கடந்த சில நாட்களாகவே சென்னை நாளிதழ்களின் தலைப்பு செய்திகளில் வாசிக்கப்படுவது சென்னையில் கன மழை என்பதுதான். தினமும் மாலை வேளைகளில் இடியும் மின்னலும் சேர்ந்து சென்னை நகரத்தை விழாக்காலமாக மாற்றி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
கடந்த மூன்று நாட்களாக கனமாகவும் இல்லாமல் மெலிதாகவும் இல்லாமல் சீரான ஒரு வேகத்தில் தொடர்மழை (monsoon rain) பெய்து வருகிறது. இரவெங்கும் மழை பெய்து பகலெங்கும் குளிர் வீசும் ஒரு நகரமாக தற்போது சென்னை மாறி இருக்கிறது.
தனக்குள் காதல் சுமந்து வருவதாலோ என்னவோ மழை என்பது மற்ற எல்லா இயற்கை மொழிகளை விடவும் முதன்மையாக நேசிக்கப்படுகிறது.
சென்னையில் இந்த மழைக்காலத்தில் நீங்கள் உங்கள் காதல் துணையுடன் செல்ல வேண்டிய சில முக்கியமான இடங்களை அறிந்து கொள்ளுங்கள். காதல் துணையை சர்ப்ரைஸ் செய்யுங்கள்!
உறவுகளின் கொண்டாட்டம்.. காதலர்களின் அடைக்கல கூடம்.. உலகின் மிக நீண்ட கடற்கரை மெரீனா !
சென்னை அடையாறில் இருக்கும் தியோசாபிகல் சொஸைட்டி ஒரு குட்டி வனம். யாரும் இயற்கையை நேசிப்பவர்களுக்கான அடையாளம் இந்த இடம். நகரத்தின் சந்தடிகளை விலக்கி நமக்கான நிமிடங்களை நமக்கு தருகிறது. மழைப் பொழுதை உங்கள் காதல் துணையுடன் இந்த அடர்வனத்தில் கொண்டாடுவதை விடவும் சுவையான ரொமான்ஸ் வேறு இல்லை.
சென்னை இளம் காதலர்களின் அடைக்கலமாக ஈசிஆர் பாதையில் இந்த இடம் இருக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும் பொழுதுகளில் உங்கள் துணையுடன் போட்டிங் செல்வது உங்களை இந்த உலகின் மகிழ்வு நிறைந்தவராக மாற்றும். உங்களுக்கு சாகசங்களில் விருப்பம் இருந்தால் நீங்கள் ஒரு நீர் ஸ்கூட்டர் மூலம் இந்த முட்டுக்காடு ஏரியை சுற்றி வரலாம்.
இந்த இடமும் ஈசிஆர் பகுதியில் தான் இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் பெரும்பாலான விஷயங்களை தன்னுள்ளே வைத்திருக்கிறது. இங்கே சென்றால் உங்களுக்கு விருப்பமான கலை மற்றும் இயற்கை இரண்டின் அழகையும் அனுபவித்து மகிழலாம். தனியாக ரசித்து கொள்வதை காதல் துணையுடன் இப்படிப்பட்ட இடங்களை ரசிப்பது உங்கள் காதலை அதிகரிக்கும்.
உங்கள் வாழ்க்கை துணையோடு ஒரு அழகான மழை மாலையை செலவழிக்க மிக சரியான இடம் அமிதிஸ்ட் தான். இயற்கையோடு இணைந்த உணவகம். நகரத்துக்கு நடுவே பூந்தோட்டத்துக்கு இடையே உங்கள் காதல் துணையோடு ஒரு மழைப்பொழுதை பற்றி யோசித்து பார்த்திருக்கிறீர்களா. நினைக்கவே செல்கள் புல்லரிக்கும் இப்படி ஒரு இடத்திற்கு சென்றுதான் பாருங்கள்.
மழை பொழுதுகள் ரிசார்ட்களில் கழிந்தால் அது எப்படி இருக்கும். ஈசிஆர் ரோடில் இருக்கும் MGM டிஸீ வோர்ல்டு ஒட்டியே இந்த ரிசார்ட் இருப்பது ஒரு நல்ல வசதி. கடற்கரையோர ரிசார்ட் என்பதால் அழகான டைனிங் ஏரியா இருக்கிறது. ஒரு திறந்த வெளி டைனிங்.. கடல்.. மழைத்துளிகள்.. உங்கள் காதலை கொண்டாடுங்கள். மழையோடு.
சென்னையின் பிரபல ரூப் டாப் ரெஸ்ட்டாரங்களில் முதன்மையானது அசூரி பே. உணவை சுவைத்தபடியே இயற்கையை அதன் போக்கிலேயே நம்மை ரசிக்க வைக்கும் இடம். இதன் மெனுக்கள் பெரும்பாலும் மெடிட்டரேனியன் இத்தாலிய வகைகளை சேர்ந்தவை என்றாலும் சமீபத்தில் செட்டிநாடு உணவையும் இதன் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். மழைத்தூறல்களோடு மனம் விட்டு பேச அழகான இடம்.
காதல் கிளிகள் மழை நேரத்தில் கூதலுக்கு ஒதுங்க இந்த இடம் பொருத்தமாக இருக்கும். நகரத்தின் மையத்தில் மைலாப்பூரில் இந்த இடம் இருக்கிறது என்பதால் உங்கள் போக்குவரத்து சுலபமாக இருக்கும். உள் அலங்காரங்கள் உங்கள் கண்களை கட்டி போடும். சுவையும் அற்புதமானது. உங்கள் துணையோடு நீங்கள் ஒரு மாலையை கழிக்க விரும்பினால் இந்த இடம் அற்புதமானது .
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.