சந்திர கிரகண நாளில் உடல் உறவை தவிர்ப்பது ஏன்? நாளைய கிரகணத்தை சரியாக எதிர்கொள்ளுங்கள் ..

சந்திர கிரகண நாளில் உடல் உறவை தவிர்ப்பது ஏன்? நாளைய கிரகணத்தை சரியாக எதிர்கொள்ளுங்கள் ..

இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் (eclipse) நாளை இரவு நடக்க இருக்கிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு ஆரம்பித்து விடிகாலை 4.30மணிக்கு கிரகண நேரம் முடிகிறது.

இந்த சமயத்தில் தம்பதிகள் தாம்பத்யம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சாஸ்திர வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது என்றாலும் அதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதும் அவசியம்தான்.

கிரகண நேரத்தில் நிலவின் கதிர்வீச்சுக்கள் மிகவும் அதிகமாக மற்றும் கெடுதலான ஒன்றாக இருக்கும். ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை நாம் கிரகண நேரத்தில் தவிர்ப்பது நன்மை தரும். நம் உடல் நலனைக் காக்கும்.

Youtube

நாளைய கிரகணம் மிக நீண்ட நேரம் நடக்க இருக்கிறது. அதுவும் நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலையில் முடிவதால் பல விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை ,மற்றும் உத்திரம் ஆகியவை. இந்த நட்சத்திரங்களை சார்ந்தவர்கள் பரிகாரம் செய்வது நன்மை தரும்.

கிரகண நேரங்களில் குறிப்பிட்ட சிலர் வெளியே வராமல் இருப்பது உடல் நலனுக்கு நன்மை தரும். சந்திரன் நமது மனதிற்கும் உடல் அழகிற்கும் காரணகர்த்தா ஆனவர் சந்திரன். நீருக்கும் இவர்தான் காரணம் என்பதால் கீழ்கண்டவாறு இந்த நாளில் நடந்து கொள்ள வேண்டும்.

மனநல சிகிச்சை மேற்கொள்பவர்கள் கருவில் குழந்தையை சுமக்கும் தாய்மார்கள் நோய் பாதிப்பு உள்ளவர்கள், கன்னிப்பெண்கள் ஆகியவர்கள் கிரகண நேரத்தில் வராமல் இருப்பது நன்மை தரும்.

Youtube

கிரகண நேரத்தன்று விரைவாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். இரவு எட்டு மணிக்குள் சாப்பிடுவது நல்லது. காரணம் கிரகண ரேகைகள் ஜீரணத்தை தாக்கும். ஆகவே அந்த சமயங்களில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

இவையெல்லாம் தவிர கிரகணம் அன்று நீங்கள் சொல்லும் மந்திரங்களுக்கான பவர் என்பது பல மடங்கு அதிகமாகும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கிறீர்களோ அந்த மந்திரம் 100008 ஒரு லட்சம் முறை ஜபித்ததற்கான பலனை பெற்று மந்திர சித்தி அடைந்து விட இன்றைய நாளில் வாய்ப்பிருக்கிறது.

இதைத் தவிர இன்றைய நாளில் ஆணும் பெண்ணும் கலவி கொள்வது கூடாது என்றும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கருவாகும் உயிரானது பல பிரளயத்திற்கும் பேரழிவிற்கும் காரணமாக இருக்கும் என்பதாலேயே இந்த நாளில் ஆணும் பெண்ணும் உடல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறப்படுகிறது.                           

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                              

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.