக் பாஸ் வீட்டுக்குள் தனக்கு இருந்த அனுபவம் குறித்து பேசிய அவர், தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் தர்ஷன், லாஸ்லியா ஆகியோ மற்றவர்களுடன் இணைந்து இருப்பதில்லை. அபிராமி, சாக்‌ஷி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் எல்லாம் ஒரே கூட்டணி. சரவணன், எளிமையாக இருக்க விரும்புகிறார்.

கவின், சாண்டி அவரவர் வேலையை மட்டும் பார்க்கிறார்கள் என்று கூறினார். இறுதியில், தலைமைப் பொறுப்புக்கு அபிராமி, தர்ஷன், சாண்டி ஆகியோர் தான் தகுதியானவர்கள் என்று கூறினார். அதாவது, அபிராமி பொறுப்புடன் இருப்பதால் தலைமைப் பண்பிற்கு தகுதியானவர், சாண்டி நகைச்சுவை உணர்வுடன் இருப்பதாகவும், தர்ஷன் இறுதி வரை இருக்க வேண்டும் என்று கூறி மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்து கூறி வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தில் விரும்பம் இல்லை, சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன் : நடிகை ஓவியா அதிரடி!

youtube

ஃபாத்திமா பாபுவை அம்மாவாக நினைத்துக் கொண்டிருந்த தர்ஷன் கண் கலங்கியுள்ளார். இதையடுத்து தொடர்ந்து நடந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சாண்டி, லாஸ்லியா, தர்ஷன், மதுமிதா மற்றும் முகென் ஆகியோர் பாட்டு பாடி அசத்தினர்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், மீரா மிதுன் லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கிறார். மீரா மிதுன் லாஸ்லியாவை பார்த்து நான் உங்களை தோழியாக நினைத்தது என் தப்பு தான் என்று ப்ரொமோ வீடியோவில் கூறியுள்ளார். அதை கேட்ட லாஸ்லியாவோ எனக்கு அனைவருமே நண்பர்கள் தான் என்கிறார். மேலும் மதுமிதா விஷயத்தில் மீரா நடந்து கொண்டது சரியில்லை என்று லாஸ்லியா கூறிவிட்டு இடத்தை காலி செய்கிறார்.

மீரா மிதுன் மதுமிதாவுடன் நெருங்கிப் பழகிவிட்டு ஒரு நிமிடத்தில் அவருக்கு எதிராக திரும்பியது சக போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் லாஸ்லியா அதை மீராவிடம் நேரடியாக தெரிவித்துவிட்டு நடையை கட்டியதை பார்வையாளர்கள் வரவேற்றுள்ளனர். 

காத்திருந்து பழி வாங்கிய சரவணன்.. வச்சு செய்த தர்ஷன்.. காதலில் விழுந்த கவின்.. bigg boss

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.